Posts Tagged ‘ஜாதி’

​ஜாதிக்கொரு சுடுகாடு!
நாற்றமெடுக்கும் உடலைத் திண்ணும் #புழுக்களில் இல்லை அந்த உயர்வு தாழ்வு!


#ஜாதி #சுடுகாடு

Pic: Thanks to Vikimemes & Parthiban Samar

#கார்ப்பரேட் வெடி

#கார்ப்பரேட் வெடின்னு ஒன்னு இருக்காம் எங்க?யாரால்?எப்படி பத்த வெச்சாலும் நல்லா புகை கக்கிதான் வெடிக்குமாம்.
#சு.சா வெடி

சு.சா வெடின்னு ஒன்னு இருக்காம் அது பற்ற வெச்சாலே சுற்றுச் சூழலுக்கும் சுத்தி இருக்கறவங்களுக்கும் கெடுதலாம்.
#காவிரி_மேலாண்மை_வாரியம்

#காவிரி_மேலாண்மை_வாரியத்திற்கு முட்டுக்கட்டை போடும் #மத்தியஅரசிடம், பிரச்சனையைத் தீர்க்க என்ன திட்டம் வைத்துள்ளது என #நீதிமன்றம் எழுத்துப்பூர்வ அறிக்கை வாங்கலாமே?!
#ஜாதி

#இந்தியா தவிர வெளிநாடுகளில் #ஜாதி என்ற ஒன்று இல்லை,அங்கேயும் நம்மாளுங்க #ஜாதி_சங்கத்தை வச்சிருக்காங்க! வெளிநாட்டுக்காரன்ட்ட என்னனு சொல்லி வச்சிருப்பாங்க?!

#ரெமோ

#ரெமோ #சிவகார்த்திகேயனைப் போல #ரோபோ_சங்கரின் ரேமோ கெட்டப்பையும் #ரஜினி பாராட்டலாமேமேமே!
#ஆம்னி பஸ்கள்

#ஆம்னி பஸ்கள் கூடுதலாக ஒரு பைசாகூட வசூலிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்
பூரா நோட்டாவே வாங்கிக்கறாங்க ஜட்ஜய்யா!!

மத சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் மதிக்கும் நாடு இந்தியா என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அறிவுக்கு புறம்பான பாகுபாடு காட்டும் நடவடிக்கைகள் மத சுதந்திரத்தில் சேர்ந்தது அல்ல. இந்த நடைமுறைகளைப் பாதுகாக்க முடியாது’ என்று #தலாக் குறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்!

#ஜாதி என்பது ஏழாம் அறிவோ?

கொலையை விட வேறு ஜாதி காதல் அவமானமா?!

மகளின் வேறு ஜாதி காதல் திருமணத்தால்   உறவினர்கள் என்னை கேவலமாக பேசினார்கள். என்னால் கோவில் விழா உள்பட வெளியே எங்கேயும் செல்ல முடியவில்லை. இது எனக்கு அவமானமாக இருந்தது- கௌசல்யாவின் தந்தை வாக்குமூலம்

செய்தி:ஒரு தந்தையின் வாக்குமூலம்

Thanks Dinamani

 

 

கேள்வி :- தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு இருக்கு, மக்கள் பிரதிநிதித்துவ மன்றங்களில் இடஒதுக்கீடு இருக்கு பின்ன என்ன அவங்களுக்கு கவலை இன்னும் புலம்பிட்டே இருக்காங்க ?

பதில் :- ஒரு பேச்சுக்கு, உங்கள் அலுவலகத்தில் நீங்கள் ஒரு தலித் என்று சொல்லிப்பாருங்கள். இரண்டு நாட்கள் மட்டும் அந்த பொய்யை தொடருங்கள். உங்களுக்கான இடம் எப்படியிருக்கிறது என்று கவனியுங்கள்.அவ்வளவு வேண்டாம் உங்கள் கணினியில், மொபைலில் அம்பேத்கர் படத்தை வையுங்கள். நீங்கள் நடத்தப்படும் விதத்தை கவனியுங்கள்.படித்து நல்ல வேலைக்கு போயிருக்கும் நீங்கள் ஒரே ஒரு நாள் தலித்தாக “ஒரு பேச்சுக்கு” இருக்கும்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் அவஸ்தையை அவர்கள் காலங்காலமாய் அனுபவிக்கிறார்கள்.அந்த அவஸ்தையை சொல்ல எத்தனிப்பவர்களை புலம்பல்வாதிகள் என்று ஒதுக்குவது அயோக்கியத்தனம்.
நன்றி: இராஜராஜனின் பக்கங்களில் இருந்து!

அவர்கள் நம்மிடையே தான் இருக்கிறார்கள்!

 நம் பக்கங்களில் வந்து
கருத்து சொல்வார்கள்,
நம்மை திட்டும் பக்கங்களிலும்
சென்று லைக் இடுவார்கள்.

மதத்தை மறுத்தால்
Baguthஅறிவாதி என்பார்கள்,
சாதியை வெறுத்தால்
முற்போக்கு வியாதி  என்பார்கள்.
அவர்கள் நம்மிடையே தான் இருக்கிறார்கள்!

பெரியார் அம்பேத்கர்
பிரிவினைவாத பெயர்கள் என்பார்கள்,
இந்துத்துவம் என்றால்
ஜெய் ஹிந்த்  என்பார்கள்.

பெருமாள் முருகனை
ஆபாசம் என்றார்கள்,
கல்புர்கி கொலையை
கள்ளமாக ரசித்தார்கள்.
அவர்கள் நம்மிடையே தான் இருக்கிறார்கள்!

இஸ்லாமியன் என்றால்
துலுக்கன் என்பார்கள்.
கிருத்துவன் என்றால்
மிசனரி என்பார்கள்.

