Posts Tagged ‘SoftwareJob’

இரண்டு மாதங்கள் கடந்தது , மூர்த்திக்கு கம்பெனியில் இருந்து மெயில் வந்தது , இந்தமுறை உடனடியாக வேலைக்கு வந்து சேர வேண்டும் என்றும் , ட்ரைனிங் சென்னையில் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. உடனடியாக தனது சீனியர்க்கு கால் செய்து “அண்ணா ! ஒரு நல்ல செய்தி , கம்பெனியில் இருந்து மெயில் வந்து ஜாயின் பண்ணச் சொல்லி! “என்றான் .

ஹேய்! கன்கிராட்ஸ் ! எப்ப , என்ன வரும் என்று தெரியாது இதுதான் IT !” என்று பஞ்ச் அடிச்சார் சீனியர் ராஜ்! கூடவே எங்கு போவது , தங்குவது ,என்ன சொல்லித் தருவார்கள் போன்ற விவரங்களைச் சொன்னார்.

தேங்க்ஸ் அண்ணா ! சென்னை போயிட்டு உங்களுக்கு கால் பண்றேன் என்று சொல்லி, போன் காலை கட் செய்தான். அடுத்து அவன் நண்பன் கார்த்திக்கு அந்தத் தகவலைச் சொல்லும் பொழுதே ,அவனுக்கு கிருத்திகா நியாபகம் வந்தது.

அட ! இந்த கிருத்திகா நம்பர் கொடுத்து இருந்தால் சொல்லி இருக்கலாம், இந்த பொண்ணுங்க நம்பர் வாங்கி அப்டி என்ன பண்ணிட போறோம்! நான் நம்பர் கொடுத்தும் இந்த பொண்ணு ஒரு மெசேஜ் கூட பண்ணலயே ,அட பிரண்ட்ஸா கூட பழக மாட்டங்களோ  என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

ஒரு ஞாயிறு அன்று கோவையில் இருந்து சென்னைக்கு பேருந்து ஏறினான்! ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து , அப்படியே சென்னைல வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்று நினைத்தவாறே போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான், அப்படியே தூங்கி விட்டான்.

பேருந்து சேலம் வந்த பொழுது , விழித்துக் கொண்டவனுக்கு ஆச்சர்யம்! ஆமாம் அவன் மொபைல்ல ஒரு மெசேஜ் வந்து இருந்தது.

ஹாய் , இது கிருத்திகா!

அவ்வளவுதான் , வேற எந்தத் தகவலும் இல்லை!

இந்த பொண்ணுங்க !எப்பவும் இப்படியா , இல்லை இப்பத்தான் இப்படியா ? ஒரு கால் பண்ண மாட்டாங்களா?என்று சொல்லிக் கொண்டே கால் செய்தான்!  மொபைல் ரிங் சத்தம் பக்கத்தில் கேட்பது போல் இருந்தது!ஆமாம் , கிருத்திகாவும் அதே பேருந்தில் இரண்டு சீட்ஸ் தள்ளி தனது தோழியுடன் அமர்ந்திருந்தாள்!

நம்மாளுக்கு இது கனவா , நினைவா என்றே தெரியவில்லை! பஸ்ஸை விட்டு தனியே பறந்து கொண்டிருப்பதைப் போல ஒரு பீலிங்க்ஸ்!!

மீன்கள் நீந்தும்,காத்திருங்கள்!!

படங்கள்: கூகிள்

முந்தைய பதிவிற்கு

கண்ணாடித் தொட்டிக்குள், பல வண்ண மீன்கள்#2

மூன்று மாதங்கள் கடந்தது, சாப்ட்வேர் வாழ்க்கையின் கனவில் இருந்தவனுக்கு தான் தேர்ந்தெடுக்கப் பட்ட கம்பெனியிடம் இருந்து ஒரு மெயில் வந்தது. அதில் “நாங்கள் உங்களை எங்கள் கம்பெனிக்கு வரவேற்கிறோம். எங்கள் நிறுவனத்திற்குத்  தேர்ந்தெடுத்த உங்களைப் போன்ற பணியாளர்கள் ஒவ்வொருவரையும் ட்ரைனிங்கிற்கு கூப்பிட்ட வண்ணம் உள்ளோம். அதன் படி நீங்கள் இன்னும் இருமாதங்களில் ட்ரைனிங்கில் கலந்து கொள்ளலாம். அதற்க்கான அறிவுப்பு விரைவில் உங்களுக்கு அனுப்பப் படும்” என்ற தகவல் இருந்தது.


