Archive for the ‘Trends’ Category

​இங்க ₹500 ரூபாய்க்கே #சில்லறை தரமாட்டாங்க,இதுல ₹2000 ரூபாய் வேற!
பிள்ளைக்கு பலூன் வாங்க காசு இல்லையாம்,ஆட்டக்காரிக்கு ₹200 ரூபாய் அன்பளிப்பு கொடுப்பாராம் பஞ்சாயத்து!!
#புதுநோட்டு #கறுப்புப்பணம்

​ஒரு 2000 ரூபாய் நோட்டை வைத்து #செல்பி எடுங்கைய்யா! நாலஞ்சு சேர்ந்தா #லாட்டரிசீட்டு மாறியே இருக்கு!!

​நாளை முதல் ஏடிஎம்.களில் புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம்
Updated: November 10, 2016 10:12 IST
டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கியிலிருந்து பழைய ரூபாய் நோட்டுகளை அப்புறப்படுத்துவதற்காக நேற்று தயார் நிலையில் இருந்த வாகனங்கள்.| படம்: பிடிஐ
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக் கையாக பழைய 500, 1000 நோட் டுக்கள் செவ்வாய்க்கிழமை நள் ளிரவு 12 மணி முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை குறைக்க வெள்ளிக்கிழமை முதல் ஏடிஎம்களில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சக செயலர் அசோக் லாவாசா கூறும்போது, ‘‘பழைய நோட்டுக்களை வாபஸ் பெறுவ தால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றார். அதற்கான மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. புதிய ரூபாய் நோட்டுக்கள் நிரப்பப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் ஏடிஎம்கள் முழுமையாக செயல்படத் தொடங்கி விடும். ஒரு சில இடங்களில் நாளையே (இன்று) ஏடிஎம்கள் திறக்கப்படும்’’ என்றார்.
தலைமை பொருளாதார ஆலோ சகர் அர்விந்த் சுப்ரமணியன் கூறும்போது, ‘‘ஊழல், கள்ள நோட்டு, கருப்பு பணம் ஆகிய வற்றுக்கு எதிராக மத்திய அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் இதற்கான பலன் தெரியவரும்’’ என்றார்.
Copyright ©2016, தி இந்து

Published: Thu, 10 Nov 2016
இன்று முதல் இந்தியாவில் உள்ள வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தரப்பட்டு வருகின்றன. அதுகுறித்து பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் இவை.
வழிமுறைகள்
· வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற முதலில் அங்கு வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
· பூர்த்திசெய்த படிவத்துடன் அடையாள அட்டை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
· ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், என்ரிகா, பான் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளில் ஒன்றை சமர்பிக்கலாம்.
· ஒருவர் அதிகபட்சமாக 4,000 ரூபாய் வரை பழைய நோட்டுக்களை கொடுத்து புதிய நோட்டுக்களை பெற்று கொள்ளலாம்.
· நவம்பர் 18 ஆம் தேதி வரை ஏ.டி.எம்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.
· நவம்பர் 19 ஆம் தேதியிலிருந்து இது 4,000 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது.
· ஒரு நாளைக்கு காசோலை மூலம் 10 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க முடியும். ஆனால், ஒரு வாரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுவீர்கள்.
· காசோலை மூலம் 20 ஆயிரம் ரூபாயை எடுத்துவிட்டால் அதன் பின் ஏ.டி.எம் பயன்படுத்த முடியாது.
· வங்கிகளுக்கு நேரிடையாக செல்ல முடியாத நிலையில், உங்களுடைய ஒப்புதல் கடிதத்துடன் பிரதிநிதி ஒருவரை அனுப்பலாம்.
· வங்கியில் அந்த பிரதிநிதி, ஒப்புதல் கடிதத்துடன் அவருடைய அடையாள சான்றுகளை சமர்பிக்க வேண்டும்.
· டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் நோட்டுக்களை மாற்ற முடியாதவர்கள், அதன் பின், ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் குறிப்பிட்ட சில கிளைகளில் இந்த நோட்டுக்களை மாற்றிக் கொள்ள முடியும்.
Copyright ©2016, தி இந்து

​இன்றிலிருந்து நாம் அனைவரும் பெறும் *புதிய ரூபாய் நோட்டுகளில் எழுதுவதை நிறுத்துவோம்* தயவுசெய்து இந்திய மக்கள் அனைவரும் இந்த பழக்கத்தை கடைப்பிடிப்போம்.

#shared

​சீக்கிரம் #பேங்கைத் திறங்க பாஸ் இல்லாட்டி இங்க #பச்சைக்_கலர் #2000_ரூபாய் நோட்டுக்களை #ஸ்டிக்கரோட அடிச்சு வெளியிட ஒரு குரூப் காத்துகிட்டு இருக்கு!!

blackmoney_vs_india

Posted: November 10, 2016 in Trends
Tags:

​2016-கருப்புப் பணம் ஒழிப்பு!
2026-ரோஸ் கலர் பணம் ஒழிப்பு!
2036-ஏதோ ஒரு கலர் பணம் ஒழிப்பு!

​புதுசா வர நோட்டுல ஏதோ #சீப்பு இருக்காமே?! #எண்ணெய்யும் கொடுத்தா தலை சீவிக்கலாம்!

#ரூபாய்நோட்டுக்கள்_1000_500
http://www.news18.com/news/tech/rbi-dismisses-rumours-of-gps-enabled-rs-2000-notes-1310033.html

​#புலிகேசி:வீரரே! இங்கு வாரும்,என் கேள்விக்கு பதில் சொல்லும்.
வீரன்:கேளுங்கள்,மன்னா!
புலிகேசி:#நோ_ஷேவ்_நவம்பர் என்றால் என்ன?
#வீரன்:நவம்பருக்கு எப்படி மன்னா ஷேவ் பண்ண முடியும்?
புலிகேசி:கிராதகா! மன்னரிடமே கேள்வியாீ?!