பார்பனீயம் என்று சொன்னால்
வெறுப்பரசியல் என்பார்கள்;
தலித் என்று சொன்னால்
ஓட்டரசியல் என்பார்கள்.
அவர்கள் நம்மிடையே தான் இருக்கிறார்கள்!

படித்து முன்னேறினாலும்
கோட்டால படிச்சவன் என்பார்கள்,
மேற்கொண்டு படிக்கலாம் என்றால்
இடஒதுக்கீடு கூடாது என்பார்கள்.

சாதியை ஒழிக்கணும் என்றால்
சாதி சான்றிதழை கிழி என்பார்கள்,
கலப்பு திருமணம் என்றால்
கௌரவ கொலை என்பார்கள்.

அவர்கள் நம்மிடையே தான் இருக்கிறார்கள்!

நாம் போராடும் போதும்,
அவமானப்படும் போதும்,
அடிவாங்கும் போதும்,
கொல்லப்படும் போதும்
அமைதியாக இருப்பார்கள்.

செத்த பின் ஐயோ பாவம் என்பார்கள்,
சாதிசாயம் பூசாதீர்கள் என்பார்கள்.
தலித் பிணமா என்று பார்த்துவிட்டு
சுடுகாட்டு கேட்டை திறப்பார்கள்.
அவர்கள் நம்மிடையே தான் இருக்கிறார்கள்!

மீள்பதிவு: http://rajarajanrj.blogspot.sg/2016/01/blog-post_20.html
நன்றி: இராஜராஜன்

இதுவரை… இனி… – ஹைதராபாத் பல்கலை. துணைவேந்தருக்கு ஒரு திறந்த மடல்

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

“தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மாணவர் ரோஹித் மரணத்துக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தி உலகம் முழுவதும் இருந்து ஏறத்தாழ 130 கல்வியாளர்கள் இணைந்து ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்துக்கு செவ்வாய்க்கிழமை ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

அக்கடிதத்தின் முழு வடிவம்:

தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலை இந்திய உயர் கல்வித்துறையில் தலைவிரித்தாடும் சாதிப் பாகுபாடுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இத்தருணத்தில் சர்வதேச அறிவுசார் சமூகத்தைச் சேர்ந்த நாங்கள் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்திடம் நீதி கேட்டு இந்த அவசர கோரிக்கையை முன்வைக்கிறோம்.

முதலில் ஐந்து தலித் மாணவர்களை இடைநீக்கம் செய்ததே பல்கலைக்கழக நிர்வாகிகளின் சார்பு பார்வையின் வெளிப்பாடே. இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் அவர்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க ஒரு சிறிய வாய்ப்புகூட வழங்கப்படவில்லை என்பது மற்றுமொரு அடக்குமுறை.

பல்கலைக்கழகத்தில் துடிப்புடன் வலம் வந்த ரோஹித் போன்ற இளைஞர்களின் கொள்கைகளை எதிர்த்து அரசியல் சார்புடைய சிலர் தவறான செயல்களில் ஈடுபட்டபோதெல்லாம் இதே நிர்வாகத்தினர் அவர்களை மன்னித்திருக்கின்றனர். ஆனால், தலித் மாணவர்கள் சிறு தவறு செய்தாலும் அதற்கு மன்னிப்பு கிடையாது என்பது விதியாக்கப்பட்டிருக்கிறது.

இதற்குக் காரணம், மாணவர்கள் பிரச்சினைகளை தலித் / தலித் அல்லாதவர் என்ற முன்முடிவுடன் பல்கலைக்கழக நிர்வாகம் அணுகுவதே. இத்தகைய முன்முடிவுக்கு கொடுக்கப்பட்ட விலை மிகப்பெரியது. தண்டிக்கப்பட்ட 5 தலித் மாணவர்களில் ஒருவரான ரோஹித் வெமுலா ஜனவரி 17-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வதற்கான ஒரே நம்பிக்கை ஆதாரம் பறிக்கப்பட்ட விரக்தியின் வலியும், சுயமரியாதை சுட்டுப்பொசுக்கப்பட்ட வேதனையும் ரோஹித்தை எத்தகைய நெருக்கடிக்கு ஆளாக்கியது என்பதற்கு அவரது கடைசிக் கடிதம் தாங்கியுள்ள வார்த்தைகளே சாட்சி.

அந்தக் கடிதத்தில், தனது சுய அடையாளம் சாதியால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது என்ற வேதனையை ரோஹித் வெளிப்படுத்தியிருக்கிறார். ஓட்டுகளாக மட்டுமே தலித சமூகத்தினர் அடையாளம் காணப்படும் அவலத்தையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். சமூக அவலத்தைச் சுட்டிக்காட்டி தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு தனி மனித வினைகளுக்குப் பின்புலத்திலும் ஏதாவது உந்து சக்தி இருக்கும் என்பதை அறிவுசார் சமூகத்தைச் சேர்ந்த நாங்கள் அறிவோம்.

அந்த வகையில், ரோஹித் தற்கொலை ஒரு தனி மனித செய்கை மட்டும் அல்ல. இந்திய ஜனநாயக திருநாட்டில் உள்ள உயர்தர உயர் கல்வி நிறுவனங்கள், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட இளைஞர்களை ஊக்குவித்து அவர்கள் அறிவையும், ஆளுமைத் திறனையும் போற்ற மறுத்து கடமை தவறியதால் ஏற்பட்ட விளைவு.

ரோஹித்தின் கனவுகள் கைகூடியிருக்க வேண்டும். ஆனால், நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் வேரூன்றிக் கிடக்கும் சில சார்பு முடிவுகளுக்கு ரோஹித் இரையாகிவிட்டார். இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் வியாபித்துள்ள சாதி பாகுபாடு ரோஹித்தைப் போல் பற்பல தலித் மாணவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கி தற்கொலை முடிவை தேட வைத்திருக்கிறது. தற்கொலை செய்துகொள்ள முடியாதவர்கள் சத்தமின்றி மேற்படிப்பை துறந்திருக்கின்றனர்.

