Posts Tagged ‘அஜீத்’

​அஜீத் 57: 60 சதவீத படப்பிடிப்புதான் முடிஞ்சிருக்கு.. இன்னும் 55 நாள் ஷூட் பாக்கி இருக்கு!

அஜீத் நடிக்கும் 57 வது படத்தின் ஷூட்டிங் நிலைமை என்ன? ஓவர் பட்ஜெட்டாமே… தாங்குமா தயாரிப்பு நிறுவனம் என்றெல்லாம் செய்திகள் எக்குத் தப்பாக வந்து கொண்டிருக்கின்றன.
இதோ அஜீத் 57 பற்றி ஒரு க்விக் அப்டேட்…
படத்தின் 60 சதவீதப் படப்பிடிப்புதான் இதுவரை முடிந்திருக்கிறது. ஐரோப்பா மற்றும் ஹைதராபாத்தில் இந்தக் காட்சிகள் படமாகியுள்ளன.

மீதியுள்ள காட்சிகளை எடுத்து முடிக்க 55 நாட்கள் தேவை.. அதுவும் பல்கேரியாவில்தான் முழுப் படப்பிடிப்பும் என்று கூறியுள்ளாராம் இயக்குநர் சிவா. இதற்காக வெகு சீக்கிரமே பல்கேரியா செல்கிறது படக்குழு.
அஜீத் இந்தப் படத்தில் ஒரு இன்டர்போல் ஆபீசராக நடிக்கிறார். அவர் மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமல் மகள் அக்ஷரா ஹாஸன் முக்கிய வேடத்தில் வருகிறார். வில்லன் வேடத்தில் விவேக் ஓபராய்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
படம் அநேகமாக தமிழ்ப் புத்தாண்டுக்கு தயாராகிவிடும் என்கிறார்கள். பெரும் பணத்தை இந்தப் படத்தில் முதலீடு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன்.

Thanks:one india tamil

 

முன்பெல்லாம் அஜீத் பேசினால்தான் பரபரப்பு , ஆனால் இப்பொழுது அஜீத் எதைச் செய்தாலும் அது பரபரப்பாகிவிடுகிறது!

தன் வீட்டு வேலையாட்களுக்கு வீடு கட்டித் தந்தார், விமானத்தில் செல்லும் பொழுது விவேக்கிற்கு கைக் கடிகாரம் பரிசளித்து இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார் , பட ஷூட்டிங்கில் பிரியாணி செய்து எல்லோருக்கும் பரிமாறினார் எனப்  பல செய்திகள் கடந்த பல மாதங்களில் வந்து போயின!

இன்று அஜீத், வீரம் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் அப்புக் குட்டியை வைத்து போட்டோஷூட் எடுத்துள்ளார்!   என்ற செய்தி facebook , twitter , நியூஸ் பேப்பர் எங்கும் பரபரத்த செய்தி !அதோடு மட்டும் இல்லாமல் அப்புக்குட்டியிடம் ,உங்கள் சொந்தப் பெயரையே வைக்கலாமே என பரிந்துரையும் செய்து இருக்கிறார்!

முன்னதாக அஜீத் அப்புக்குட்டியிடம் நீங்கள் ஏன் ஒரே மாதிரி கேரக்டர்ல நடிக்கறீங்க ! வித்தாயசமான கேரக்டர்ல நடிக்கலாமே என்று கேட்டு இருக்கிறார் , அதற்க்கு அவர் இது போதும் அண்ணே  என்று சொல்லி இருக்கிறார் ! அதற்க்கு அஜீத் , நானே உங்களை வைத்து நேரம் கிடைக்கும் பொழுது போட்டோஷூட் எடுக்கறேன் என்று சொன்னதோடு இல்லாமல் நேற்று அதனை  செய்தும் காட்டி இருக்கிறார்! அதற்காகவே ஒப்பனைக் கலைஞர்களை வர வைத்து , ஒரு ஸ்டுடியோவை வாடகைக்கு எடுத்து இந்த போட்டோஷூட்டை முடித்து இருக்கிறார் ! இதைப் பற்றி அப்புக் குட்டி கூறும் பொழுது ,

அஜித் என்னைப் படமெடுத்தது என் பாக்கியம் என்று அப்புக்குட்டி கண்ணீர் மல்க கூறி உள்ளார் !

இது இப்படி இருக்க அஜீத் குறும்படம் இயக்கப் போகிறார் என்ற வதந்தி கூட பரவியது!

சமீபத்தில் நடிகரும் , எழுத்தாளருமான சோ அவர்கள் அஜீத்தைப் பற்றி இவ்வாறு கூறி இருந்தார் ” எம்.ஜி.ஆர் போல சக கலைஞர்கள் முதல் ரசிகர்கள் வரை தனது உதவியால் , செயல்பாட்டால் வசீகரிக்க கூடியவர்  அஜீத் என்று  சொல்லி இருந்தார் !

அஜீத் கஷ்டப் பட்டே இன்று  உச்ச நட்சத்திரம் ஆகி உள்ளார். அதனால்தான் என்னமோ தான் வந்த நிலைமையை இன்னும்  மறக்காமல் இருக்கிறார் . தன்னம்பிக்கை உள்ளவர் அஜீத் என்பதைத் தாண்டி எல்லோரிடமும் மரியாதையாகவும் , பண்புடனும் பழகுகிறார் ! தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்தது, முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்வது , செய்தாலும் பெரும்பாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாதது ,ரசிகர்களின் மீது நம்பிக்கையும் அன்பும் வைத்திருப்பது போன்ற பல காரணங்களால் அவர் தனது ரசிகர்கள் மட்டுமின்றி மற்றவர்கள் மனதிலும் உயர்ந்து நிற்கிறார்!

நன்றி:முதல் படம் விகடனுக்குச் சொந்தமானது, நன்றி விகடன்!!இரண்டாவது படம் வாட்ஸ் அப்ல நண்பர் அனுப்பியது!