Posts Tagged ‘Chennai’

image

Chennai NEXT அங்கீகரிக்க,அலச,அடுத்து நிகழாமல் தடுக்க ஆயத்தமாகும் தளம்!

சென்னை நெக்ஸ்ட் என்ற பெயரில் தன்னார்வலர்கள் , தன்னார்வலர்கள் சார்ந்த குழுக்கள் ஒருங்கிணையும் ஒரு நிகழ்வு இன்று(ஜனவரி 10)குருநானக் கல்லூரி  வேளச்சேரியில் நடந்தது.  சென்னை பெருமழையில் தொண்டுள்ளம் புரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் இது போன்ற பல நிகழ்வுகள் கடந்த ஒரு சில வாரங்களாக சென்னை முழுவதும் நடந்த வண்ணம் உள்ளது.

அதில் ஒரு நிகழ்வாக சென்னை நெக்ஸ்ட் நடந்தது. தோழன் அமைப்பு , சட்டப் பஞ்சாயத்து அமைப்பு, லோக்சத்தா கட்சி போன்றவை சேர்ந்து நடத்திய நிகழ்வாய் இது இருந்தாலும் , மற்ற அமைப்பின் உறுப்பினர்களையும் , மற்ற அமைப்பையும் , தனி தன்னார்வலர்களையும் அங்கீகரிக்கத் தவறவில்லை என்பதை இங்கே சொல்லியே ஆக வேண்டும். அந்த வகையும் இந்த 3 அமைப்புகளுக்கும் ஒரு  சபாஷ்!

இந்த நிகழ்வில் பங்கேற்கக் காரணமாய் இருந்தது அதன் எளிமை. மிகப் பெரிய விளம்பரமாய் இல்லாமல் இயல்பாய் இருந்தது. இதில் பங்கேற்ற விருந்தினர்களும் எளிமையாய் இருந்தார்கள், உடையில் மட்டும் அல்ல நடந்து கொண்ட விதத்திலும். மற்ற விழா போல VIP க்கள் , கலந்து கொண்டவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் ஒன்றுதான் , எல்லோரும் VIP தான் என்பது போல அவ்வளவு எளிமை, எல்லோருக்கும் ஒரே மாதிரியான இருக்கை வரிசை அமைந்து இருந்தது சிறப்பாக மட்டும் இல்லாமல் வித்தியாசமாகவும் இருந்தது.

இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள் என சொல்லப் பட்டது,
1. வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட தன்னலமற்ற தன்னார்வலர்களை அங்கீகரிப்பது.
விழாவில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட  தன்னார்வலர்களை, குழுக்களை அங்கீகரித்தார்கள். சொன்னதைச் செய்தார்கள்!!

2. இதோடு நில்லாமல் அடுத்து என்ன செய்வது? இது போல நிகழாமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என அலசி அதற்கான செயல் திட்டம் வகுப்பது.
விழாவில் சில செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டது அதன் தொடர்ச்சியாக அடுத்து சில கூட்டங்கள் நடக்க இருப்பதாய்க் கூறினார்கள்.

விவாதிக்கப் பட்ட பல விசியங்களில் சில,
1.வெள்ள நிவாரண பணி கணக்கெடுப்பை நியாமாக நடத்த கண்காணிப்பது, உதவி செய்வது.
2.சென்னையின் அந்த அந்த வார்டுகளை அந்த அந்த மக்களே சிறு குழுக்களாக நிர்வகிப்பது.
3.குப்பை மேலாண்மை, ஆக்கிரமிப்புகள் அகற்றம்,மழை நீர் சேகரிப்பு மையங்கள் பற்றிய விழிப்புணர்வு , செயல்திட்டம்.
4.வாக்காளர் பெயர் சேர்த்தல், ஓட்டளிப்பதை உறுதி படுத்துதல்  மற்றும் விழிப்புணர்வு.
5.லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு/லஞ்சமில்லா சேவைக்கு உதவி.

விழா விருந்தினர்களில்
டாக்டர். ஜெயபிரகாஷ் நாராயன் அவர்கள் முன்னாள் ஐ. ஏ. எஸ் அதிகாரி
(மற்றும்)
திரு. இளங்கோ ரங்கசாமி அவர்கள் விஞ்ஞானி,குத்தம்பாக்கம் கிராம பஞ்சாயத்து தலைவர்

இவ்விருவரின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பும் , இளங்கோ அவர்களிடம் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி விரைவில் அனைவரையும் சென்றடைந்துவிடும் ஆனால் மாற்றம் என்பது நிகழ கொஞ்சம் காலம் தேவைப்படும் ஆனால் நம்மால் முடியும் என்று ஊக்கம் தரும் விதத்தில் ஜெயபிரகாஷ் நாராயன் அவர்களும் , இளைஞர்கள் திறமைசாலிகள் அவர்களுக்கு எங்கள் அலோசனை , வழிகாட்டுதல் என்றும் உண்டு என்று முன் மாதிரி கிராமத்தை உருவாக்கிவரும் , அய்யா அப்துல் கலாம் அவர்களின் நண்பருமான இளங்கோ அவர்கள் பேசினார்கள்.

