Archive for the ‘கலாச்சாரம்’ Category

வெள்ளம் கரை புரண்டு ஓடுவதை யாராவது நன்றி சொல்லி மகிழ்வார்களா?! விழா எடுத்துக் கொண்டாடுவார்களா?! குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என நிலங்களைப் பிரித்து இயற்கையோடு இணைந்து ஆட்சி நடத்திய தமிழ்ப் பண்பாடு நதிக்கு நன்றி சொல்வதும் , விழா எடுப்பதும் வியப்பில்லை!
பின்னாளில்தான் இந்த விழாவில் கடவுள் தன்மையும் புகுத்தப் பட்டு இருக்க வேண்டும். நன்றி செலுத்துவது வேறு , வணங்குதல் என்பது வேறு! அப்படிப் பார்த்தால் கால மாற்றத்தில் இது வணங்குதலாக மாறி இருக்க வேண்டும்.
ஆடிப் பெருக்கு என்பது , கரை புரண்டு ஓடிய காவிரி வெள்ளத்தை மட்டும் குறிப்பதன்று. அன்று நிலவிய பருவ கால நிலையையும் சேர்த்தே குறிக்கிறது. நம்மை செழிப்போடு வைத்திருக்கும் நதியைப் பாதுகாக்க வேண்டும் என்னும் பொருளிலும் அது கொண்டாடப் பட்டு இருக்க வேண்டும்.
இன்றும் தென் மாவட்டங்களில் விமர்சையாக கொண்டாடப் படும் ஆடிப் பெருக்கு, அதன் தன்மையை இழந்து விடக் கூடாது! ஏனெனில் “ஒரு நாள், நம் நாட்டில் காவிரி பாய்ந்தது, அதை மக்கள் கொண்டாடினார்கள் அதன் பெயர் ஆடிப் பெருக்கு!! இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று இதே பேஸ்புக்கிலும் ,வாட்ஸ அப்பிலும் படிக்கும் நிலை வரலாம்!!
ஆடிப் பெருக்கு பற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களை கமெண்ட்ல் சொல்லுங்களேன்!!