Archive for October, 2016

#செந்தில்பாலாஜி

மீண்டும் செந்தில் பாலாஜி!
ஆமா தேர்தலை எதுக்காக ஒத்தி வச்சிருந்தாங்க?!
#ஜனநாயகம் 

#ஜனநாயகம் ஏன் #கம்யூனிசத்தைப் பார்த்து பயப்பட வேண்டும்!
எங்கோ இடிக்குதே!!
#தனிப்படை!

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிக்பாக்கெட் திருடர்களைப் பிடிக்க தனிப்படை!
அடடே! எப்படிப் படிச்சாலும் பொருள் தருதே!!
பா.ஜனதா செயற்குழு

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்: பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்துட்டாங்களா?!
#தீபாவளி

#தீபாவளியை முன்னிட்டு #ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயம்! மினிமம் ஜஸ்ட் ரூபாய் 750 மட்டுமே!!

ஆம்னியில் போனால் அரசனும் ஆண்டியாவான்!
#வாழ்த்துக்கள் சாந்தி!

10 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு தடகள வீராங்கனை சாந்திக்கு அரசுப் பணி

#பிசிசிஐ

சர்வதேச அளவில் 900 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி: #இந்தியா புதிய சாதனை
#பிசிசிஐ இருக்கும் வரை இந்த எண்ணிக்கை எல்லாம் எங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி!

#செருப்பு

ஒரு செருப்பு மட்டும் காணோம்னா
கண்டிப்பா நாய் எடுத்திருக்கும்.ரெண்டு
செருப்பும் காணோம்னா கண்டிப்பா எந்த நாயோ தான் எடுத்திருக்கும்.

#shared

Status credits:Sathyaseelan Rajendran

Thanks: Anand Manoharan

#கார்ப்பரேட் வெடி

#கார்ப்பரேட் வெடின்னு ஒன்னு இருக்காம் எங்க?யாரால்?எப்படி பத்த வெச்சாலும் நல்லா புகை கக்கிதான் வெடிக்குமாம்.
#சு.சா வெடி

சு.சா வெடின்னு ஒன்னு இருக்காம் அது பற்ற வெச்சாலே சுற்றுச் சூழலுக்கும் சுத்தி இருக்கறவங்களுக்கும் கெடுதலாம்.
#காவிரி_மேலாண்மை_வாரியம்

#காவிரி_மேலாண்மை_வாரியத்திற்கு முட்டுக்கட்டை போடும் #மத்தியஅரசிடம், பிரச்சனையைத் தீர்க்க என்ன திட்டம் வைத்துள்ளது என #நீதிமன்றம் எழுத்துப்பூர்வ அறிக்கை வாங்கலாமே?!
#ஜாதி

#இந்தியா தவிர வெளிநாடுகளில் #ஜாதி என்ற ஒன்று இல்லை,அங்கேயும் நம்மாளுங்க #ஜாதி_சங்கத்தை வச்சிருக்காங்க! வெளிநாட்டுக்காரன்ட்ட என்னனு சொல்லி வச்சிருப்பாங்க?!

#ரெமோ

#ரெமோ #சிவகார்த்திகேயனைப் போல #ரோபோ_சங்கரின் ரேமோ கெட்டப்பையும் #ரஜினி பாராட்டலாமேமேமே!
#ஆம்னி பஸ்கள்

#ஆம்னி பஸ்கள் கூடுதலாக ஒரு பைசாகூட வசூலிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்
பூரா நோட்டாவே வாங்கிக்கறாங்க ஜட்ஜய்யா!!

மொழி

Posted: October 22, 2016 in எதிரொலி
Tags:

‘ம்’ என்றிருப்பது, வாய்மூடி, ஏதும் ஒலியெழுப்பாமல், பேசாமல் இருத்தலைக் குறிப்பது. வாய்மூடி, உதடு ஒட்டி எழுப்பும் ஒலியும் ‘ம்’ மட்டுமே ஆகும். இப்படி வாய்மூடிக் கிடத்தலை ஒழித்தால் மட்டுமே ஏனைய ஒலிகளை ஒலித்துப் பேசமுடியும்.
எனவே, ‘ம்’ஐ ஒழித்தால், ம் + ஒழி = மொழி தோன்றும். அவ்வாறே, மொழிவது மொழி எனப்பட்டது.

#Shared

Thanks:Christo Ambrose

மத சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் மதிக்கும் நாடு இந்தியா என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அறிவுக்கு புறம்பான பாகுபாடு காட்டும் நடவடிக்கைகள் மத சுதந்திரத்தில் சேர்ந்தது அல்ல. இந்த நடைமுறைகளைப் பாதுகாக்க முடியாது’ என்று #தலாக் குறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்!

