Archive for the ‘360 சினிமா டாக்கீஸ்’ Category

#Shared

​ஒரு தவறு செய்தால்,அதைத் தெரிந்து செய்தால்,அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்!
ஏன் சார் முக்குறீங்க?!
#S3

​இப்ப கொலப் பசில இருக்கேன்ன்ன்ன்…
டேய்!அந்த சமோசா பிளேட்ட உள்ள எடுத்துவை! இவனுங்களையெல்லாம் நம்பி எதையும் வெளில வைக்க முடியாது!!(கவுண்டமணிவாய்ஸ்)
#S3

​#சிங்கம்னா கர்ஜிக்கும்,இது ஏன் கத்துது!
#S3

​#புதிய_முயற்சிகள் வெற்றியடையும் வரை சாதனைகளாவதில்லை!
அங்கீகரித்தால் புதிய முயற்சிகளும் #சாதனைகளே!
இன்றைய #கமல்ஹாசன் நாளைய பாடம்!
இந்த #கலை_இன்ஜினியர் மாணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
#HBDKAMAL


(புரியுதா?! கமல் போல பேச முயற்சி செய்துள்ளேன்!!)

​#வட்டியும்_முதலும் தொடரில் இருந்துதான் #ராஜுமுருகன் என்பவரைத் தெரியும்.
 அவருடைய படைப்புகள் எல்லாம் எதார்த்தமானது!!
சினிமா என்பது வாழ்க்கைக்கு அருகில் என்று நம்பப்படுவது இது போன்ற சில படைப்புகளால்தான்!
ஜோக்கர் நம்மை பிரதிபலிக்கும் 🙂 🙂
#ஜோக்கர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

கருவி
Written,Cuts and Direction :Sundar Gandhi

Cinematography:Mari Radhika

கதைக் களம் +
ஸ்க்ரீன் ப்ளே +
குழந்தைகளின் நடிப்பு +
Background மியூசிக் +

விறுவிறுப்பு –

Rating: 3/5

Thanks: Sundar Gandhi Team!

போஸ்டர் ரீலீஸ் கூட எங்களுக்கு படம் ரீலீஸ் மாறிதான்! தல டா!!
#vethalam

விண்ணுலகம் மட்டுமில்ல பாதாளம் உலகம் வரை பாயும் எங்கள் வேதாளம்! #vethalam

இந்த தீபாவளியும் தல தீபாவளிதான் டோய்!! #vethalam

image

நம்மைச் சுற்றி நடக்கும் பல குற்றங்கள்தான் கதை (மருந்து கம்பெனிகளின் உலகச் சந்தை, அதை வைத்து நடக்கும் குற்றங்கள்),அதனை ஹீரோ தானே தேடிச் சென்று எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் திரைக் கதை. ஆம் தினசரி குற்றங்களாக நாளிதழ்களில் நாம் படித்ததும் ,டிவிக்களில் நாம் கேட்டதையும் சுபாவுடன் சேர்ந்து கதையாகக் கொடுத்து , அதைத் திரைக் கதையில் வெற்றியடையச் செய்துள்ளார் ஜெயம் ராஜா என்கிற இயக்குனர் மோகன் ராஜா ( ஜெயம் ரவி அண்ணன்தான்பா -குழப்பிக்காதீங்க! புதுசா கேட்ட பெயர் மாறி இருக்கு என்று நினைத்து!!).

File:Thani Oruvan.jpg

கொஞ்ச நாளைக்குப் பிறகு மீண்டும் திரையில் அரவிந்த்சாமி! நடிப்பில் அசத்தியுள்ளார். பிசினஸ் பக்கம் போகாம தொடர்ந்து  நடித்து இருந்திருக்கலாம் (எப்போதாவது மட்டும் நடிக்காம)என்ற எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி உள்ளார்.பெரிய மிரட்டல் இல்லை ஆனால்  அமைதியான ,அதே வேளையில் அசுர குணத்துடன் , புத்திசாலித் தனத்துடனும் கூடிய வில்லன் இவர். பல இடங்களில் அவரின் சிரிப்பே நடித்து விடுகிறது! வில்லன்தான் என்றாலும் ஹீரோ ,ஹீரோயின் போல மனதில் நிற்கிறார்.அவரைச் சுற்றித்தான் கதையே! ஆனாலும் கிளைமாக்ஸ் சீன்ல (நீங்க நல்லவரா கெட்டவரா என்று கேட்க வச்சுடுவார்!!) செம மாஸ் காட்டி இருக்கிறார்!!

