Archive for February, 2016

மக்களாட்சியில் தேர்தல் மக்களுக்கு மட்டுமே உரியது. அது ஒரு சமூக விழா. அதை இத்தனை காலம் முழுமையாக மக்கள் கையில் எடுக்காத்தால் இன்று தமிழக அரசியல் மார்கட் போன சினிமாக்காரர்கள் மீண்டும் மேக்கப் போடும் இடமாக இருக்கிறது.
தேர்தல் என்ற மாநிகழ்வு லட்சக்கணக்கான சுதந்திர போராட்ட தியாகிகளின் வியர்வை இரத்தம் உயிரின் பலன். அதில் வோட்டு போடுவது மட்டும் நம் கடமை என்று தவறாக சித்திரிக்கப்படுகிறது. வேட்பாளர் தேர்வில் ஆரம்பித்து யார் பதவிக்கு வந்தாலும் அவர்களை கேள்வி கேட்பதில் தொடர்கிறது குடிமகனின் கடமை. கடமை தவறினால் என்ன விளைவு என்பதைத்தான் தற்போது அநுபவித்துக் கொண்டு இருக்கிறோம்! மீண்டும் ஒரு முறை கடமைகள் தவறுவதற்கு நம் ஏழைகளும் குழந்தைகளும் தாங்க மாட்டார்கள். நல்ல பிரதிநிதிகளை தேடுவோம், நிறுத்துவோம், அவர்களுக்குப் பிரச்சாரம் செய்வோம்,யார் வென்றாலும் அவர்களை தொடர்ச்சியாக கண்காணிப்போம்.
வேறு எந்த வழியிலும் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியாது!  முழுவீச்சில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவது மூலம் மட்டுமே நல்வாழ்வு கிடைக்கும்! அதற்கு இப்போது விட்டால் அடுத்த 5 வருடங்கள் வாய்ப்பு கிடையாது!

Source: whatsapp
Thanks: subathra

2016 தமிழகத் தேர்தல் கருத்துக் கணிப்பில் நீங்களும் பங்குபெற , இதோ இங்கே கொடுக்கப் பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து அதில் உள்ள கேள்விகளுக்கு உங்கள் விருபத்தை பூர்த்தி செய்யவும்!

2016 தமிழகத் தேர்தல் கருத்துக் கணிப்பு

வாழையை நீங்க விருந்துல பார்த்து இருப்பீங்க!
விழால பார்த்து இருப்பீங்க!
நம்பிக்கையின் விதையா பார்த்து இருக்கீங்களா?!
அடுத்த தலைமுறையின் கல்வி வழிகாட்டியா பார்த்து இருக்கீங்களா?!

ஆம் வாழை என்ற தன்னார்வ அமைப்பைப் பற்றி கேள்வி பட்டு இருக்கறீர்களா?! இல்லை என்றால் , அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா ?மேற்க் கொண்டு படிக்கவும்!
vazhai_1
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் கல்வியில் முன்னேறி உள்ள மாவட்டங்களுள் ஒன்று, தருமபுரி கொஞ்சம் பின் தங்கி உள்ள மாவட்டம். இரண்டு மாவட்டங்களிலும் கல்வியில் பின் தங்கிய கிராமங்கள் உள்ளன.வாழை! விழுப்புரம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கல்வியில் பின்தங்கிய கிராமங்களிலுள்ள முதல் தலைமுறை கல்வி பெரும் குழந்தைகளின் கல்விக்காக பயணிக்கும் தன்னார்வ குழு (ஸ்ரீ ரங்கநாத் பதிவுகளில் இருந்து).

குழந்தைகளின் அண்ணன்,அக்கா ஆகவே பயணித்து , அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கிறது வாழை. ஒரு தலைமுறை ஆர்வலர்கள் மட்டும் இல்லாமல் வாழையடி வாழையாக சீனியர்களை பின்பற்றி அவர்களுக்குப் பிறகும், அவர்களுடன்  பல புதியவர்களையும் இணைத்துக் கொண்டு இந்தப் புரட்சியை பேனர் வைத்து கொண்டாடாமல்! சத்தமில்லாமல் செய்து வருகிறது வாழை!

6ம் வகுப்பு படிக்கும் சென்னை போன்ற ஒரு நகர குழந்தைக்கும், சென்னையிலிருந்து மூன்று நான்கு மணிநேர பயண தூரத்தில் உள்ள கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கும் இருக்கும் வித்தியாசங்கள் நம்முள் பல கேள்விகளையும், பதில்களையும் தேடுவதை மறுக்க முடிவதில்லை..கல்வி முறையின் குறைபாடுகளா? இல்லை கல்வியை சமமாக எல்லாதலங்களுக்கும் எடுத்து செல்வதில் நம் குறைகளா? என்பது விடுகதை தான்! (ஸ்ரீ ரங்கநாத் பதிவுகளில் இருந்து).

குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தர வேண்டும் என்பதனை தன்னிச்சையாக முடிவெடுக்காமல், அவர்களோடு பயணித்து அவர்களின் நிலையை உணர்ந்து கொண்டு ,அதற்க்கு ஏற்றால் போல திட்டமிடுவதில் மட்டும் அல்ல இந்த நேரத்திலும் அதை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டு இருக்கும் வாழைக்கு ஒரு சபாஷ்!!

பல நிலையில் உள்ள குழந்தைகளின் உளவியல் தன்மைகளை , அதே துறையில் சிறந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு நன்கு திட்டமிட்டே பயணிக்கிறது வாழை. இரண்டு நாட்கள் அவர்களுடனே தங்கி இருந்து பள்ளிப் பாடங்கள்,செயல்வழிப் பாடங்கள், திறனறியும் வகுப்புகள், வாழ்க்கைத் திறன் பயற்சி, கலை,    அறிவியல்,விளையாட்டு என  அனைத்தையும் சொல்லித் தருகிறது வாழை. இந்த இரண்டு நாட்களிலும் அவர்களின் அறிவுப் பசியை மட்டும் அல்லாது வயிற்றுப் பசியையும் சேர்த்தே நிரப்பி விடுகிறது வாழை.

கடிதமே காணாமல் போய்விட்ட இந்தக் காலத்தில் போனில் மட்டும் அல்லாமல் குழந்தைகளுடன் கடித வழியிலும் , அவர்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவர்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றனர் வாழை தன்னார்வலர்கள்.

“ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்”.

என்ற பாரதியின் வாக்கினை வாழை மெய்பித்துக் கொண்டிருக்கிறது!

வாழையடி வாழை

வாழையென்பது வெறும் வார்த்தை இல்லை, அது ஓர் வாழ்க்கை! வாழையுடன் பயணிப்போம்!!

If you wish to join as a mentor/supporter => Volunteer/Contribution Form

மேலும் தகவல்களுக்கு : http://www.vazhai.org/

 

படங்கள்: ஸ்ரீ ரங்கநாத் ப்ளாக், vazhai.org

விஜயகாந்த் ‘கிங்’ ஆவதைவிட ஜெயலலிதா ‘குயின்’ ஆக தொடர்வதே நல்லது என்று சொன்னவர் யார்?

அதிமுக பொதுச் செயலாளர் அம்மா அவர்களுக்கு வைக்கப் பட்ட பேனர்களில் இருந்து சில வரிகள்!
பூமணம் கொண்டவரே!
ஸ்டாலின் அவர்களுக்கு வைக்கப் பட்ட பேனர்களில் இருந்து சில வரிகள்!

தமிழகத்தின் இருளை விலக்க வந்த சூரியனே!
நமக்கு நாமே பயணத்தை வெற்றிகரமாக நடத்திய நாயகரே!

நாளைய முதல்வரே!

வருங்கால தமிழ்நாடே!

அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு வைக்கப் பட்ட பேனர்களில் இருந்து சில வரிகள்!

அன்புமணி என்கிற நான் !

 

* மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்
* அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி
* அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும்
* ஆடுமாடு மேய்த்தல் , விவசாயம்அரசு பணி… ஊதியம் குறைந்த பட்சம் 30000
* 4 மணி நேர செய்வழிக்கல்வி .. 4 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி
* மெக்காலே கல்வி முறை ஒழிப்பு
* இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி
* ஒவ்வொரு குடும்பங்களிலும் நாட்டு மாடு வளர்க்க ஆணை
* விவசாயம் சார்ந்த மரபு வழி தொழில்களுக்கு மட்டுமே அனுமதி
* பெருவணிக நிறுவனங்களுக்கு தடை
* தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி
* அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்
*10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும்
*,சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுகாக்கும் மரங்கள் நட்டப்படும்
* புதியதாக காடுகள் வளர்க்கப்படும்
* 1கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும்
* தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு அறிவிக்கப்படும்
* கோவில்களில் சமசுகிருதம் படித்தால் தேசத்துரோகம்
* அந்நியர்கள் தொழில் தொடங்க தடை
* விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும்
* தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடி நீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்
* தண்ணீர் விற்கத்தடை
* கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை
* இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும்
* கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும்
* நகர் மயமாக்கல் தடுக்கப்படும்
* அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கசெய்யப்படும்
*அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது
*அணுஉலைகள் முற்றாக மூடப்படும்
* பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும்
* வரதட்சணைக்கு தடை
* பூரண மதுவிலக்கு அமல்
* மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல்
* எல்லை பாதுகாப்பு படை உருவாக்கம்
* மீனவர் பாதுகாப்பு படை
* மேலும் தமிழ் நாட்டின் அனைத்து பகுதியிலும் முப்பாட்டன் முருகன் கோவில் அமைக்கப்படும்
* திருக்குறள் தேசிய நூல் அறிவிக்கப்படும்…
* அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீடெடுத்து வளர்க்கப்படும்
* தொழூப்புகுத்தல் (சல்லிக்கட்டு) தேசியத்திருவிழாவாக அறிவித்து ,7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும்
*தைப்பூசத்திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும்
* காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக ,மாதம் 30000 ருபாய் வழங்கப்படும்
* கைய்யூட்டு வாங்கினால் உடனடுயாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்
* கைய்யூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும்
* பிற மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்க தனி அமைச்சகம் அமைக்கப்படும்.

