Posts Tagged ‘ChennaiTraffic’
TRAFFIC AWARENESS CAMPAIGN 06/03/2016
Posted: March 3, 2016 in சென்னை செய்திகள்Tags: awarenesscampaign, chennai06032016, ChennaiTraffic
சிக்னல் என்ன இந்தியா -பாகிஸ்தான் எல்லையா ?!
Posted: June 26, 2015 in சமூகம்Tags: #PradheepScribbles, சிக்னல், பயணம், ChennaiTraffic, pradheep360kirukkal, Safejourney, Signal, Traffic, twowheeler
ஒரு நான்கு வழிச் சாலை சிக்னல், நாலாபுறம் வண்டி வந்து செல்லும்படியான அகலமான சாலைதான் அது. வழக்கமாக ஒரே சமயத்தில் இருபுறங்கள் வாகனங்கள் செல்ல அனுமதிப்பார்கள், மற்ற இருபுறங்களில் இருப்பவர்கள் காத்திருப்பார்கள். இது தெரிந்ததுதான் இதில் என்ன சொல்ல முயற்சி செய்கிறாய் என நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. சொல்கிறேன் இதிலேயும் பிரச்சனை இருக்கிறது.
ஓர் இரு வழியில் (ஒரு முனையில்)செல்பவர்களுக்கு அனுமதி நிறுத்தப் பட்டு , அடுத்த இருவழியில் (மறுமுனையில்)செல்பவர்களுக்கு அனுமதி வழங்கும் பொழுது , இதற்க்கு முன்னால் செல்ல அனுமதிக்கப் பட்டவர்களில்(ஒருமுனையில்) கடைசியாக சில பேர் செல்லக் கூடிய ஒரு சூழல் இருக்கும். அது தவிர்க்க முடியாததும் கூட, வேகமாக வருபவர்கள் வேகத்தை உடனடியாக குறைப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
அதே வேளையில் மறுமுனையில் சிக்னல் கொடுக்கப் பட்டு இப்பொழுதுதான் பயணத்தை துவங்க இருப்பவர்கள் கொஞ்ச நேரம் நின்று , கடைசியாக செல்பவர்களுக்கு வழிவிட்டுச் செல்லலாம். இதனால் விபத்து ஏற்ப்படுவது தவிர்க்கப் படும்.
அதே நேரம் , ஒருமுனையில் செல்பவர்களுக்கு அனுமதி நிறுத்தப் பட்டவுடன் , அவர்கள் நின்றுவிட வேண்டும். அதை விட்டு விட்டு , மறுமுனையில் கடைசி வரை செல்ல அனுமதிக்கிறார்கள் என்பதால் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக் கூடாது.
அந்த சிக்னல் என்ன இந்தியா -பாகிஸ்தான் எல்லையா என்ன ? எதிர் இருப்பவரை ஒரு எதிராளிபோலப் பார்த்துக் கொண்டு ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு மோதிக் கொள்ள?பாதுகாப்பான பயணத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்க வேண்டாமா ? அது நமது கடமை மட்டும் அல்ல பொறுப்பும் கூட!!