இதே போன்றதொரு தகவலை 30 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு அனுப்பி இருந்தார்கள்.அந்தக் குழுவில் கிருத்திகா என்ற பெண்ணும் ஒருவர். மூர்த்தி இந்த மெயில்லை படித்துக் கொண்டிருக்கும் பொழுதே , ஜிமெயில் சாட்டில் ஒரு அழைப்பு வருகிறது.

கிருத்திகா: ஹாய் மூர்த்தி,,,

here  கிருத்திகா,,,

(நம்ம ஆளு மனதிலே! கண்ணா லட்டு திங்க ஆசையா?!!)

மூர்த்தி : ஹாய் , கிருத்திகா! மூர்த்தி here

கிருத்திகா: 3 மாதம் கழிச்சு இப்போத்தான் முதல் மெயில் அனுப்பி இருக்காங்க?! எப்ப கூப்டுவாங்கனு ஏதாவது ஐடியா இருக்கா?

மூர்த்தி: ஆமாங்க! ஆனா தெரிலையே, கூப்டுவாங்க பயப்படதீங்க!

(மனதில் : இத வச்சுத்தான் என் கனவு வாழ்க்கையே இருக்கு. நம்மை மாதிரி இந்தப் பொண்ணும் பயப்படுதே!)

கிருத்திகா: இல்லைங்க , எங்க வீட்ல marriage பத்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க இப்டியே லேட் ஆகிட்டே இருந்தது என்றால்!

மூர்த்தி: (என்னது marriage ஆ?!) ஏங்க உங்க ஆளு வைடிங்ஆ marriageக்கு?!

கிருத்திகா: அய்யயோ , லவ்வர் ஆம் இல்லைங்க ,லவ் எனக்கு பிடிக்காதுங்க!!

மூர்த்தி :(அப்படா!!!, ஆளு இல்ல இப்போதைக்கு இது போதும்) ஏங்க ,அப்டி பொதுவா லவ் தப்புன்னு சொல்லிட முடியாதுங்க. நீங்க லவ்வில் விழற மாறி யாரையும் பார்க்கலன்னு சொல்லுங்க!

கிருத்திகா: சரிங்க , அப்பா கூப்பிடறார்!  ஏதாவது அப்டேட் என்றால் மெயில் பண்ணுங்க.

மூர்த்தி: சரிங்க, ஆனா நான் மெயில்ல அவ்ளோவ வர மாட்டேன். வேணா என் நம்பர்க்கு மெசேஜ் அனுப்புங்க
9800000021.
கிருத்திகா:offline
மூர்த்தி:ஹ்ம்ம் , offline போய்டுவாங்களே! என்னம்மா?இப்டி பண்றீங்களேமா!!

கம்பெனி கூப்டலையே என்ற கவலையை மறந்து வழக்கத்திற்கு மாறாக மூர்த்தி இன்று மிகவும் சந்தோசமாக இருந்தான். கிருத்திகாவிடம் பேசியது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

காலிங்,,,,

ஹலோ மூர்த்தி , டேய் எங்கடா ஆளையே காணாம் ! 3 மாசம் ஆச்சே மச்சி மறுமுனையில் கார்த்திக்!

எங்கடா கம்பெனி இன்னும் கூப்டல , கைல காசே இல்ல மச்சி. நீதான் கால் பண்றது.

பிசினஸ் பிஸிடா அதான்.

மச்சி இன்னைக்கு ஒரு பொண்ணுட்ட பேசினேன்டா! கிருத்திகாடா பேரு!