Source: Whatsapp

Source: Whats app

ஹலோ அண்ணா நான் அடையார்ல இருக்கேன் உங்க கடைக்கு எப்டிணா வரனும்?

எந்த தெருல இருக்கீங்க ?

தெரிலணா போஸ்டரா ஒட்டிருக்கு தெரு பேர் தெரில

ஓ சரி என்ன போஸ்டர் ?
பாரத தாயே னு போட்ருக்கு ..

ம் அப்டியே மூணு போஸ்டர் தாண்டி வந்தா காவேரித்தாயேனு போட்ருக்கும் அதுக்கு எதிர்ல பாரதி கண்ட புரட்சிப்பெண்ணேனு ஒட்டிருக்கும் அதுல நேர வரனும்.. அப்பறம் அங்கேந்து எட்டாவது போஸ்டர் நீதி தேவதையேனு இருக்கும் அங்கேந்து …

அண்ணா போதும் நா அங்க வந்து call பன்றேன்

சரி ஓகே

(வண்டில அங்க போய் சேர்ந்தவுடன்)
அண்ணா வந்துட்டேன் இப்போ சொல்லுங்க

ஓ வந்துட்டியா இப்போ லெஃப்ட் எடு அங்கேந்து 2 போஸ்டர் தாண்டுனா வருங்கால முதல்வரேனு மூனு வேறவேற கட்சி போஸ்டர் போட்ருக்கும் அங்கதான் நம்ம கடை
வாசல் ..

சரிணா ..

(ஓரே குழப்பம் திருப்பி call பன்னேன் )
அண்ணா தொடர்ந்து 6 போஸ்டர் வருங்கால முதல்வரேனு போட்ருக்குனா மண்ட காயிது கொஞ்ச வெளில வர முடியுமா ப்ளீஸ் ..

என்னது அதுக்குள்ள இன்னும் மூணா!!!!!!

சரி வரேன்…..நீ அங்கேயே நில்லு.

Source: Whatsapp

===============================
“ஏழுதமிழர் விடுதலை – உச்சநீதிமன்ற மறுப்பு
தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூல் வெளியீடு !
பிப்ரவரி 28 அன்று சென்னையில் நடக்கிறது!
===============================
தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தும், அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், தமிழ்நாடு அரசின் அதிகாரங்கள் குறித்தும் சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, “ஏழு தமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூலின் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், பிப்ரவரி 28 (28.02.2016) அன்று, சென்னையில் நடைபெறுகின்றது.

28.02.2016 அன்று மாலை 5.30 மணியளவில், சென்னை கே.கே. நகர் அண்ணா சாலையிலுள்ள சாலை மகா மகால் அரங்கத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை ஏற்கிறார். திரு. செ. அருட்செல்வன் அண்ணல் தங்கோ, வடசென்னை த.தே.பே. செயலாளர் தோழர் பா.க. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்க சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன் வரவேற்புரையாற்றுகிறார். பாவலர்கள் முழுநிலவன், பிரகாசு பாரதி ஆகியோர், “தூக்கைத் தூக்கிலிடுவோம்” என்ற தலைப்பில் பாவீச்சு நிகழ்த்துகின்றனர்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொதுச் செயலாளர் இயக்குநர் திரு. ஆர்.கே. செல்வமணி, நூலை வெளியிட இயக்குநர் வெற்றிமாறன் முதற்படி பெற்றுக் கொள்கிறார்.

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. செல்வராஜ், இயக்குநர் வெற்றிவெல் சந்திரசேகர், தொழில் முனைவோர் திரு. தாரை. மு. திருஞானசம்பந்தம், தமிழின உணர்வாளர் புலவர் இரத்தினவேலவர், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கச் செயலாளர் திரு. நெடுமாறன், ஊடகவியலாளர் திரு. கார்டூனிஸ்ட் பாலா ஆகியோர் சிறப்புப் படி பெறுகின்றனர்.

தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் கருத்துரையாற்றுகிறார். சென்னை உயர் நீதிமன்ற வழங்கறிஞர் திரு. அஜய் கோஷ், பேரறிவாளன் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மையார் ஆகியோர் நூல் திறனாய்வுரையாற்றுகின்றனர்.

நிறைவில், நூல் ஆசிரியரும் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் கவிபாஸ்கர், நிகழ்வை நெறிப்படுத்துகிறார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் நன்றி நவில்கிறார்.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

====================
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
====================

Source: Whatsapp