அய்யா இளங்கோவிடம் உங்கள் ஊருக்கு வந்து உங்களைச் சந்திக்கலாமா என்றும் , உங்கள் முன்மாதிரி கிராமத்தை பார்க்கலாமா என்றும் கேட்டேன். நிச்சியமாக என்றார்!

அதோடு இளங்கோ என்று கூகிளில் தேடுங்கள் நாங்கள் செய்தது பற்றியும், எங்கள் கிராமம் பற்றியும் தகவல் கிடைக்கும் என்றார் மிக எளிமையாக!

விழா நாட்டு வாழ்த்தோடு ஆரம்பித்தது அதுவும் தமிழில்! சென்னை மழைக்கு உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப் பட்டது.

மொத்தத்தில் இது விழா போன்று இல்லை சாதாரண மக்கள் கூடிய ஒரு நிகழ்வாக இருந்தது, நிறைவாய் இருந்தது!

#ChennaiNext

ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் அண்ணாவிற்கு நன்றி!

இரண்டு மாதங்கள் கடந்தது , மூர்த்திக்கு கம்பெனியில் இருந்து மெயில் வந்தது , இந்தமுறை உடனடியாக வேலைக்கு வந்து சேர வேண்டும் என்றும் , ட்ரைனிங் சென்னையில் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. உடனடியாக தனது சீனியர்க்கு கால் செய்து “அண்ணா ! ஒரு நல்ல செய்தி , கம்பெனியில் இருந்து மெயில் வந்து ஜாயின் பண்ணச் சொல்லி! “என்றான் .

ஹேய்! கன்கிராட்ஸ் ! எப்ப , என்ன வரும் என்று தெரியாது இதுதான் IT !” என்று பஞ்ச் அடிச்சார் சீனியர் ராஜ்! கூடவே எங்கு போவது , தங்குவது ,என்ன சொல்லித் தருவார்கள் போன்ற விவரங்களைச் சொன்னார்.

தேங்க்ஸ் அண்ணா ! சென்னை போயிட்டு உங்களுக்கு கால் பண்றேன் என்று சொல்லி, போன் காலை கட் செய்தான். அடுத்து அவன் நண்பன் கார்த்திக்கு அந்தத் தகவலைச் சொல்லும் பொழுதே ,அவனுக்கு கிருத்திகா நியாபகம் வந்தது.

அட ! இந்த கிருத்திகா நம்பர் கொடுத்து இருந்தால் சொல்லி இருக்கலாம், இந்த பொண்ணுங்க நம்பர் வாங்கி அப்டி என்ன பண்ணிட போறோம்! நான் நம்பர் கொடுத்தும் இந்த பொண்ணு ஒரு மெசேஜ் கூட பண்ணலயே ,அட பிரண்ட்ஸா கூட பழக மாட்டங்களோ  என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

ஒரு ஞாயிறு அன்று கோவையில் இருந்து சென்னைக்கு பேருந்து ஏறினான்! ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து , அப்படியே சென்னைல வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்று நினைத்தவாறே போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான், அப்படியே தூங்கி விட்டான்.

பேருந்து சேலம் வந்த பொழுது , விழித்துக் கொண்டவனுக்கு ஆச்சர்யம்! ஆமாம் அவன் மொபைல்ல ஒரு மெசேஜ் வந்து இருந்தது.

ஹாய் , இது கிருத்திகா!

அவ்வளவுதான் , வேற எந்தத் தகவலும் இல்லை!

இந்த பொண்ணுங்க !எப்பவும் இப்படியா , இல்லை இப்பத்தான் இப்படியா ? ஒரு கால் பண்ண மாட்டாங்களா?என்று சொல்லிக் கொண்டே கால் செய்தான்!  மொபைல் ரிங் சத்தம் பக்கத்தில் கேட்பது போல் இருந்தது!ஆமாம் , கிருத்திகாவும் அதே பேருந்தில் இரண்டு சீட்ஸ் தள்ளி தனது தோழியுடன் அமர்ந்திருந்தாள்!

நம்மாளுக்கு இது கனவா , நினைவா என்றே தெரியவில்லை! பஸ்ஸை விட்டு தனியே பறந்து கொண்டிருப்பதைப் போல ஒரு பீலிங்க்ஸ்!!

மீன்கள் நீந்தும்,காத்திருங்கள்!!

படங்கள்: கூகிள்

முந்தைய பதிவிற்கு

கண்ணாடித் தொட்டிக்குள், பல வண்ண மீன்கள்#2