படத்தில் வில்லனுக்குத்தான் அறிமுகக்  காட்சி!! அதுவும் மாஸ்(கொஞ்சம் சினிமாத்தனம்)! தனக்கு மூன்று பினாமிகள்; கூடவே அப்பாவி அப்பா இவர்களை வைத்துக் கொண்டு பெரிய குற்றங்களைச் செய்கிறார் அரவிந்த் சாமி. அந்தப் பெரிய குற்றங்கள் சிறு சிறு குற்றங்களாக சிறுவயதில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது!ஆனால் சிறு வயது பையனுக்கு ஏன் இந்த குற்ற எண்ணம் என்று தோன்றினாலும், ஏன் இருக்கக் கூடாது என்பதற்கு நம் சமூகத்தையே உதாரணமாகக் காட்டுகிறார் இயக்குனர்.

நாசர் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. சந்தர்ப்ப அரசியல்வாதியாக (அமைதிப் படை மணிவண்ணன் என்று சொல்லலாம்) நடித்து உள்ளார். அரவிந்த் சாமிக்கு அப்பாவி அப்பாவாக தம்பி ராமையா(சினிமாத்தனமான அப்பாவி)! சீரியஸ் ஆன இடங்களிலும் வசனத்தாலும் , உடல் மொழியாலும் நம்மை சிரிக்க வைக்கிறார். கடைசியில் பாசத்திலும் கச்சிதமாக நடித்துள்ளார்.

போலிஸ் அதிகாரியாக ஜெயம் ரவி! ட்ரைனிங் போதே சமூக ரவுடிகளை  நண்பர்களுடன் (நண்பர்களாக நடித்தவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்)சேர்ந்து  துவம்சம் பண்ணுகிறார். ஜெயம் ரவி போலிஸ் அதிகாரி என்று பக்கம் பக்கமாக பேசி நம்மை வெறுப்பெல்லாம் செய்வதில்லை. கதைக்குத் தேவையானதை பேசி இருக்கிறார்!

இயல்பாக அதேவேளையில் பஞ்ச்ஆக  இருக்கிறது பட வசனங்கள். “நாம் என்ன செய்கிறோம் என்பதை நாளை வளரும் இளம் சிட்டுக்கள் கவனிக்கிறார்கள் ,நாம பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்”- என்று நயன்தாராவிடம் சொல்லும் பொழுதும் , நயன்தாரா காதல் சொல்லும் பொழுது பிடித்த மாறியும் , பிடிக்காத மாறியும் நடந்து கொள்வது, அரசியல்வாதிகளின் தலை எழுத்தை தீர்மானிப்பது பெரு வியாபாரிகள், ஆசையில் பேராசை என்பது எனக்கு நல்லது செய்வதில் இருக்கிறது என்று சமூக அக்கறையுடன் கர்ஜிப்பதிலும், ஹீரோயின்களை காப்பாற்றுவதிலும், நண்பர்களுக்கு, காதலிக்கு  பிரச்னை என்றால் வேதனைப் படுவதிலும், சமூக அக்கறை உள்ளவனின் பிடிவாதம் எப்படி இருக்கும் என்பதிலும் நேர்த்தியாக நடித்துள்ளார் ஜெயம் ரவி( தம்பி என்று பாரமால் இயக்குனர் நல்ல வேலை வாங்கி உள்ளார்!). ஜெயம் ரவியின் நடிப்பிற்கு நல்ல தீனி.

