Posts Tagged ‘plastic’

பிளாஸ்டிக் !

பிளாஸ்டிக்! பிரம்மாண்டமான கண்டுபிடிப்பு என்பதில் தொடங்கி இன்று அதன் பயன்பாடு பெரும்  பிரச்னை என்ற நிலையில் இருக்கிறது. காலையில் பல் துலக்கும் பசை வைத்திருக்கும் அடைப்பான் முதல் இரவு படுக்கும் பாய் வரை அனைத்தும் பிளாஸ்டிக்!

புலி பசித்தால் எப்படி புல் திங்காதோ அப்படித்தான் நினைத்து இருந்தோம் பசு பசித்தாலும் பிளாஸ்டிக் சாப்பிடாது என்று நேற்று வரை! இன்றோ பிளாஸ்டிக் என்பது மாடுகளுக்கு பீட்சா , பர்கர் போலாகிவிட்டது! சில மாடுகள் அதை சாப்பிடுவதால் இறந்தே விடுகின்றன !

மாடுதான் என்றில்லை , நீர் வாழ் உயிரனங்களும் இருந்து விடுகின்றன. நம்முடைய சுயநல போக்கினால் நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் நீர் நிலைகளில் சென்று அதனை மாசு செய்வதோடு மட்டுமல்லாம் அதில் வாழும் உயிரனத்தின் வாழ்வையும் அழித்து விடுகின்றன! இது பிளாஸ்டிக் ஆறா என்று சொல்லுமளவு இருக்கும் நதிகளில் கூட பிளாஸ்டிக் பரவி உள்ளது.

தகவல்: விக்கிபீடியா
அறிமுகம்:
நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். “வார்க்கத் தக்க ஒரு பொருள்” என்னும் பொருள் தரும் “பிளாஸ்டிகோஸ்” என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது.

நெகிழிப் பயன்பாட்டில் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன.

இரப்பர், கண்ணாடி, இரும்பு, அலுமினியம், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக இன்று நெகிழிப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் பல்லாயிரம் டன் கணக்கில் பாலித்தீன் தயாரிக்கப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பொருள்களைத் தயாரிப்பது தீமையே தருகிறது என்பது சுற்றுச் சூழல் வல்லுநர்களின் கருத்தாகும். எனவே இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி அடைப்பான், துணிப்பை போன்றவைகளை நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.

தவிர்க்க முடியாத நேரத்தில் 20 மைக்ரான் தடிமனுக்கு மேற்பட்ட தடித்த பிளாஸ்டிக் பைகளையாவது பயன் படுத்தலாம். இவை மறுசுழற்சி செய்யப்படக் கூடியவை எனவே இவை ‘சூழல் நண்பன்’ என விளம்பரப்படுத்தப் படுகின்றன.

நெகிழிப்பொருட்களை கண்ட இடங்களில் கொட்டாமல் தவிர்த்து, சேகரித்து, மறுபயன்பாடு செய்யலாம். எக்காரணம் கொண்டும் எரிக்கக்கூடாது.

குப்பைகளைத் தரம் பிரித்துக் கொட்ட வேண்டும்.

அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப் படுத்தவும் , கண்காணிக்கவும் செய்ய வேண்டும்.

மாற்று:
நெகிழிக்குப் பதிலியாக தூய மணலுடன் மக்னீசியம் வேதிவினை புரிந்து உருவாகும் சிலிக்கான் சேர்மத்தைப் பயன்படுத்தலாம். இவை ரப்பர் போல் நீளும். மீளும். இளகும். எளிதில் தீப்பற்றாது. நெகிழியின் எல்லா நற்பண்புகளும் பெற்றது. தீய விளைவு இல்லாதது. ஆனால் இவை வ்ணிக ரீதியில் இலாபமில்லாததால் இவை அதிகம் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

பண்டைய காலங்களில் நமது வாழ்க்கை இயற்க்கை முறையை ஒட்டி இருந்தது , உலகிற்கே இயற்கைப் பயன்பாட்டை கற்றுக் கொடுத்த நாடு நாம் !ஆனால் இன்றோ நாம் அறிவியலின் அறிவு என்ற பெயரில் அழிக்கும் பொருள்களை பயன்படுத்துதலில் உலகோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம்!கண்டுபிடிப்புகள் எல்லாமே மக்களின் நன்மைக்குத் தானே?! தீமை செய்ய அல்லவே!!

மக்களும் அரசும் சேர்ந்த முயற்சியே எதிலும்  வெற்றி பெறும். ஆகையால் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக , அதன் தயாரிப்புக் எதிராக மக்கள் , அரசு சேர்ந்த புரட்சி உருவாக வேண்டும் , அது வெறும் கோஷமாக மட்டும் இருந்துவிடக் கூடாது!