Posts Tagged ‘#தேர்தல்2016’

முதலாவதாக மது விற்பனையின் நேரம் குறைக்கப்படும்
சில்லறைக் கடைகள், பார்கள் குறைக்கப்படும்
மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்
இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை அடைவோம்

மக்களாட்சியில் தேர்தல் மக்களுக்கு மட்டுமே உரியது. அது ஒரு சமூக விழா. அதை இத்தனை காலம் முழுமையாக மக்கள் கையில் எடுக்காத்தால் இன்று தமிழக அரசியல் மார்கட் போன சினிமாக்காரர்கள் மீண்டும் மேக்கப் போடும் இடமாக இருக்கிறது.
தேர்தல் என்ற மாநிகழ்வு லட்சக்கணக்கான சுதந்திர போராட்ட தியாகிகளின் வியர்வை இரத்தம் உயிரின் பலன். அதில் வோட்டு போடுவது மட்டும் நம் கடமை என்று தவறாக சித்திரிக்கப்படுகிறது. வேட்பாளர் தேர்வில் ஆரம்பித்து யார் பதவிக்கு வந்தாலும் அவர்களை கேள்வி கேட்பதில் தொடர்கிறது குடிமகனின் கடமை. கடமை தவறினால் என்ன விளைவு என்பதைத்தான் தற்போது அநுபவித்துக் கொண்டு இருக்கிறோம்! மீண்டும் ஒரு முறை கடமைகள் தவறுவதற்கு நம் ஏழைகளும் குழந்தைகளும் தாங்க மாட்டார்கள். நல்ல பிரதிநிதிகளை தேடுவோம், நிறுத்துவோம், அவர்களுக்குப் பிரச்சாரம் செய்வோம்,யார் வென்றாலும் அவர்களை தொடர்ச்சியாக கண்காணிப்போம்.
வேறு எந்த வழியிலும் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியாது!  முழுவீச்சில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவது மூலம் மட்டுமே நல்வாழ்வு கிடைக்கும்! அதற்கு இப்போது விட்டால் அடுத்த 5 வருடங்கள் வாய்ப்பு கிடையாது!

Source: whatsapp
Thanks: subathra

விஜயகாந்த் ‘கிங்’ ஆவதைவிட ஜெயலலிதா ‘குயின்’ ஆக தொடர்வதே நல்லது என்று சொன்னவர் யார்?

* மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்
* அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி
* அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும்
* ஆடுமாடு மேய்த்தல் , விவசாயம்அரசு பணி… ஊதியம் குறைந்த பட்சம் 30000
* 4 மணி நேர செய்வழிக்கல்வி .. 4 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி
* மெக்காலே கல்வி முறை ஒழிப்பு
* இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி
* ஒவ்வொரு குடும்பங்களிலும் நாட்டு மாடு வளர்க்க ஆணை
* விவசாயம் சார்ந்த மரபு வழி தொழில்களுக்கு மட்டுமே அனுமதி
* பெருவணிக நிறுவனங்களுக்கு தடை
* தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி
* அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்
*10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும்
*,சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுகாக்கும் மரங்கள் நட்டப்படும்
* புதியதாக காடுகள் வளர்க்கப்படும்
* 1கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும்
* தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு அறிவிக்கப்படும்
* கோவில்களில் சமசுகிருதம் படித்தால் தேசத்துரோகம்
* அந்நியர்கள் தொழில் தொடங்க தடை
* விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும்
* தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடி நீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்
* தண்ணீர் விற்கத்தடை
* கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை
* இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும்
* கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும்
* நகர் மயமாக்கல் தடுக்கப்படும்
* அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கசெய்யப்படும்
*அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது
*அணுஉலைகள் முற்றாக மூடப்படும்
* பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும்
* வரதட்சணைக்கு தடை
* பூரண மதுவிலக்கு அமல்
* மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல்
* எல்லை பாதுகாப்பு படை உருவாக்கம்
* மீனவர் பாதுகாப்பு படை
* மேலும் தமிழ் நாட்டின் அனைத்து பகுதியிலும் முப்பாட்டன் முருகன் கோவில் அமைக்கப்படும்
* திருக்குறள் தேசிய நூல் அறிவிக்கப்படும்…
* அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீடெடுத்து வளர்க்கப்படும்
* தொழூப்புகுத்தல் (சல்லிக்கட்டு) தேசியத்திருவிழாவாக அறிவித்து ,7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும்
*தைப்பூசத்திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும்
* காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக ,மாதம் 30000 ருபாய் வழங்கப்படும்
* கைய்யூட்டு வாங்கினால் உடனடுயாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்
* கைய்யூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும்
* பிற மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்க தனி அமைச்சகம் அமைக்கப்படும்.