#ஜாதி என்பது ஏழாம் அறிவோ?

காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, சரி… உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா? என்ற தங்கள் கட்டுரை தி ஹிந்து தமிழ் நாளிதழில் படித்தேன்.

எங்கெல்லாம் உரிமை இருக்கிறதோ? அங்கெல்லாம் உரிமைகளைப் பற்றிப் பேசும் தகுதியும், தேவைப்பட்டால் போராட வேண்டிய துணிவும் சேர்ந்தே இருக்கும்!

வாய்க்கால்களை தூர்வாருதல்,மணல் கொள்ளை பற்றி //வழிநெடுகிலும் புதர் மண்டிக் கிடந்தது. இடையிடையே மணல் கொள்ளையர்களின் சூறையாடலைச் சொல்லும் பெரும் பள்ளங்கள். காய்ந்து கிடந்த ஆற்றில் தண்ணீர் தென்பட்ட இடங்கள் அத்தனையும் கழிவுகள் கலக்கும் முகவாய்கள். ஆலைக் கழிவுகள், ரசாயனக் கழிவுகள், ஊர்க் கழிவுகள். இவை அத்தனையோடும் புது வெள்ளம் ஒன்றிக் கலக்கிறது. ஆற்றுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான சேதத்தை மூடி நிறைக்கிறது-சமஸ் கட்டுரையில் இருந்து// சொல்லி தமிழக அரசையும் சேர்த்தே குற்றம் சாட்டிய நீங்கள்,எந்த இடத்திலும் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு இந்திய கூட்டாச்சியின் அங்கமாக விளங்கும் நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவதில் காட்டும் மெத்தனத்தையும்,சட்ட அவ மதிப்புகளையும் சொல்ல உங்களுக்கு பக்கம் போதவில்லையா இல்லை மூடி மறைத்து விட்டீர்களா?

அசாமின் நீர் மேலாண்மையைப் பற்றி சொன்ன நீங்கள்,இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கிடையே எப்படி நீர் பகிரப்படுகிறது என்பதையும் சேர்த்தே சொல்லி இருக்கலாமே?

கல்லணை பற்றி சொல்லிவிட்டு, அது எப்படிச் செயல்படுகிறது என்பதை சொல்லாமல் விட்டது மறந்து போனதாலா இல்லை,இந்த தலைமுறையிடம் இருந்து மறைத்து விட்டீர்களா என்ற சந்தேகத்தை ஆச்சர்யத்தோடு எழுப்புகிறது உங்கள் கட்டுரை.

ஒருவேளை தமிழ் நாடு மேலிருந்து கர்நாடகத்திற்கு நீர் வழங்காது போனால் தமிழர்கள் கர்நாடகாவிற்காக தமிழ்நாட்டில் போராடி இருப்பார்கள்!

நீர் மேலாண்மை என்பது ஒட்டு மொத்த உலகத்திற்கே பிரச்சனையாக இருக்கும் பொழுது நீங்கள் தமிழ்நாட்டை மற்றும் குறை சொல்லி சமரசம் செய்ய வேண்டிய மத்திய அரசைப் பற்றி ஒன்றுமே சொல்லாதது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல இருக்கிறது.

கர்நாடகம் இன்றைக்குக் கிட்டத்தட்ட பதினைந்து மடங்கு சாகுபடிப் பரப்பை அதிகரித்திருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அவர்கள் காலத்தே பின்தங்கி இப்பொழுதுதான் முன்னேறுகிறார்கள் என்று சொல்வது முரணாகவும்,நாம் அதை தடுக்கிறோம் என்று சொல்வது அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

//காலத்தே யார் முன்னேறியவர்களோ அவர்களுக்கான முன்னுரிமை என்றும் தொடர வேண்டும் என்ற நியாயத்தைத் தமிழகம் போன்ற ஒரு சமூகநீதி மாநிலம் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பேச முடியும்?// என்ற இதே கேள்வியை இந்தியாவில் வியாபித்துள்ள அதிகாரம் மற்றும் ஜாதிய கட்டமைப்புகளில் உங்களால் எழுப்ப முடியுமா?