அரவிந்த் சாமி போன்ற வில்லன்களுக்கு ஒரு ஹீரோ எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார். உன் எதிரியைச் சொல் ,நீ யார் என்று சொல்கிறேன் என்பதற்குத் தேவையான தகுதியை சிறுவயதில் இருந்தே வளர்த்துக் கொள்ளும் ஜெயம் ரவி , அவரைத் தேடிச் சென்று மோதுகிறார். ஒரு கட்டத்தில் தன் பிரச்சனைகளுக்குக் காரணம் ஜெயம் ரவி என்று தெரிய வர , இருவருக்குமிடையே என்ன நடக்கிறது , யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை விறு விறுப்பாக திரையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்!

நயன்தாரா! நயன்தாராவிற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. தியேட்டரில் அவரின் அறிமுகத்திற்கு கைதட்டலும் , விசில் சத்தமும் பறக்கிறது. அதே சமயம் நல்ல வசனத்திற்கும், ரசிகர்கள் அப்டியே நடந்தது கொண்டது கொஞ்சம் ஆரோக்கியம். ஜெயம் ரவிக்கு காதல் சொல்லும் பொழுதும், ஜெயம் ரவிக்கு உதவி தேவைப் படும் பொழுது  அவர் பேசுகின்ற வசனம் ஆகட்டும், ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி வேதனையில் இருக்கும் பொழுது நயன்தாரா பேசுகின்ற வசனம் போன்ற ஒவ்வொரு இடத்திலும் நயன்தாரா நினைவில் நிற்கிறார். இரண்டாவது பாதியில் அவருக்கு என்றே ஒரு பாடலை நுழைத்து இருக்கிறார்கள்! அந்தப் பாடல் இல்லாமலும் படம் நன்றாகவே இருந்து இருக்கும். படத்தில் அவ்வளவு விறுவிறுப்பு(வெறுப்பில்லா விறுவிறுப்பு!!)

ஹிப்ஹாப் தமிழனின் இசை ஓகே! சினிமாட்டோகிராபி ராம்ஜி,எடிட்டிங் சூர்யா (எடிட்டிங் நன்றாக இருந்தது) இனி  ஜெயம் ராஜா “ரீமேக் ராஜா” இல்லை, இவரா இது என்று பிண்ணி எடுத்துள்ளார்; அதற்காக அவர்க்கு  சபாஷ் போடலாம்!

நல்ல வேளை இந்தப் படத்தை ரஜினி,அஜித்,விஜய் என்று யாரும் நடிக்க வில்லை. நடித்து இருந்தால் ஹீரோக்கள் கொண்டாடப் பட்டு இருப்பார்கள். ஜெயம் ரவி இந்தக் கதைக்கு ஏற்ற ஹீரோ! அதனால் கதையும் நினைவில் நிற்கிறது!!

மொத்தத்தில் இது ஒரு நல்ல படம்( உலகத்தரமானாதா என்று நீங்கள் கேட்பது கேட்கிறது , உலகத்தின் தரம் பற்றி தெரியாது ;ஆனால் இது இந்த மண்ணிற்க்கான படம்).எல்லோரும் பார்க்க வேண்டிய ப(பா)டம்.

படங்கள்: விக்கிபீடியா , கூகிள்

பாபநாசம்,மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ஒரு (நல்ல)திரைக்கதை! இயக்குநர் ஜீத்து ஜோசப் தமிழில் கமலை வைத்து இயக்கி உள்ளார். பொதுவாக திரைப்படம் அதிலும் தமிழ் திரைப் படங்கள் என்றால் கதாநாயகர்களின் வீச்சு அதிகமாக இருக்கும். ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நமக்குள்ளே ஒரு வரையறை போட்டு வைத்துள்ளோம். அதை உடைத்து உள்ளது இந்தப் படம்.

இது இயல்பான ஒரு படம் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர முடியும். பாபநாசம் பார்க்கும் பொழுது த்ரிஷ்யம் படம் வந்து போக வில்லை , பாபநாசமாகவே வந்து போகிறது என்பதால் கமலையும் , இயக்குனரையும் பாராட்டலாம்.

