Archive for March, 2016

பெட்ரோல் பாங்க்ல பெட்ரோல் வாங்கும்போதும் , அளவுகளை எவ்வளவுக்கு எவ்வளவு பார்க்கறீங்களோ அதன் விலையையும் பாருங்க. சில பெட்ரோல் பாங்க்ல , விலையை யாருக்கும் தெரியாமல் ஒரு ரூபாய் , இரண்டு ரூபாய் என்று ஏற்றி விடுகிறார்கள்.

ஒரு முறை ஷெல் பெட்ரோல் பாங்க்ல பெட்ரோல் அடித்தேன் , அங்கு இரண்டு விதமான பெட்ரோல் இருக்கிறது ஒன்று சற்று விலை உயர்ந்த ஷெல் பெட்ரோல் இரண்டாவது நார்மல் பெட்ரோல். நார்மல் பெட்ரோல்தான் அடிக்கச் சொன்னேன், அப்பொழுது ஏதேச்சையாக அன்றைக்கு பெட்ரோல் விலையைப் பார்த்தேன் அது இவர்கள் நார்மல் பெட்ரோலுக்கு வைக்கும் விலையை விட சற்று அதிகமாக இருந்தது விசாரித்ததில் அங்கு வேலை செய்யும் பையன் சொன்னான் ஓனர்தான் அப்டி வைக்கச் சொன்னார் என்று.

இன்னொரு முறை , பாரத் பெட்ரோல் பாங்க்ல பெட்ரோல் அடிச்சேன் அங்கேயும் பெட்ரோல் விலை அதிகமாக இருந்தது விசாரித்ததில் , இது ஸ்பீடி பெட்ரோல் என்று சொன்னார்கள் . அப்டி என்றால் சொல்ல வேண்டியதுதானே  பெட்ரோல் அடிக்க வரும் கஸ்டமர்ட நீங்களே உங்க இஷ்டத்துக்கு எந்த பெட்ரோல் வேணாலும் அடிப்பீங்களா என்று கேட்டேன். தலை குனிந்து கொண்டார்கள்.

பெட்ரோல் அடிக்க வருபர்கள் அவசரமாக  வருவார்கள் அல்லது ப்ராண்ட் நேம் பார்த்து வருவார்கள்  எதனையும் கவனிக்க மாட்டார்கள் என்று அனைவரும் நினைத்துக் கொள்கிறார்கள். சிலர் கவனிக்காத பொழுது அடிக்கும் பெட்ரோல்லேயே குறைத்து விடுகிறார்கள்.ஆகவே நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கொலையை விட வேறு ஜாதி காதல் அவமானமா?!

மகளின் வேறு ஜாதி காதல் திருமணத்தால்   உறவினர்கள் என்னை கேவலமாக பேசினார்கள். என்னால் கோவில் விழா உள்பட வெளியே எங்கேயும் செல்ல முடியவில்லை. இது எனக்கு அவமானமாக இருந்தது- கௌசல்யாவின் தந்தை வாக்குமூலம்

செய்தி:ஒரு தந்தையின் வாக்குமூலம்

Thanks Dinamani

 

 

image

Vanakkam! NewTamilStudies-“TheStateOfMedia In TN” on Mar19, from 5.30pm to 8pm with Sr.Jn.BabuJaykumr at Panuval Book Store, Thiruvanmiyur. All are invited!

Here we present you a weekend planner comprising of lake cleanups, candle light march, cleanup after dark. So, let your friends know where are you going! 😄

1) –  Lake Cleanup by Environmentalist Foundation of India on March 19th. Volunteer for India & her Environment With EFI. POC –  9677097824 – Time – 7 a.m. to 10 a.m. Locations – Adambakkam, Tiruneermalai and Keezhkattalai.

2) – Lake Cleanup by Environmentalist Foundation of India on March 20th. Volunteer for India & her Environment With EFI. POC –  9677097824 – Time – 7 a.m. to 10 a.m. Locations – Arasankazhani, Perumbakkam and Sithalapakkam.

3) – Candle Light March to protest against the death of all the students at Besant Nagar Beach, opposite KFC on March 20th starting at 4 p.m.

4) – Cleanup After Dark – an initiative by Thuvakkam on March 21st at 9 p.m. in Mylapore. Come, Be a part of Clean Change. POC – 9789958042 – Register right away at http://bit.ly/Tmclpad

Invite your friends, share this post, just volunteer!

#JustVolunteer ! 😋

#படிக்கட்டுகள்

நாளை மறுநாள் உலக கதை சொல்லல் தினம் 🙂
#படிக்கட்டுகள் அமைப்பு நண்பர்கள் NMR குழந்தைகள் இல்லத்திற்க்கு சென்று குழந்தைகளுக்கு கதைகள் சொல்ல இருக்கிறோம் 🙂

நம்முடன் நவீன்,பூபதி,கலகல வகுப்பறை சிவா கதை சொல்லிகளாக இணைகிறார்கள் 🙂
வாய்ப்பிருப்பின் நண்பர்கள் கலந்து கொள்ளலாம் 🙂

#படிக்கட்டுகள்
#உலக_கதை_சொல்லல்தினம்
#மதுரை

நாள் : 19-03-2016
இடம் : NMR குழந்தைகள் காப்பகம்
அரசு சட்டக் கல்லூரி எதிரில்,
மதுரை.

