Posts Tagged ‘TN’

தமிழ் நாட்டுல கலவரம் என்று சொன்னீங்க பாருங்க அப்பவே தெரிஞ்சுது,
நேரா வெளிநாட்டுல இருந்துதான் வறீங்கன்னு!!

#காவேரி #காபலியாய் இருந்திருக்கலாம்!
விவாதமாவது நடந்திருக்கும்!!

#கம்யூனிஸ்ட்_கட்சியா? அப்டினா?!

Kerala U R Great!

‘பெங்களூருவில் வசிக்கும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து பாதுகாப்புடன் வந்துசேரும் வகையில் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்’ என்று ரயில்வே அமைச்சகத்திடம் கேரள அரசு கோரியுள்ளது.

கேரள முதல்வர் தவிர, மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி, வி.எம். சுதீரன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா ஆகியோரும் கர்நாடக முதல்வரிடம் மலையாளிகளின் பாதுகாப்பு குறித்தும், அவர்களை அனுப்ப சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கேரள காவல்துறை, மலையாளிகள் கேரளத்துக்குத் திரும்பப் பயணிக்கும் சாலைகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கர்நாடகாவின் மாண்டியாவுக்கு, 100 காவலர்களை அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஒருவேளை #காவிரி நீரை #புனிதம், #புண்ணியம் என்று சொல்லி இருந்தால் மத்திய அரசே நமக்கு #போஸ்ட்ஆபீஸில் கிடைக்க உதவி செய்திருக்கும்!

காவிரி நீரை! #வாழ்வாதாரம் என்றல்லவா சொல்லி விட்டோம்!

புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி, சமஸ்கிருதம் எல்லாம் அப்புறம் கொண்டுவாருங்கள் முதலில் “நதி நீர் இணைப்பும், அதற்கான திட்டங்களும். கடலுக்கு செல்லும் நீரின் அளவை பற்றிய விழிப்புனர்வையும்” கொண்டு வாருங்கள்!!

கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்து எப்படியோ ஓசூர் வந்து அங்கே காத்திருக்கும் மக்களுக்கு அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல கூடுதல் பேருந்துகளை தமிழக அரசு இயக்க வேண்டும்!

#RequestToTamilNaduTransportation

 

அன்பு! வளம்!! வளர்ச்சி!!!

நிலையான ஆட்சி! நிரந்திர வளர்ச்சி!!

தமிழகமே எனது குடும்பம்!
தமிழ்நாடு மக்களே எம் பிள்ளைகள்!!
தமிழ்நாட்டு மக்களின் நலனே என் நலன்!!!

#100வது_நாளில்_படித்தது!

#தமிழினத்தின் #ஒப்பற்ற_தலைவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், யார் குரல் குடுப்பது என்பதில் சற்றே குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம்!!

தேச பக்தரும், சுதந்திரப் போராட்ட வீரரும், இலங்கைத் தமிழர் விசயத்தில் ராஜ்பக்கேவிற்கு ஆலோசனையும், கடல் நீர் பற்றிய அரிய தகவல்களை சமீபத்தில் வெளியிட்டவருமான அந்த மஹான் எங்கே?!

சுவாமிக்கே வெளிச்சம்!

ஒரு காலத்தில் பெங்களூரில் #கரை_வேட்டிகள் புடை சூழ நின்றதை நாசா விண்கலம் படம் பிடித்தது, இப்போது வெளியிடப் பட்டுள்ளது!!

கர்நாடகா பாஜகவுக்கும்….தமிழக பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை-பொன் ராதாகிருஷ்ணன்

எனக்கும் எனக்குமே சம்பந்தம் இல்லை , ஏன்னா என் பேரு சம்மந்தம் இல்லை!!

 

நண்பர்கள் அனைவருக்கும் #ஈகைத்_திருநாள் (#Eid_Mubarak) வாழ்த்துக்கள்!

பிரியாணியை எங்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல், தனி பார்சல் ஆகவே கொடுத்து “ஈகை”த்திருநாளைக் கொண்டாடுங்கள்!!

 

கலைஞர் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!

வாழும் ராமானுஜரே!

டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு  வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!

இந்தியாவின் இரும்பு மனிதரே!

இல கணேசன் அவர்களுக்கு  வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!

இளைனர்களின் எழுச்சி நாயகனே!

பிதாமகரே!

ஸ்டாலின்  அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!

இளைஞர்களின் எழுச்சி நாயகனே!

திருமாவளவன் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!

தென்னாட்டுப் பிரபாகரனே!

அதிமுக பொதுச் செயலாளர் அம்மா அவர்களுக்கு வைக்கப் பட்ட பேனர்களில் இருந்து சில வரிகள்!

  • சிங்கநிகர் தலைவியே!
  • வனத் தாயே!
  • பசுமைத் தாயே!
  • மதுரையில் மீனாட்சி
    காஞ்சியில் காமாட்சி
    தமிழகத்தில் என்றும் அம்மா ஆட்சி!