சாதியின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் சிக்குண்டு இருக்கும் நிலையில், தெற்காசிய அறிவுசார் சமூக பிரதிநிதிகளாக நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம்.

ரோஹித் வெமுலாவுடன் இடைநீக்கம் செய்யப்பட்ட மேலும் 4 மாணவர்களை ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் உடனடியாக மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அது.

ரோஹித் தற்கொலை குறித்து போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால் இவை மட்டும் போதுமானது அல்ல. ரோஹித் மரணத்துக்கு நீதி கிடைக்கச் செய்வதோடு நின்றுவிடாமல் இனி எந்த ஒரு மாணவனுக்கும் இத்தகைய அநீதி நடைபெறாது என்பதையும் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம் உறுதி செய்ய வேண்டும்.

பொது வாழ்விலும், ஆரோக்கியமான அரசியல் விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் துடிப்புடன் செயல்பட்டு, பல்கலைக்கழகங்கள் வாழ்க்கையை படித்தறிவதற்கான தளம், சுய மாற்றத்துக்கான இடம் என்பதை பதிவு செய்த ரோஹித் போன்ற இளைஞர்களை ஊக்குவித்து, உருவாக்க வேண்டியது உயர்கல்வி நிறுவனங்களின் தலையாய கடமை.

இத்தகைய மாணவர்கள் அவர்கள் சுயம் பாதிக்கப்படாமல் கல்வியைத் தொடர்வதற்கான வாய்புகளை உருவாக்கித் தருவது அவசியம்.

இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் சாதியம், வெறுப்புணர்ச்சி மலிந்து கிடக்கும் என்ற போக்கை மாற்ற வேண்டும். இனி உயர்கல்வி நிறுவனங்களில் அடிஎடுத்து வைக்கும் தலித் சமூதகத்திலிருந்து வரும் மாணவனுக்கு கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடு இருக்குமோ என்ற ஐயமே எழக்கூடாது.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் எதிர்கொள்ளும் சவாலான சூழல் அவசரமாக சீரமைக்கப்பட வேண்டும்.

இந்திய பல்கலைக்கழகங்களில் சாதியம் மழுங்கிவிடாமல் கண்னும் கருத்துமாக பார்த்துக் கொள்ளும் சில அரசியல்வாதிகளாலும், சாதியத்தை எதிர்க்கும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சில பல்கலைக்கழக நிர்வாகத்தாலும் சர்வதேச அறிவுசார் சமூகத்தினர் மத்தியில் இந்தியாவின் பிம்பம் கறை படிந்ததாக காட்சியளிக்கிறது.

இந்த வேளையில், சாதிய பாகுபாட்டை நிறுவனமயமாக்குவதை நிறுத்திக் கொண்டு நம்பிக்கையை விதைக்குமாறு ஹைதராபாத் பல்கலைக்கழகத்தை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

அனைத்து மாணவர்களும் சம மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். மாணவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நாங்கள் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்.

இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில்: பாரதி ஆனந்த்

கடிதத்தில் கையெழுத்திட்டோர் விவரம்:

1. Rupa Viswanath, Professor of Indian Religions, University of Göttingen, Germany

2. Joel Lee, Assistant Professor of Anthropology, Williams College, USA

3. Dwaipayan Sen, Assistant Professor of History, Amherst College, USA

4. Nathaniel Roberts, Research Fellow, Max Planck Institute for the Study of Religious and Ethnic Diversity, Germany

5. Gajendran Ayyathurai, Postdoctoral Researcher, University of Göttingen, Germany

6. David Mosse, Professor, SOAS University of London, UK.

7. Karthikeyan Damodaran, PhD Scholar, University of Edinburgh.

8. Hugo Gorringe, Senior Lecturer, University of Edinburgh.

9. T. Dharmaraj, Visiting Professor, Centre for Modern Indian Studies, University of Göttingen.

10. Ania Loomba, Professor, University of Pennsylvania, USA.

11. Lalit Vachani, Research Fellow, Center for Modern Indian Studies, University of Göttingen, Germany

12. Srirupa Roy, Professor of State and Democracy, Center for Modern Indian Studies, University of Göttingen, Germany

13. Christophe Jaffrelot, Dr., CERI-Sciences Po/CNRS, Paris, France

14. Suvir Kaul, A. M. Rosenthal Professor, University of Pennsylvania, USA

15. Frank J. Korom, Professor of Religion and Anthropology, Boston University, USA

16. John Harriss, Professor, Simon Fraser University, Canada

17. Dilip Menon, Professor and Director, Centre for Indian Studies, University of Witwatersrand, South Africa

18. Raka Ray, Professor of Sociology and South and Southeast Asian Studies, University of California, Berkeley, USA.

19. Jonathan Spencer, Regius Professor of South Asian Language, Culture and Society, University of Edinburgh, UK

20. Constantine Nakassis, Assistant Professor of Anthropology, University of Chicago, USA

21. Sankaran Krishna, Professor of Political Science, University of Hawaii-Manoa, USA

22. Chandra Mallampalli, Professor of History, Westmont College, USA

23. Timothy Lubin, Professor, Washington and Lee University, USA

24. Linda Hess, Senior Lecturer, Stanford University, USA

25. Auritro Majumder, Assistant Professor, University of Houston, USA

26. P. Bagavandoss, Professor, Department of Biological Sciences, Kent State University, USA.

27. Shirin Rai, Professor of Politics and International Studies, University of Warwick, UK.

28. Indira Arumugam, Assistant Professor of Sociology, National University of Singapore

29. Michele Friedner, Assistant Professor, Stony Brook University, New York, USA

30. Dibyesh Anand, Associate Professor, University of Westminster, UK

31. Ravinder Kaur, Associate Professor, University of Copenhagen, Denmark.

32. James Caron, Lecturer in Islamicate South Asia, SOAS, University of London, UK.

33. Francis Cody, Associate Professor of Anthropology, University of Toronto, Canada.

34. Christopher Taylor, Assistant Professor of English, University of Chicago, USA

35. Alpa Shah, Associate Professor (Reader) of Anthropology, London School of Economics and Political Science, UK.

36. Bishnupriya Ghosh, Professor of English, University of California, Santa Barbara

37. Gloria Goodwin Raheja, Professor of Anthropology, University of Minnesota, USA

38. Anjali Arondekar, Associate Professor of Feminist Studies, University of California, Santa Cruz, USA

39. Nosheen Ali, Habib University, Karachi

40. Vazira Zamindar, Associate Professor of History, Brown University, USA

41. Kavita Philip, Professor of History, University of California at Irvine, USA

42. Bhavani Raman, Associate Professor, University of Toronto, Canada.

43. Subir Sinha, Development Studies, SOAS, London, UK.

44. Francesca Orsini, Professor, SOAS, London, UK.

45. Gilbert Achcar, Professor, SOAS, London, UK.

46. Nilanjan Sarkar, Deputy Director, South Asia Center, LSE, UK.

47. Jon Wilson, Senior Lecturer in History, King’s College, London, UK.

48. Peter van der Veer, Director and Professor at the Max Planck Institute for the Study of Religious and Ethnic Diversity, Göttingen, Germany.

49. Tam Ngo, Researcher, Max-Planck-Institute for the Study of Religious and Ethnic Diversity, Göttingen, Germany

50. Shakuntala Banaji, Lecturer, London School of Economics and Political Science, UK

51. Meena Dhanda, Reader in Philosophy and Cultural Politics, University of Wolverhampton, UK

52. Goldie Osuri, Associate Professor of Sociology, University of Warwick, UK.

53. Shana Sippy, Visiting Scholar, Carleton College, USA

54. Sarah Hodges, Associate Professor, University of Warwick, UK

55. Mukulika Banerjee, Associate Professor of Anthropology and Director, South Asia Centre, London School of Economics, UK

56. Paula Chakravartty, Associate Professor, MCC and Galatin, New York University, USA

57. Narendra Subramanian, Professor of Political Science, McGill University, Canada, and Visiting Senior Research Fellow, Max-Planck-Institute for the Study of Religious and Ethnic Diversity, Göttingen, Germany.