மூன்றாம் உலகப்போர் ஒன்று நிகழுமானால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற வைரமுத்து அவர்களின் மேற்கொள்படி, காவிரி போன்ற ஒரு முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் நீர் மேலாண்மைக்கு குரல் கொடுக்கும் நீங்கள் அதன் மீதான நம் உரிமைகளுக்கு சற்றே உரத்து குரல் கொடுங்களேன்.அதே வேளையில் காவிரி மீதான தமிழக வரலாற்றை உங்கள் எழுதுகோளால் அழித்து விடாதீர்கள்,ஒரு வகையில் அதுவும் ஓர் இன அழிப்பே!

நன்றி!

இப்படிக்கு,

காவிரியில் எங்களுக்குமான உரிமை பற்றி பேச தகுதியுள்ள தமிழர்களில் ஒருவன்!

சமஸ் கட்டுரை

காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, சரி… உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா?

Thanks: The Hindu Tamil

 

கலாம்

எல்லோரும் கனவை கானல் நீராகப் பார்க்க
கனவை நம்பிக்கையாய்ப் பார்த்தவர் நீங்கள்!
#HBDAbdulKalam
ரெயில் பயணம்
சாதாரண பயணியைப் போல் #ரெயில் பயணம் செய்த கேரள முன்னாள் முதல்வர் #உம்மன்_சாண்டி!
#மோடி அவர்களும்தான் சாதாரணமாக #விமானத்தில் பயணம் செய்கிறார்!

காவிரி_பிரச்சினை

#காவிரி_பிரச்சினை: அமைச்சர் ஓ.பி.எஸ். உடன் மு.க.#ஸ்டாலின் திடீர் சந்திப்பு
#எதிர்க்_கட்சித்_தலைவரிடம் இதைத்தான் #தமிழகமும் எதிர்பார்த்தது!

செல்போன்

#செல்போன்களுக்கு இனி #11இலக்க_எண்கள் அறிமுகம்..!
செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதையொட்டி, 10 இலக்க எண்களை அளிப்பதில் செல்போன் நிறுவனங்களுக்கு பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எனவே 11 இலக்க எண்களை விரைவில் அறிமுகப்படுத்த போவதாகவும் தொலைதொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருக்காதா பின்னே! வீட்ல இருக்க நாய்க்குட்டி , பூனைக்குட்டி பேர்ல எல்லாம் சிம் வாங்கினா?!

ஊழல்
#காமன்வெல்த்_ஊழல்: விசாரணை விவரம் வெளியிட மறுப்பு
இதுக்கு ஒரு #ஆபரேஷனும் நடக்கமாட்டிங்குதே!

ஆம்னி_பேருந்து
#ஆம்னி_பேருந்துகளில் அதிக கட்டணமா? 1800 425 6151 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
#மிஸ்டு_கால் கொடுத்துட போறீங்க! #விலை_இல்லா #இலவச அழைப்புதான்

சிவகார்த்திகேயன்
#அழுகை என்றாலும் #சிவகார்த்திகேயன் போல அழ வேண்டும்! அந்தக் கண்ணீர் “#விலை”மதிப்பில்லாதது!!
பொறுப்பு_ஆளுநர்
#பொறுப்பு_ஆளுநர்னா அவருக்கு பொறுப்பு இருக்குமானு கேட்கறாங்க!
பொறுப்பான கேள்விதான்!
ரெமோ
அப்போ #ரெமோ க்கு #ஆஸ்கார் கிடைக்காதா?
ஆஸ்கார் என்ன #ரேசன்_கடை #அஸ்க்காவா?

ஸ்டேட்டஸ்

வாழ்க்கைலதான் உன் #ஸ்டேட்டஸ் என்ன என்னனு கேட்டுக் கொல்றங்கன்னா? #வாட்ஸ்அப்லயுமா?!
யாராவது டெய்லி ஒரு ஸ்டேட்டஸ் கடன் கொடுங்கப்பா!!

ரங்கராஜ்பாண்டே
#ரங்கராஜ்பாண்டே பக்கத்தை எல்லோரும் #ரிவ்யூ பண்றீங்களே?
அதுதான் இன்னைக்கு #ட்ரெண்டா?!
#ஆங்ரி_பேர்ட் கேம் விளையாடின மாறியே இருக்கே!
பாரதீய_ஜனதா
தமிழ்நாட்டு நலனில் தொடர்ந்து அக்கறையோடு செயல்பட்டு வருபவர் தமிழ் மாநில #பாரதீய_ஜனதாக்_கட்சித் தலைவர் மரியாதைக்குரிய திருமதி. #தமிழிசை அவர்கள்.
தோனி
#கோலியின் அறிவுரையை அதிகம் பயன்படுத்துகிறேன்: #தோனி
இப்படிச் சொல்வதற்கும் ஒரு பெருந்தன்மை வேண்டுமே!