Source: Whatsapp

ஹலோ அண்ணா நான் அடையார்ல இருக்கேன் உங்க கடைக்கு எப்டிணா வரனும்?

எந்த தெருல இருக்கீங்க ?

தெரிலணா போஸ்டரா ஒட்டிருக்கு தெரு பேர் தெரில

ஓ சரி என்ன போஸ்டர் ?
பாரத தாயே னு போட்ருக்கு ..

ம் அப்டியே மூணு போஸ்டர் தாண்டி வந்தா காவேரித்தாயேனு போட்ருக்கும் அதுக்கு எதிர்ல பாரதி கண்ட புரட்சிப்பெண்ணேனு ஒட்டிருக்கும் அதுல நேர வரனும்.. அப்பறம் அங்கேந்து எட்டாவது போஸ்டர் நீதி தேவதையேனு இருக்கும் அங்கேந்து …

அண்ணா போதும் நா அங்க வந்து call பன்றேன்

சரி ஓகே

(வண்டில அங்க போய் சேர்ந்தவுடன்)
அண்ணா வந்துட்டேன் இப்போ சொல்லுங்க

ஓ வந்துட்டியா இப்போ லெஃப்ட் எடு அங்கேந்து 2 போஸ்டர் தாண்டுனா வருங்கால முதல்வரேனு மூனு வேறவேற கட்சி போஸ்டர் போட்ருக்கும் அங்கதான் நம்ம கடை
வாசல் ..

சரிணா ..

(ஓரே குழப்பம் திருப்பி call பன்னேன் )
அண்ணா தொடர்ந்து 6 போஸ்டர் வருங்கால முதல்வரேனு போட்ருக்குனா மண்ட காயிது கொஞ்ச வெளில வர முடியுமா ப்ளீஸ் ..

என்னது அதுக்குள்ள இன்னும் மூணா!!!!!!

சரி வரேன்…..நீ அங்கேயே நில்லு.

Source: Whatsapp

தமிழகத் தேர்தல் களத்தில் GK வாசனின் முடிவு என்னவாக இருக்கும் ?

விஜயகாந்த் கட்சியை இழுக்க அனைத்துக் கட்சிகளும் பணம் கொடுக்கவும் தயார் போல?

மக்கள் நலக் கூட்டணி நிலைக்குமா?

அன்புமணி ராமதாஸ் பாஸ் ஆவாரா?

யார் வந்து என்ன ஆகப் போது ?

தேர்தல் என்றாலே ரோடு போட ஆரம்பிட்சிடுறாங்க?!

அதிமுக பொதுச் செயலாளர் அம்மா அவர்களுக்கு வைக்கப் பட்ட பேனர்களில் இருந்து சில வரிகள்!
தாயிருக்க பயமில்லை; தண்ணீருக்கு குறைவில்லை!!

மகராசிக்கு மகுடம் சூட்டி மகிழ்கின்ற 2016 லீப் ஆண்டு!

அரசியல் வேதமே!

தாயே ! தமிழே!!

EVKS இளங்கோவன் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!

தன்மானத் தலைவரே!

ஸ்டாலின் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!

தளபதியார்!

மக்கள் தலைவரே!

அன்பழகன் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!
இனமான பேராசிரியரே!

கலைஞர் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!
தமிழினத் தலைவரே!

முத்தமிழ் அறிஞரே!

வாழும் பெரியாரே!

இலகணேசன் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!

அரசியல் சாணக்கியரே!
பீஷ்மரே!

விஜயகாந்த் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!

கருப்பு MGR!

//வாசக நண்பர்களே! வணக்கம் !!

இதைப் படிக்க படிக்க உங்களுக்கும் இதைப் போல பல பேனர்களில் ஆங்காங்கே படித்த/பார்த்த வாசகங்கள் நினைவில் வந்தால் இங்கே பதிலுரையாக பதிவிடவும்! நன்றி!!//

 

விஜயகாந்த் அவர்களுக்கு வைக்கப் பட்ட பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் பார்த்த சில வரிகள்!
நாளைய முதல்வர் கேப்டன்!

தமிழக அரசியலின் கிங் கேப்டன்!

அதிமுக பொதுச் செயலாளர் அம்மா அவர்களுக்கு வைக்கப் பட்ட பேனர்களில் இருந்து சில வரிகள்!

காட்டுக்கு ராஜா சிங்கம்; தமிழ் நாட்டுக்கு ராஜா அம்மா!

நீதி தேவதையே!

அன்ன லட்சுமியே!

காவிரித் தாயே!

கழகத் தாயே!

கழக நிரந்தரப் பொதுச் செயலாளரே!

தங்கத் தலைவி!