டேய் செம ,போட்டோ அனுப்பு மச்சி அப்புறம்.

மெயில்ல பேசினேன்டா, நயன்தாரா போட்டோதாண்டா இருந்துச்சு.

ஹ்ம்ம், எதுக்கும் முகம் ஒரு டைம் பார்த்துக்கோடா!

சரிடா சரிடா!!

மச்சி , சார்ஜ் இல்லடா இங்க பவர் கட். அடிக்கடி பவர் கட் ஆகுதுடா .அப்புறம் கூப்பிடுடா என்று சொன்னான் மூர்த்தி!

இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்டா!! சரிடா , அப்புறம் கால் பண்றேன் என்று விடை பெற்றான் கார்த்திக்.

மீன்கள் நீந்தும்,காத்திருங்கள்!!

படங்கள்: கூகிள்

முந்தைய பதிவிற்கு

கண்ணாடித் தொட்டிக்குள், பல வண்ண மீன்கள்#1

மச்சிசீஈஈஈஈஈஈஈ, ஒருவழியா நான் சாப்ட்வேர் கம்பெனில செலக்ட் ஆகிட்டேன்டா என்ற சந்தோசத்தோடு துள்ளிக் குதித்தான் மூர்த்தி. டேய் செமடா, எப்பிடிடா? கலகிட்ட போ ! இதுக்கு நீ ட்ரீட் கொடுத்தே ஆகனும் என்றான் கார்த்திக். இருவரும் நண்பர்கள். கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார்கள். கார்த்திக் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு அவருடைய அப்பா பிசினஸ்க்கு உதவியா இருக்கிறான். படித்தற்கும் அவர்களின் பிசினஸ்க்கும் சம்பந்தம் இல்லை என்றாலும்,அதில் கார்த்திக்கு எந்த வித வருத்தமும் இருப்பதில்லை.அப்பாவைப் போல பிசினஸ்மேன் ஆக வர வேண்டும் என்பதுதான் கார்த்திக்கின் ஆசை. அப்பா சொன்னார் என்பதற்காகத்தான் இன்ஜினியரிங் படித்தான் அவன்.

கார்த்திக் பத்தி போதும் , மூர்த்தி பற்றி ஏதாவது சொல்லுங்க என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. சரி வாங்க மூர்த்தியைப்  பற்றி தெரிஞ்சுக்கலாம். மூர்த்தி அப்டியே கார்த்திக்கு நேர் எதிரானவன் , அப்பா விவசாயி ஆனால் இவனுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல இருப்பான்.இவனுக்கு லைப் ஜாலியா வாழனும் அதுதான் இவன் லட்சியம்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிச்சுட்டு , தனது சீனியர் சாப்ட்வேர்ல வேலை பார்க்கிறார் கார், பார்ட்டி ,டிஸ்கோ ,அடிக்கடி வெளிநாடு பயணம் என  ஜாலியா வாழ்கிறார் அதைப் போல நானும் வாழனும் என்று சொல்லியே சாப்ட்வேர் ஜாப்பிற்கு முயற்சி செய்து இப்பொழுது சென்னையில் ஒரு தனியார் சாப்ட்வேர் கம்பெனியிலும் செலக்ட் ஆகிவிட்டான்.

ஒரு மாதம் பயிற்சி , பயிற்சியின் பொழுதே சம்பளம் என (பிரபல உலகத் தர ஹோட்டல் மானேஜ்மெண்ட் விளம்பரம் போலத்தான்!!) , 8 மணி நேரம்தான் வேலை, வேலைக்குச் சென்று வர கேப் என பல வசிதிகள் சாப்ட்வேர் ஜாப்ல இருக்கும்டா! என சீனியர் சொன்னதை நினைத்து நினைத்து கனவுலகில் மிதந்து கொண்டிருந்தான் மூர்த்தி.

அவன் கனவு என்ன ஆனது?!

மீன்கள் நீந்தும்,காத்திருங்கள்!!

படங்கள்: கூகிள்