Archive for April, 2016

2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து திமுக தலைவர் கருணாநிதி ஞாயிறன்று 72 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் மதுவிலக்குச் சட்டம் நடைமுறைப்படுத்தும் என்பதை முதலில் அறிவித்தார்.

பிறகு விவசாயத்துக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, துரைமுருகன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மதுவிலக்கை அமல்படுத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்,.

மதுவிற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்படும்.

மதுவிலக்கு இழப்பை ஈடுகட்ட உரிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு.

மதுவுக்கு அடிமையானோருக்கு சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு.

விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை மற்றும் சிறு, குறு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

ஏரிகளைத் தூர்வார ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வெள்ளத்தினால் ஏற்படும் சேதத்தை தடுக்க ரூ.5,000 கோடி.

அனைத்து ரக விதை நெல்லுக்கும் முழு மானியம்.

மகளிருக்கு 9 மாதம் பேறுகால விடுப்பு அளிக்கப்படும்.

கல்விக் கடன் தள்ளுபடி

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படும்.

மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்.

பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியருக்குக் ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும்.

ஆட்டோ வாங்குவதற்கு அரசு ரூ.10,000 மானியம் வழங்கும்.

முதியோர் உதவித்தொகை ரூ.1,300 ஆக உயர்த்தப்படும்.

பட்டதாரிப் பெண்கள் கலப்புத் திருமண உதவித் தொகை ரூ.60,000 மற்றும் 4 கிராம் தங்கம்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

நெசவாளர் வீடுகட்ட ரூ.3 லட்சம் மானியம் அளிக்கப்படும்.

மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.

மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.

முதியோருக்குக் கட்டணமில்லா பயணச் சலுகை.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.

விசைத்தறிக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

நெல்கொள்முதலுக்கு ஆதார விலை ரூ.2000 என்று நிர்ணயிக்கப்பட்டு ரூ.2,500 வரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தந்தை பெரியார் பிறந்தநாள் பகுத்தறிவு தினமாக கொண்டாடப்படும்.

பட்டாதாரிகள் சுயதொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடரும்.

அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு அமைக்கப்படும்.

ஏழை மக்கள் வசதிக்காக அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு போன்ற குடும்ப அட்டை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

மதுரை முதல் தூத்துகுடி வரை தொழிற்சாலைகள் நிரம்பிய நெடுஞ்சாலை.

மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை.

அனைத்து மாணவர்களுக்கும் 3ஜி/4ஜி இணையதள வசதி செய்து தரப்படும்.

மீனவர் சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும்.

தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமேலவை கொண்டு வரப்படும்.

சென்னையை அடுத்த வண்டலூரில் துணை நகரம் அமைக்கப்படும்.

நியாயமான விலையில் மணல் விற்பனை செய்யப்படும்.

அரசுப்பள்ளிகளில் உள்ள 54,233 வேலைக்காலியிடங்கள் நிரப்பப்படும்.

வசதியில்லாதவர்களுக்கு சலுகை விலையில் கைபேசி வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம்.

ஊரக வேலைவாய்ப்புக் கூலி ரூ.100லிருந்து ரூ.150ஆக அதிகரிக்கப்படும்.

தொடக்கப்பள்ளி சத்துணவில் பால் சேர்க்கப்படும்.

பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்.

பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

வெள்ளத்தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.

Thanks:தி ஹிந்து தமிழ்

முதலாவதாக மது விற்பனையின் நேரம் குறைக்கப்படும்
சில்லறைக் கடைகள், பார்கள் குறைக்கப்படும்
மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்
இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை அடைவோம்

அதெப்படி மக்கள் நலக் கூட்டணியில் தமாகா சேரலாம்? பீட்டர் அல்போன்ஸ் கொந்தளிப்பு

சென்னையில் குவியும் அதிருப்தியாளர்கள்: இன்று தேமுதிக போட்டி கூட்டம் !

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா தொகுதிப் பங்கீடு அறிவிப்பு

அதிமுக மீண்டும் ஆட்சியமைத்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்: ஜெயலலிதா உறுதி

‘ஓட்டுக்கு பணம் தரமாட்டோம்’ வாக்குறுதியை கட்சிகளிடம் இருந்து தேர்தல் ஆணையம் பெற வேண்டும்: ராமதாஸ்

அதிமுகவை தோற்கடிக்கும் மனநிலையில் ஆர்.கே.நகர் மக்கள் இருக்கிறார்கள்: ஸ்டாலின்

முதலாவதாக மது விற்பனையின் நேரம் குறைக்கப்படும். சில்லறைக் கடைகள், பார்கள் குறைக்கப்படும். மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை அடைவோம்-முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

சென்னையில் குவியும் அதிருப்தியாளர்கள்: இன்று தேமுதிக போட்டி கூட்டம் !
அது ஞாயிற்றுக் கிழமை கறி வாங்க வந்த கூட்டமா இருக்கும்யா!!

எப்படியாவது ஒரு கலை நிகழ்ச்சியோ இல்ல கிரிக்கெட் போட்டியோ வச்சு இந்த மாசம் இன்டர்நெட் பில்ல கட்டிடணும்!

தேர்தல் வெற்றிக்கு ஒவ்வொருவரும் ஸ்டாலினைப் போல உழைக்க வேண்டும்: திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்
தொண்டன் : “நமக்கு நாமே” திட்டம் பற்றி சொல்றாரோ ?!

சமக நிர்வாகிகள் 6 பேர் நீக்கம்: சரத்குமார் நடவடிக்கை!
இருந்தாலும் நீ ரொம்ப தைரியசாலிப்பா! கவுண்டமணி மைண்ட் வாய்ஸ்!,,

நேரில் ஆஜராக மே இறுதி வரை அவகாசம் கோரும் ‘தலைமறைவு’ விஜய் மல்லையா!
இவர் விஜய் மல்லையா தான ?! தவறுதலா தலைவாசல் விஜய்ன்னு படிச்சுட்டேன்!!

தமிழகத்தில் இயற்கை வளம் கொள்ளை போகிறது: சீமான் குற்றச்சாட்டு
என்னது இயற்கை வளம் கொள்ளை போகிறதா?!

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தமாகா!
பஞ்ச பாண்டவர்கள் என்றால் 5 பேருதான? கணக்குல இடிக்குதே ?!

‘ஜன்தன் யோஜனா’ திட்டத்துக்கு கிராமங்களில் அதிக வரவேற்பு: தமிழகத்தில் 79 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடக்கம்
வங்கிக் கணக்கு இருக்கு ஆனா அதுல பணம் இல்லையே?!

இம் மண்பால்
இயற்கையின்பால்
மக்கள்பால்
தாம் கொண்ட அன்பால்
அவர்தம் உயரிய மாண்பால்
என்றும் நமை ஆழ்வார்
‪#‎நம்மாழ்வார்‬!!

April6-நம்மாழ்வார் பிறந்த நாள்

Thanks: Google image & Jeeva for pic