தொடர்பு எண்:
9677983570, 9788682544

2016 சட்டமன்ற தேர்தலுக்கான லோக்சத்தா கட்சியின் தேர்தல் அறிக்கை:

3) #வேளாண்மை

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் #விவசாயி தற்கொலை, டிராக்டர் வாங்கியதற்கு வங்கிக்கு வட்டி கட்ட முடியாத விவசாயி மீது காவல்துறை தாக்குதல் போன்ற விவசாயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை நாம் விவசாயிகள் பழி வாங்கப்படுகிறார்கள் என்பது போல உணர்ச்சிகரமான பிரச்சனையாக பார்கிறோமே ஒழிய ஏன் விவசாயியால் கடன் கட்ட முடியாமல் போனது? விவசாயம் ஏன் லாபகரமான ஒரு தொழிலாக நம் நாட்டில் இல்லை? என்பது போன்ற தீர்வு நோக்கிய அறிவார்ந்த கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை.

நம் மேலோட்டமான சிந்தனையில் விவசாயம் லாபமீட்ட முடியாத ஒரு தொழில், எல்லா விவசாயிகளும் ஊருக்கெல்லாம் சோறு போட தங்கள் வாழ்வை தியாகம் செய்கிறார்கள் என்பது போலவும், விவசாயம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் நகரமயமாதலும், விவசாயத்தில் தொழில்நுட்ப வளர்சிகள் மற்றும் பெரும் தொழிற்சாலைகள் ஆகியன விவசாயத்திற்கு எதிரான ஒன்று என்பது போலவும் பலவாறான கருத்துக்கள் உள்ளன.

உண்மையில் நம் நாட்டில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான தீர்வு பல்முனை நோக்கோடு அணுகப்பட வேண்டும். பல்வேறு முன்னேறிய நாடுகளில் கையாளப்படும் உக்திகளை நாம் கையாள வேண்டும். இதற்கு லோக்சத்தா கட்சி அளிக்கும் தீர்வுகள்:

1. உழவர்களுக்குத் தங்கள் விளைபொருட்களின் விலையை நிர்ணயம் செய்வதில் முழுச் சுதந்திரம் அளிக்கப்படும்.

2. விற்பனை வலயத்தில் இடைத்தரகர்களின் பங்கைக் குறைத்து, உழவர்களுக்கும் நுகர்வோர்க்கும் உள்ள இடைவெளி குறைக்கப்படும். இதனால் உழவர்களுக்கும் நுகர்வோருக்கும் விரும்பும் வகையில் பொருட்களின் விலை அமையும்.

3. மட்கும் விளைபொருட்களான காய்கறி மற்றும் பழங்கள் வீணாவதைக் கட்டுப்படுத்த, முறையான போக்குவரத்து, குளிரூட்டப்பட்ட கிடங்குகள், பதபடுத்துதல் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும்.

4. வேளாண் தொழிற்சாலைகள் அமைக்கப்பெற்று, விளைபொருட்களுக்கான குறைந்த பட்சக் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுவதன் மூலம், சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்படும்போது, உழவர்கள் பாதுகாக்கப்படுவர்.

5. ஒவ்வொரு 3000 ஏக்கர்களுக்கும் ஒரு வேளாண்சாலை அமைக்கப்பெற்று, தரமான விதைகள், வேளாண் கருவிகள், விற்பனை ஏற்பாடுகள், இலவச மண் பரிசோதனை, இலவச கால்நடை சேவைகள் எல்லா நேரமும் அளிக்கப்படும்.

6. ஒவ்வொரு உழவருக்கும் கூட்டுறவு மற்றும் வர்த்தக வங்கிகளில் கணக்கு உருவாக்கப்பட்டு, எளிமையான முறையில் கடனுதவி பெற வழி செய்யப்படும்.

7. பயிர்ச் சாகுபடியைப் பெருக்கிட, உழவர்களுக்குப் புதுத் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கப்படும்.

8. மரபணு மாற்ற விதைகள்: மரபணு மாற்றப்பட்ட விதைகள் பாதுகாப்பானதா இல்லையா என்பதை அறிவியலாளர்களே முடிவு செய்ய வேண்டும். அவ்விதைகளின் மூலம் பெறப்படும் சாகுபடி கூடியுள்ளதா இல்லையா என்பதை உழவர்களே முடிவுசெய்வர். அவர்கள் இவ்விதைகளைப் பயன்படுத்த விழைவார்களேயானால், எந்தச் சட்டத் தடையுமின்றி அது அனுமதிக்கப்படும்.

#லோக்சத்தா_தேர்தல்_அறிக்கை

இணையம் – http://tn.loksatta.org/
லோக்சத்தாவை முகநூலில் தொடர – https://www.facebook.com/loksattapartytn/
லோக்சத்தா வாட்ஸ்அப் எண் – 9791050511