58. Gurminder K Bhambra, Professor, University of Warwick

59. Rashmi Varma, Associate Professor, University of Warwick, UK

60. Uday Chandra, Assistant Professor of Government, Georgetown University, Qatar

61. Anupama Rao, Associate Professor of History, Barnard College, Columbia University, USA

62. Neena Mahadev, Postdoctoral Fellow, Max Planck Institute for the Study of Religious and Ethnic Diversity, Germany.

63. Nusrat S Chowdhury, Assistant Professor of Anthropology, Amherst College, USA

64. Kavin Paulraj, Lecturer, Saint Mary’s College of California, USA

65. Asiya Alam, History Department, Louisiana State University, USA

66. Ananya Chakravarti, assistant professor of history, Georgetown University

67. Jesse Knutson, Assistant Professor of Sanskrit, University of Hawaii Manoa

68. Gopal Balakrishnan Professor, History of Consciousness, University of California Santa Cruz, USA

69. Geir Heierstad, Research Director, Norwegian Institute for Urban and Regional Research, Norway

70. Kenneth Bo Nielsen, Coordinator, Norwegian Network for Asian Studies, Norway.

71. Andrew Liu, Assistant Professor of History, Villanova University, USA

72. Toussaint Losier, Assistant Professor of Afro-American Studies, University of Massachusetts, Amherst, USA.

73. Pinky Hota, Assistant Professor of Anthropology, Smith College, Northampton MA

74. Madhumita Lahiri, Assistant Professor of English, University of Michigan, Ann Arbor, USA

75. Juned Shaikh, Assistant Professor, Department of History, University of California, Santa Cruz

76. Neilesh Bose, Canada Research Chair in Global and Comparative History University of Victoria

77. Lawrence Cohen, Professor and Director, Institute of South Asia Studies, University of California, Berkeley, USA

78. John Holmwood, Professor of Sociology, University of Nottingham, UK.

79. Balmurli Natrajan, Associate Professor, William Paterson University of New Jersey, USA.

80. Richard Alexander, Lecturer in Financial Law, SOAS University of London, UK.

81. Eleanor Newbigin, Senior Lecturer, SOAS, University of London

82. Chinnaiah Jangam, Assistant Professor of History, Carleton University, Canada.

83. Matthew J Nelson, Reader in Politics, SOAS, University of London.

84. Sîan Hawthorne, Lecturer in Critical Theory & the Study of Religions, SOAS, London, UK.

85. Amrita Shodhan, SOAS, University of London, UK.

86. Michael Hutt Professor and Director, SOAS South Asia Institute, University of London, UK

87. Jonathan Goodhand, Professor in Conflict and Development Studies, SOAS, University of London, UK

88. Nitasha Kaul, Author and academic, University of Westminster, London.

89. Deepankar Basu, Associate Professor, University of Massachusetts, Amherst.

90. Somak Biswas, Doctoral Candidate, Department of History, University of Warwick, UK

91. Michael Levien, Assistant Professor of Sociology, Johns Hopkins University, USA

92. Nilisha Vashist, M.Phil/PhD student, University College London, UK

93. Rama Mantena, Associate Professor of History, University of Illinois at Chicago, USA

94. Sohini Kar, Assistant Professor, London School of Economics and Political Science, UK

95. Dr. Jacob Copeman, Social Anthropology, University of Edinburgh.

96. Dr. Priyamvada Gopal, Cambridge University, UK.

97. Carole Spary, Assistant Professor, University of Nottingham, UK.

98. James Putzel, Professor of Development Studies, LSE, UK.

99. Romola Sanyal, Assistant Professor, London School of Economics and Political Science, UK

100. Dr Barnita Bagchi, Literary Studies, Utrecht University, Netherlands.

101. Dag Erik Berg, Postdoctoral Fellow, Center for Modern Indian Studies, University of Göttingen, Germany.

102. Dr Kalpana Wilson, London School of Economics, UK

103. Chetan Bhatt, Professor, Department of Sociology, London School of Economics and Political Science, UK

104. Rahul Rao, Senior Lecturer in Politics, SOAS, University of London, UK

105. Dr Alan Bullion, The Open University, UK

106. Katharine Adeney, Professor and Director of the Institute of Asia and Pacific Studies, University of Nottingham, UK

107. Dr. Mara Matta, Modern Literatures of the Indian Subcontinent, SAPIENZA Università di Roma, Italy

108. Pritam Singh, Professor of Economics, Oxford Brookes University, UK.

109. Dr. Sunil Kumar, Lecturer, London School of Economics, UK

110. Maitreesh Ghatak, Professor of Economics, London School of Economics and Political Science, UK

111. Richa Nagar, Professor, University of Minnesota, Twin Cities, USA

112. Mary Kaldor, Professor, London School of Economics and Political Science, UK

113. David Lewis, Professor of Social Policy, London School of Economics and Political Science, UK

114. Dr. Suthaharan Nadarajah, Lecturer, SOAS, University of London

115. Dr. Navtej Purewal, SOAS, University of London, UK

116. Shruti Sinha, Toulouse School of Economics, France.

117. Robert Cassen, Professor

118. Apurba Kundu, Deputy Dean, Anglia Ruskin University, UK.

119. Rachel McDermott, Associate Professor of Religion, Barnard College, Columbia University, USA.

120. Dr. Clarinda Still, Contemporary South Asian Studies Programme, University of Oxford, UK

121. Chad M. Bauman, Associate Professor of Religion, Butler University, USA.

122. Nandini Bhattacharya, Lecturer in History, University of Dundee, UK

123. Vijay Prashad, Professor, Trinity College, USA and Chief Editor, LeftWord Books.

124. Lucinda Ramberg, Assistant Professor, Cornell University, USA.

125. Pippa Virdee, Senior Lecturer in Modern South Asian History, De Montfort University, UK.

126. Andrew J. Nicholson, Associate Professor, State University of New York, Stony Brook

127. Dr. Teena Purohit, Department of Religion, Boston University.

128. Sahana Bajpaie, Instructor in Bengali, SOAS, University of London, UK.

129. M. V. Ramana, Physicist, Princeton University, USA

கடும் சாதிய நிழல் படிந்த தமிழக கல்வி நிறுவனங்கள்!

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

‘தமிழகத்தில் தலித் ஒடுக்குமுறை பள்ளிக்கூடங்களிலேயே ஆரம்பித்துவிடுகிறது’

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை இந்திய கல்வி நிறுவனங்கள் பலவற்றிலும் சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை வலுக்கச் செய்திருக்கிறது.

இந்தச் சூழலில், சாதி பாகுபாடு உயர் கல்வி நிறுவனங்களில் எந்த அளவுக்கு வேரூன்றியிருக்கிறது. அரசாங்கத்தின் அதிரடி பட்ஜெட் குறைப்புகளும், அவசரகதி முடிவுகளும் ஒரு தலைமுறையையே எவ்வாறு துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் பகுப்பாய்வு செய்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில், நெல்லையில் பள்ளி மாணவர்கள் தாங்கள் என்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக வெவ்வேறு நிறத்திலான கைப்பட்டைகளை அணியும் பழக்கம் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இந்த நோட்டீஸ் நடவடிக்கை காலம் தாழ்த்தி எடுக்கப்பட்ட ஒன்று என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், சாதி பகட்டு மிகுந்த தென் மாவட்டங்களில் இது போன்ற சாதியை பறைசாற்றும் சாய பட்டைகள் அணிவது காலங்காலமாகவே இருந்து வருகிறது.

தமிழக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சாதி ரீதியிலான பிரிவினைவாதம் எப்படி இழையாடியுள்ளது என்பதை உணர்த்துவதற்கு இதைவிட தெளிவான சான்று இருக்க வாய்ப்பில்லை.

ஆண்டாண்டு காலமாக நீளும் தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைக்கு 2012-ல் இளவரசன் படுகொலை மற்றுமொரு சாட்சியம். தலித் சமூகத்தைச் சேர்ந்த இளவரசனுக்கும், வன்னியர் சமூகத்தைச் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு) சேர்ந்த திவ்யாவுக்கும் இடையேயான காதல் சாதி மோதலாக மாற்றப்பட்டது. தருமபுரி சாதித் தீயால் பற்றி எரிந்தது.

தமிழகத்தில், இன்னமும் கலப்புத் திருமணங்களுக்கு எதிரான சகிப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இளவரசன் – திவ்யா காதல் விவகாரத்துக்கு பின்னர், வட தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் வன்னியர் சமூகத்தின் பிரதிநிதியாக திகழும் பாட்டாளி மக்கள் கட்சி, கலப்புத் திருமணங்களுக்கு எதிராக பல்வேறு அரசியல் அமைப்புகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது.

கலப்பு திருமணங்களை ‘நாடகத் திருமணங்கள்’ என்று விழித்த பாமக, இதிலிருந்து தங்கள் சமூக பெண்களை பாதுகாக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தது.

பாமகவின் இந்த அறைகூவல் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவச் சமூகத்தினர் மத்தியில் வேகமாக பரவியது. அவர்களும், கலப்புத் திருமணங்களுக்கு எதிராக தங்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். ‘கலப்புத் திருமணங்களுக்கு எதிரான பிரச்சார குழு’ என்ற பெயரில் ஒரு இயக்கமும் உருவானது. நாமக்கல் மாவட்ட கல்லூரிகளிலும் இது காட்டுத் தீ போல் பரவியது. அவர்கள் விநியோகித்த துண்டு பிரசுரங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை எள்ளி நகையாடும் வாசகங்களின் நெடி இருந்தது.

