Archive for the ‘கவிதைகள்’ Category

தீர்வு கிடைக்கவேண்டி
தீயிட்டுக் கொண்டாயோ?
உரத்துக் குரல் கொடுக்க
தமிழ் உணர்வைத் தாங்கும்
இந்த உடல் வேண்டாமா?!

தீ தான் தீர்வென்று
முடிவுக்கு வந்தது ஏனோ?
உடல் இன்றி
உயிரேது?
உயிர் இன்றி
உணர்வு ஏது?
உணர்வின்றி போர்க்குணமேது?

இதை உணர்ந்து வா!
மீண்டு(ம்) வா!
நலம் பெற்று
எழுந்து வா!

வந்தாரை வாழ வைக்கவாவது
தமிழன் வாழ வேண்டாமா?!

#கேன்_வாட்டர் குடிக்க ஆரம்பிச்ச பிறகு
நிலத்தடி நீர் , ஆற்று நீர் மறந்து போனது!

#பீட்சா_பர்கர் சாப்பிட ஆரம்பிச்ச பிறகு
அரிசியும், விவசாயமும் மறந்து போனது!

#அரசியல் என்பது
தேர்தலோடு முடிந்து விடுகிறது!

#தல_தளபதி தெரியும்
தல காவேரி தெரியாது!

#வெள்ளம் வந்தாதான்
நதியே ஞாபகம் வருது!

#போராட்டம் என்பது
சமூக வலைதளத்தோடு முடிந்து விடுகிறது!

​ஆத்திகனும்

நாத்திகனும்

கடந்து செல்ல

இன்னும் மூன்று

தினங்களில் 

ஆறு கடல்

செல்ல பக்குவமடைந்திருந்தார்

#பிள்ளையார்!

தூணிலும் துரும்பிலும்
இருந்த #இறைவன்
சேரிகளிலும்
இருந்தார்!!

தோஷம் இருந்ததாய்த்
தெரியவில்லை!
கடவுள் சந்தோஷமாகவே இருந்தார்
அதே அமைதியான புன்னகையுடன்!!

மதம்,மொழி,நாடு
போன்ற செயற்கை
எல்லைகளை கடந்த
ஓர் அன்பு
#அன்னைதெரசா!!

பணமும் , அதிகாரமும்
சட்டத்தை
சிறை படுத்திவிட்டது!!

உன் மேலுதடும்,கீழுதடும்
இருவேறு பொருள் தருவதால்
#ஹைக்கூவா?!

​எக்காலத்தையும்

முப்பால் கொண்டளந்த

#திருவள்ளுவரை

#குமரியிலே

முக்கடல் சூழ்ந்து 

தினம் வாழ்த்த!

அங்கே வந்து 

சங்கமமானது கங்கை!!!

காலமும் , கங்கையும் 

கடலும் அறியும்

அறியாத நீவீர் யாரோ?!

முற்றுந் துறந்த உமக்கு

இன்னும் விடாது

துரத்துவது எதுவோ?! என்னவோ?!

கேட்கத் தயாரெனில்?
அட்சயப் பாத்திரத்தின்
அமுதம் போலே
கதைகளுக்குக் குறைவில்லை
இந்தக் குழந்தைகளின் உலகினிலே!

படங்கள்: கூகிள்

மனிதனுக்கு ஆசை
எந்த ரூபத்திலும் வரலாம்!
அது இப்பொழுது
பருப்பு ரூபத்தில்!!
விலை உயர்வாய்!!!