நெல்லை வாழ்க்கையை திரைக்குக் கொண்டுவர உதவி இருக்கும் சுகா மற்றும் வட்டார வழக்கு மொழிக்கு ஏற்றவாறு வசனம் எழுதி இருக்கும் ஜெயமோகன் இவர்களின் பங்கு இந்தப் படத்தில் முக்கியமானது.பாடல்கள் கேட்கும் படி இல்லை என்றாலும் பின்னனி இசை கதைக்கு ஏற்றவாறு  கொடுத்து தப்பித்துள்ளார் ஜிப்ரான்.

பாபநாசத்தில் கேபிள் டிவி நடத்தி வரும் கமல் அவர் மனைவி கவுதமி, தன் இரு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை என நகர்கிறது முற்பாதிக் கதை.மகள் பள்ளிக் கூடம் மூலம் சுற்றுலா செல்கிறார். அப்போது அவரைஅறியாமல் ஒரு சிக்கலில் மாட்டுகிறார்.அந்த சிக்கல் என்ன? பிறகு என்ன நடந்தது? என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது பிற்பாதிக் கதை.

4வது  வரை மட்டுமே படித்த கமல் இதில் இருந்து எப்படி அவரது குடும்பத்தைக் காப்பாற்றுகிறார் என்பது விறுவிறுப்பு .அதற்க்கு  சினிமா படங்களில் இருந்தே வழி கண்டு பிடிப்பது என்ற உத்தி  திரைக்கதையிலும்  வெற்றி பெற்றுள்ளது.

கமலின் நடிப்பைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை,இந்தப் படத்தில் சுயம்புவாகவே வாழ்ந்திருக்கிறார். கமலைத் தவிர இந்தப் படத்தை வேறு யாரும் தமிழில் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்காது என்றே சொல்லலாம். கௌதமி,நிஜத்திலும் நிழலிலும் கமலுக்கு ஏற்ற ஜோடியே ஆனால் டயலாக்கில் கொஞ்சம் தொய்வு தெரிகிறது.

காவலர்கள் மற்றும் உயரதிகாரிகளாக வரும் அத்தனை பேரும் கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தம்.
டிஐஜியாக வரும் ஆஷா சரத்தும், அவர் கணவராக வரும் ஆனந்த் மகாதேவன் இருவரும் கமல் , கௌதமிக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார்கள்.கலாபவன் மணி ,இளவரசு, எம்எஸ் பாஸ்கர், மகள்களாக வரும் நிவேதா தாமஸ், எஸ்தர் அத்தனை பேருமே தனக்கு கொடுத்த கதாப் பாத்திரத்தைச் சரியாக செய்துள்ளார்கள். அந்த விதத்தில் இயக்குனரோடு இவர்களும் பாராட்டப் பட  வேண்டியவர்கள்.

முதல் பாதி ஆமை வேகம் என்றாலும் , பிற்பாதி ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்து விடுகிறது படம்.கதை சொன்ன நேர்த்தியும் அருமை. ஒவ்வொரு சாதாரண மனிதனின் உள்ளேயும் இப்படி ஒரு போராட்டம் இருந்து கொண்டுதான் இருக்கிறது அந்த வகையில் பாபநாசம் கொண்டாடப் பட வேண்டியது மட்டுமல்ல, இளைஞர்கள் எப்படி எல்லாம் கெட்டுப்  போகக் கூடாது என்பதை அழுத்தமாகச் சொல்வதால் இன்றைய இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

பெரிய கட் அவுட் இல்லை , பால் அபிஷேகம்  இல்லை , விசில் சத்தம் இல்லை , அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்க வில்லை,பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டா எனத் தெரியவில்லை!! ஆனாலும் படம் முடிந்து வெளியே வந்த  பிறகும் அதன் தாக்கம் இன்னும் குறைய வில்லை. இப்பொழுதான் தெரிகிறது என் அப்பா ஏன் கமல் ரசிகன் என்று!!

மொத்தத்தில் பாபநாசம் அனைவரும் மறக்காமல் பார்க்க வேண்டிய படம்.

விமர்சனத்தில் உதவி & நன்றி: மகேஷ் ( பிரின்ஸ் )
படங்கள்: கூகிள்