இத்தைகைய சாதிக் கொடுமைகளுக்கு இன்னும் பல சான்றுகள் இருக்கின்றன.

மதுரை-விருதுநகர் எல்லையில் உள்ள குறையூர் எனும் கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் கடந்த 40 ஆண்டுகளாகவே தலித் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது மேலுமொரு சான்று.

குறையூரில் அரசுப் பள்ளியிலேயே சாதி அடக்குமுறை இருப்பதால் அப்பகுதி தலித் மக்கள் தங்கள் பிள்ளைகளை மிஷனரி பள்ளியில்தான் படிக்க வைக்கின்றனர் என்ற உண்மை தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றிருக்கிறார் சாதி அடக்குமுறைக்கு எதிராக போராடும் எவிடன்ஸ் தொண்டு நிறுவனத் தலைவர் கதிர்.

கல்வி நிறுவனங்களில் சாதிய ஆதிக்கம் குறித்து தலித் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் கூறும்போது, “மாணவர்கள் முன்பைவிட இப்போதுதான் சாதிய அடையாளங்களை அணிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

தங்கள் சாதி தலைவர்கள் புகைப்படம் அடங்கிய லாக்கெட், பிரேஸ்லெட்டுகள் அணிந்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றனர்.

கல்வி நிலையங்களில் தீண்டாமை அப்பட்டமாக புழக்கத்தில் இல்லை. ஆனால், சில சலுகைகளை பெறுவதில் குறிப்பிட்ட சமுதாய மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் முன்னுரிமை, சக மாணவர்கள் மத்தியில் கிடைக்கும் மரியாதை போன்ற விஷயங்களில் சாதி பாகுபாடு வெளிப்படுகிறது” என்றார்.

தலித் இலக்கியம்:

கல்வி நிறுவங்களில் நிலவும் சாதிய பாகுபாடுக்கு இன்னுமொரு சான்று தலித் இலக்கியங்களின் புறக்கணிப்பு. தென் மாவட்ட கல்லூரிகள் சில மிகக் கவனமாக, லாவகமாக தலித் இலக்கியங்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளன. இதற்குக் காரணம் இதர பிற்படுத்தப்பட வகுப்பினரின் ஆதிக்கமே எனக் கூறுகிறார் தலித் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

தமிழக கல்வி நிறுவனங்களில் எப்போது புகைந்து கொண்டிருக்கும் சாதி சில சமயங்களில் நெருப்பாக கொளுந்துவிட்டு எரிவதும் உண்டு.

அப்படித்தான், கடந்த 2008 நவம்பர் 12-ல், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி வளாகம் போர்க்களமானது. கல்லூரி விழா தொடர்பான போஸ்டரில் ஓபிசி வகுப்பு மாணவர்கள் அம்பேத்கர் என்ற பெயரை புறக்கணித்ததே பிரச்சினைக்கு காரணமானது. இதனையடுத்து தலித் சமூக மாணவர்களுக்கும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. பயங்கர ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி சன்முகம் கமிஷன், சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பின்னணில் சாதி அமைப்புகள் இருந்ததாக குறிப்பிட்டது என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.

சாதி ஆதிக்கம் குறித்து, எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான மார்க்ஸ் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் பேரசிரியர்களும் சாதி அடிப்படையில் குழுக்களாக பிரிந்து கிடக்கின்றனர்” என்றார். பல்கலைக்கழகங்களில் எஸ்.சி இடஒதுக்கீடு கீழ் இருக்கும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதேயில்லை என்று மேலும் ஒரு குற்றச்சாட்டை மார்க்ஸ் முன்வைத்தார்.

இது குறித்து சற்று விரிவாக விவரித்த அவர், தலித்துகளுக்கும் கல்வி நிறுவனங்களில் பணி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அமல்படுத்துவதில் இருந்து தப்பிக்க ஆதிக்க சாதியினர் கடைபிடிக்கும் பல்வேறு வழிவகைகளும் கூறினார். அவ்வாறாக பரவலாக கூறப்படும் சாக்கு, ‘திறமையானவர் கிடைக்கவில்லை அதனால் தலித்துக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை’. இவ்வாறு மார்க்ஸ் கூறினார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் பிரமர் மோடிக்கு எதிராக அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர் அமைப்பு செயல்படுவதாக அனுப்பப்பட்ட ஒரு மொட்டைக் கடிதம் தலித் மாணவர்கள் எத்தகைய பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது என்பதை மறக்க முடியாது எனக் கூறும் மார்க்ஸ், “மாநில அரசுக்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. 49 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தை மாறி மாறி ஆண்டிருந்தாலும், சாதி ஒழிப்புக்காக அவர்கள் எடுத்த நடவடிக்கை என்னவோ மிகச் சொற்பமானதேஎன்றார்.

 

நேசிக்க மறந்தோமா நாம்?

சாதி, மொழி, நிறம், பிராந்தியம், தேசம் மற்றும் வர்க்க அடையாளங்கள் மற்றும் பிரிவினைகளைத் தாண்டி ஒரு மனிதன் சகமனிதனை நேசிப்பதற்கும் விடுவிப்பதற்கும் கல்வி உதவ வேண்டும். அத்தகைய சுதந்திரச் சிந்தனையை வளர்க்கும் கல்வியைத்தான் இந்தியப் பள்ளிகளும் உயர்கல்விக் கூடங்களும் வழங்க வேண்டும் என்று சுதந்திர இந்தியாவை நிர்மாணித்த தலைவர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் பல்கலைக்கழக விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட தலித் ஆய்வு மாணவர் ரோகித் வேமூலாவின் தற்கொலை அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைகளைச் சிதைப்பதாகத்தான் உள்ளது. சாதிய ஒடுக்குமுறையும், தீண்டாமையும் பாகுபாடுகளும் வன்முறைகளும் நம் கண்ணுக்கே தெரியவராத இந்தியக் கிராமங்களில்தான் நிகழ்கிறது என்று பெரும்பாலானோர் இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் சாதி நமது வீடுகள், பள்ளிகள், விடுதிகள், கல்லூரிகள், உணவுப் பழக்கவழக்கங்கள், நாம் புழங்கும் பொதுவெளிகள் என எங்கும் நிறைந்திருக்கின்றன. காதல், திருமணம் தொடங்கி வேலை, நட்புகள் வரை சாதி நவீன ரூபங்களில் நம்மைத் தொடரவே செய்கின்றன.

