Archive for the ‘தேர்தல் திருவிழா2016’ Category

தமிழகத் தேர்தல் களத்தில் GK வாசனின் முடிவு என்னவாக இருக்கும் ?

விஜயகாந்த் கட்சியை இழுக்க அனைத்துக் கட்சிகளும் பணம் கொடுக்கவும் தயார் போல?

மக்கள் நலக் கூட்டணி நிலைக்குமா?

அன்புமணி ராமதாஸ் பாஸ் ஆவாரா?

யார் வந்து என்ன ஆகப் போது ?

தேர்தல் என்றாலே ரோடு போட ஆரம்பிட்சிடுறாங்க?!

Advertisements

இடிந்து விழுந்தாலும், அணை உடைந்தாலும், இம்மியளவும் துயர்கொள்ளாத இரும்பு இதயமே வாழ்க!
● மக்கள் குடி அழிந்தாலும், நலம் இழந்தாலும்,
நெஞ்சம் நடுங்காத நித்திரை சிற்பமே வாழ்க!
● வந்தாரை வரவேற்பது தமிழர் தம் பண்பாடு
மறந்தாரை மறவாமல் வாழ்த்துகிறோம் அன்போடு!
● உன்னருமை பெருமைகளோ, நுாறு நுாறு
உனக்கு இங்கே ஈடு இணை வேறு யாரு?
● வேதனையில் மக்கள் மனம் வாடுகின்ற போதும்;
வேலையின்றி இளைஞர் எல்லாம் வெந்துருகும் போதும்;
வெள்ளத்தில் மக்கள் இங்கே தத்தளிக்கும் போதும்;
கவலையின்றி நீ சிரிப்பாய், உன் வீரம் யாருக்கு வரும்!
● தமிழ்நாடு கடன் சுமையால் தள்ளாடும் போதும்,
தற்பெருமை பேச்சுக்கள் வேறு எவர்க்கும் வருமா?
பன்னாட்டு நிறுவனங்கள் நமக்கெதற்கு தாயே
கொடநாடு இருக்கிறதே ஓய்வெடுப்பாய் நீயே!
● மக்கள் படும் துன்பத்திலும் திசையெங்கும்
தன் முகத்தை, ‘ஸ்டிக்கர்’ ஒட்டி, காட்டச் செய்த
மா கருணை உனதல்லவா…
● மந்திரிமார் அனைவரையும் மண்டியிட செய்து விட்டு, உன் சுய மரியாதையை துாக்கி நிறுத்திய, சீரிய கொள்கை தலைவி நீயல்லவா…
பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திடுக நீயே…
● நாளையொரு நல்லாட்சி வருகிறது தாயே
துளியளவும் பயம் வேண்டாம் அமைதி கொள்வாயே
நல்லாட்சி குடையின் கீழ், நலம் காண்பாய் நீயே!

நன்றி: தினமலர்