Archive for August, 2016

#கபாலி_2

Posted: August 31, 2016 in Trends
Tags:

​இங்கே #கபாலியைப் பார்ப்பதில் பிரச்சினை இல்லை;கபாலியை கம்பீரமாய்ப் பார்ப்பதில்தான் பிரச்சினை போல 🙂

தூணிலும் துரும்பிலும்
இருந்த #இறைவன்
சேரிகளிலும்
இருந்தார்!!

தோஷம் இருந்ததாய்த்
தெரியவில்லை!
கடவுள் சந்தோஷமாகவே இருந்தார்
அதே அமைதியான புன்னகையுடன்!!

மதம்,மொழி,நாடு
போன்ற செயற்கை
எல்லைகளை கடந்த
ஓர் அன்பு
#அன்னைதெரசா!!

பணமும் , அதிகாரமும்
சட்டத்தை
சிறை படுத்திவிட்டது!!

1.காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா.. தமிழகம் தொடர்ந்த வழக்கு..சுப்ரீம் கோர்ட்டில் செப். 2ல் விசாரணை!

மோடி வர்றார்!
அமித்ஷா வர்றார்!
இவ்வளவு ஏன்
இமய மலைல இருந்து கங்கையே
போஸ்ட் ஆபீஸ்ல வருது!
இங்க இருக்க #காவிரி வரமாட்டேங்குது!!

2.#கல்வித்_தந்தைகள் எல்லாம் கண்காணிக்கப் படும் நேரமிது!

புதிய தலைமுறை டிவி நடுநிலையானதா என சோதிக்கும் ஓர் தருணம் இது!

3.சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் ஜெயலலிதா: பேரவைத் தலைவர் ப.தனபால் பாராட்டு!

அவதூறு வழக்கில் சுப்ரீம் கோர்ட் விசாரணை : தமிழக அரசுக்கு கண்டனம்!

இரண்டுக்கும் இடையே உள்ள #6_வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கவும்!!

4.இதுவரை திமுக மீது 85 வழக்குகளும், தேமுதிக மீது 48, ஊடகங்கள் மீது 55, காங்கிரஸ் மீது 7, பாமக மீது 9 உள்ளிட்ட 213 #அவதூறு_வழக்குகள் போடப்பட்டுள்ளன!

5.#ஒலிம்பிக்கிற்காக மத்திய அரசு #100கோடி செலவு!!

#வாட்டர்_பாட்டில் வாங்க காசு இல்லையேப்பா!

6.டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா!

மாப்ள இவருதான் ஆனா ?!

7.தனி ஒரு விளையாட்டு வீரருக்கு குடிக்க தண்ணீர் தரவில்லையெனில் , விளையாட்டு அமைப்பை கேள்விக்கு உட்படுத்துவோம்!!

8.#மின்மிகை_மாநிலத்தில் நிலவின் வெளிச்சமா?!

9.எதுக்குங்க இந்தக் குழப்பம்?! #சட்டப்_பேரவை #நிகழ்வுகளை #தொடர்_நேரலையில் விட்டுவிட்டால் மக்களே பார்த்து தெரிந்து கொள்ளப் போகிறார்கள்!!

10.பிரான்ஸின் உயரிய #செவாலியர் விருது!

வாழ்த்துக்கள் #திரு_கமல்ஹாசன்

கலையைப் போற்றுவதில் என்றுமே #பிரான்ஸ் கெத்துதான்!

உன் மேலுதடும்,கீழுதடும்
இருவேறு பொருள் தருவதால்
#ஹைக்கூவா?!

பெரியார் தன்னைப் புனிதன் என்றோ, கடவுளின் மறு பிறப்பு என்றோ, கடவுளில் இருந்து வந்தவன் என்றோ,தான் மட்டுமே உயர்ந்தவன் என்றோ சொல்லிக் கொண்டதில்லை! அப்படிச் சொல்லிக் கொண்டவர்களை விட பெரியார் செய்த சமூக மாற்றங்கள் பெரியது!அவர் விமர்சனத்துக்கு உள்ளாவதில் அவரே கவலைப் பட்டதில்லை!

இப்படி இருக்க அவர் சொன்ன கருத்துக்களை வேறு திசையில் திருப்பி விட்டு அவர் என்ன காரணத்திற்காக சொன்னார் என்பதை ஆராயாமல் இருக்கச் செய்வது , அவரின் பிறப்பு ,அவரின் திருமணம் என அவர் சார்ந்த தனி மனித தாக்குதல்களை இன்று வரை செய்வதை என்னவென்று சொல்வதெனத் தெரியவில்லை!

 

​காற்றும்,இசையும் உன் கவிதைகளை வாசித்துக் கொண்டே இருக்கும்!

#நா_முத்துக்குமார் #RipNaMuthukumar

#ஆழ்ந்த_இரங்கல்

​#வட்டியும்_முதலும் தொடரில் இருந்துதான் #ராஜுமுருகன் என்பவரைத் தெரியும்.
 அவருடைய படைப்புகள் எல்லாம் எதார்த்தமானது!!
சினிமா என்பது வாழ்க்கைக்கு அருகில் என்று நம்பப்படுவது இது போன்ற சில படைப்புகளால்தான்!
ஜோக்கர் நம்மை பிரதிபலிக்கும் 🙂 🙂
#ஜோக்கர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

​கண்டெய்னர்ல போற பணம் பாதுகாப்பா போகுது 🙂 ரயிலில் போற பணம் மட்டும் காணாம போகுது:-) 🙂
#ரயில்_திருட்டு #கண்டெய்னர்_பணம்