சமீப வருடங்களில் இந்தியாவெங்கும் பள்ளிகள் மற்றும் உயர்கல்விக் கூடங்களிலும் சாதிய அடையாளங்கள் அடிப்படையில் மாணவர்களிடையே மோதல்களும் பிரிவினைகளும் அதிகரித்துள்ளன. பாடப் புத்தகங்களிலும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டத் தலைவர்களின் தேசப் பங்களிப்புகள் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன.

தமிழகப் பள்ளிகளில் ஒவ்வொரு சாதி மாணவரும் தனித்தனி நிறங்களில் கைகளில் கயிறு கட்டி அணியணியாகத் திரளும் செய்திகளையும் சமீபத்தில் கேள்விப்பட்டுவருகிறோம். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் உடல்வேலையில் ஈடுபடுத்தப்படுவதும் தரையில் உட்கார வைக்கப்பட்டுத் தனியாக மதிய உணவு வழங்கப்படும் முறைகளும் நடைமுறையில் உள்ளன. தலித் மாணவர்கள் பள்ளியை விட்டு விலகும் சதவீதமும் சமீபகாலத்தில் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக்கல்வியை இத்தகைய பாகுபாடுகள் மற்றும் நெருக்கடிகளை மீறி போராடி முடிக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்விக் கூடங்களில் இன்னொரு பெரிய சவால் காத்திருக்கிறது. அவர்களின் மேம்பாட்டுக்கு அரசியல் சாசனம் உறுதியளித்திருக்கும் இடஒதுக்கீடு முறையே அவர்களை ஒதுக்கவும் ஒரு வகையில் காரணமாகிவிடுவதை என்னவென்று சொல்ல! இட ஒதுக்கீட்டில் ஐ.ஐ.டி மற்றும் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்புக்கு வரும் தலித் மாணவர்கள் இட ஒதுக்கீட்டைக் காரணம் காட்டியே அவமதிப்பைச் சந்திக்கின்றனர். கல்வி ரீதியாக, நிர்வாக ரீதியாக தொடர் புறக்கணிப்புகளுக்குள்ளாகி அவர்கள் தேர்வுகளில் தோற்கும் நிலை ஏற்படுகிறது. வளாகத்துக்குள்ளேயே தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடக்கின்றன.

கல்விக்காக துரோணருக்கு விரலைக் கொடுத்த இதிகாச காலம் தொடங்கி, இன்று வரை அறிவும் வாய்ப்புகளும் சில வகுப்பினருக்கே என்னும் மனப்போக்கு இந்தியாவில் இன்னும் தொடர்வதற்கான அடையாளம்தான் ரோகித் வேமூலாவின் தற்கொலை.

கல்லூரிகளில் சாதி, சாதிய ஒடுக்குமுறை பற்றி உரையாடல் எழும்போதெல்லாம் இட ஒதுக்கீடு சார்ந்த விவாதமாக மாற்றப்படுகிறது. இட ஒதுக்கீட்டில் வரும் மாணவர்கள் குறைவான அறிவுடையவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கான எந்தக் கோரிக்கையும் மதிப்பில்லாதவர்கள் கோரும் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இட ஒதுக்கீடு அறுபது ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பினும், உயர்கல்விக் கூடங்களிலும், நிர்வாக வட்டங்களிலும், ஆசிரியப் பணிகளிலும் உயர் சாதியினரே நிறைந்துள்ளனர். அந்த இடத்திலிருந்துதான் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறையும் பாகுபாடுகளும் தொடங்குகின்றன.

ரோகித் வேமூலா, யாகூப் மேமனின் மரண தண்டனை நிகழ்வைக் கண்டித்து மரண தண்டனைக்கு எதிராகப் போராடியவர். அம்பேத்கர் பெயரில் இயங்கிய மாணவர் அமைப்பில் செயலாற்றியவர். யாகூப் மேமன் மரண தண்டனையை எதிர்த்ததால், வளாகத்தில் இயங்கிய ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினரின் எதிர்ப்பையும் புகார்களையும் சந்தித்தவர். மத்திய அமைச்சர் பண்டார தத்தாத்ரேயின் வலியுறுத்தலால் தேசத்துரோகம், சாதியவாதம் ஆகிய குற்றங்களின் அடிப்படையில் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

ஒரு பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுக்கிடையே நடந்த கருத்துவேறுபாடு, இத்தகைய பழிவாங்கலுக்கு எப்படி காரணியானது? ரோகித், விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் விடுதி வளாகத்துக்கு வெளியே சில நாட்களின் இரவுகளில் தங்கி தன்னை மீண்டும் சேர்க்குமாறு போராடிய பிறகே தற்கொலை செய்துகொண்டார். உதவித்தொகையும் மறுக்கப்பட்டதால் அவரிடம் பணம் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை.

பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி வளாகங்களில் செயல்படும் ஏ.பி.வி.பி. போன்ற அமைப்புகளால் எப்படி ஒரு தலித் மாணவருக்கு எதிராக நிர்வாகத்தைப் பணியவைக்க முடிகிறது? ஒரு மத்திய அமைச்சர் எப்படி ஒரு மாணவரின் வெளியேற்றத்துக்குத் துணைபோக முடிகிறது?

கல்வி என்பது பிறரை, பிற வாழ்க்கை நிலைகளை நேசிக்கும் சாதனம் என்பதை மறந்துவரும் தலைமுறையா நாம்? அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் எவ்வளவோ தொலைவையும் இடைவெளியையும் கடந்து தொடர்புகொள்ளும் ஊடகங்கள் பெருகிய காலத்தில் வாழ்ந்துவருகிறோம். ஆனால் அத்தனை ஊடகங்களிலும் பழைய வெறுப்புகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுவருகின்றன. நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிர்ஷ்டம். இன்று நாம் எல்லாரும் இந்தத் துரதிர்ஷ்டத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம் என்று சென்ற நூற்றாண்டில் ஆல்பெர் காம்யு சொன்னது இப்போது மிகவும் உண்மையாக மாறியுள்ளது.

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

ரோஹித்துகள் ஏன் இறக்கிறார்கள்?

பள்ளிப் பருவத்தில் தலித் நண்பன் ஒருவன் எனக்கு இருந்தான். ஒருமுறை, சற்றே வேடிக்கையாக அவனிடம் நான் இப்படிக் கேட்டேன்:

“நம்ம ரெண்டு பேரு குடும்பமும் ஓரளவு வசதிதான். ஆனா, என்னை மாதிரி இல்லாம நீ மட்டும் இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்கிறியே. என் இடத்துக்கு நீயும் உன் இடத்துக்கு நானும் மாறிக்கொண்டால் என்ன?” அதற்கு அந்த நண்பன் சீரியஸாகவே பதில் சொன்னான்: “தோழா, ஒரு தலித்தாக இருப்பதுன்னா என்னன்னே உனக்குத் தெரியாது. ஒனக்கு மட்டுமல்ல யாருக்கும் அந்த நிலை ஏற்படக் கூடாது.”

அதற்கும் பல ஆண்டுகள் கழித்தே அந்த நண்பன் சொன்னதில் இருந்த வலியையும் பரிதவிப்பையும் நான் புரிந்துகொண்டேன். மற்றுமொரு தலித் நண்பன் (அவனுடைய பேர் ராமு என்று சும்மா வைத்துக்கொள்வோம்) தனது தோழி ஒருத்தியுடன் (அவள் பேர் ராணி என்று வைத்துக்கொள்வோம்) பேசிய விஷயத்தைப் பற்றி என்னிடம் குறிப்பிட்டபோதுதான் எனக்கு எல்லாமே உறைத்தது.

ராமு நல்ல பையன். என்ன… கொஞ்சம் தாழ்வுமனப்பான்மை கொண்டவன். தனது சாதிப் பின்னணியை எப்போதுமே மறைக்க முயல்வான். ஆகவே, ராமு ஒரு தலித் என்பது ராணிக்குத் தெரியவில்லை. அவர்களுக்குப் பொதுவான நண்பன் ஷ்யாமுவைப் பற்றி அவர்கள் பேசியது இது:

ராணி:

“ஏய், ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஷ்யாமு ஒரு தலித் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப்போறான்.”

ராமு:

“அப்படியா… அவனுக்கு என்னோட வாழ்த்துக்கள்!”

ராணி:

“ஆனா, அவள் ஒரு தலித் பொண்ணுப்பா.”

ராமு (தனது மனம் புண்பட்டதை மறைக்கும் விதத்தில்):

“இந்தக் காலத்தில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. உலகம் முன்னே போய்க்கிட்டிருக்கு.”

ராணி:

“இருக்கலாம்பா, ஆனாலும்… ஒரு தலித் பொண்ணைப்போய்…?”

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ராணி முற்பட்ட வகுப்பை அல்ல; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண். சாதிப் பாகுபாட்டால் பாதிப்புக்குள்ளாகுபவர்கள்கூட இந்தச் சாதி நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது நமது ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனநிலையில் சாதி அமைப்பு எந்த அளவுக்கு ஊடுருவியிருக்கிறது என்பதன் அடையாளம்.

மோசமான அந்த அனுபவத்தைப் பற்றிப் பின்னால் நினைவுகூரும்போது ராமு என்னிடம் சொன்னான், “சகோதரா, இடஒதுக்கீட்டின் காரணமாக நல்ல வேலையைக்கூட ஓரளவு சுலபமாக என்னால் பெற்றுவிட முடியும். ஆனால், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒரு பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா அவளோட அப்பா, அம்மாவை அதுக்குச் சம்மதிக்க வைக்கிறதுக்குத்தான் வாய்ப்பே இல்லை. இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ். பதவியை நான் வாங்குனாகூட ஆதிக்கச் சாதிப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்குறது அவ்வளவு சுலபமில்லை.”

சாதி அடுக்கின் மேல்நிலையில், உயரிய அந்தஸ்துடன் இருக்கும் நாமெல்லாம் சாதியைப் பற்றியும் இடஒதுக்கீட்டைப் பற்றியும் பேச ஆரம்பித்தால், பேச்சின் முடிவு ‘இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும்’ என்பதாகத்தான் இருக்கும். நண்பர்களே, சாதிரீதியான பாகுபாடு என்பது நம்மால் நினைத்தே பார்க்க இயலாத அளவுக்குக் கொடுமையானது. இந்த உண்மையை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொண்டால்தான், ரோஹித் வெமுலாக்கள் ஏன் பிறக்கிறார்கள் என்பதும் ரோஹித் வெமுலாக்கள் ஏன் சாகிறார்கள் என்பதும் ‘மேல்சாதி’ குடும்பங்களில் பிறந்த நமக்குப் புரியும்!

– கரண் ராகவ் ஃபேஸ்புக் பதிவின் மொழிபெயர்ப்பு: தம்பி

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்