Archive for the ‘எதிரொலி’ Category

தமிழ் நாட்டுல கலவரம் என்று சொன்னீங்க பாருங்க அப்பவே தெரிஞ்சுது,
நேரா வெளிநாட்டுல இருந்துதான் வறீங்கன்னு!!

#காவேரி #காபலியாய் இருந்திருக்கலாம்!
விவாதமாவது நடந்திருக்கும்!!

#கம்யூனிஸ்ட்_கட்சியா? அப்டினா?!

Kerala U R Great!

‘பெங்களூருவில் வசிக்கும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து பாதுகாப்புடன் வந்துசேரும் வகையில் இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்’ என்று ரயில்வே அமைச்சகத்திடம் கேரள அரசு கோரியுள்ளது.

கேரள முதல்வர் தவிர, மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி, வி.எம். சுதீரன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா ஆகியோரும் கர்நாடக முதல்வரிடம் மலையாளிகளின் பாதுகாப்பு குறித்தும், அவர்களை அனுப்ப சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

கேரள காவல்துறை, மலையாளிகள் கேரளத்துக்குத் திரும்பப் பயணிக்கும் சாலைகள் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கர்நாடகாவின் மாண்டியாவுக்கு, 100 காவலர்களை அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஒருவேளை #காவிரி நீரை #புனிதம், #புண்ணியம் என்று சொல்லி இருந்தால் மத்திய அரசே நமக்கு #போஸ்ட்ஆபீஸில் கிடைக்க உதவி செய்திருக்கும்!

காவிரி நீரை! #வாழ்வாதாரம் என்றல்லவா சொல்லி விட்டோம்!

புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி, சமஸ்கிருதம் எல்லாம் அப்புறம் கொண்டுவாருங்கள் முதலில் “நதி நீர் இணைப்பும், அதற்கான திட்டங்களும். கடலுக்கு செல்லும் நீரின் அளவை பற்றிய விழிப்புனர்வையும்” கொண்டு வாருங்கள்!!

கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்து எப்படியோ ஓசூர் வந்து அங்கே காத்திருக்கும் மக்களுக்கு அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல கூடுதல் பேருந்துகளை தமிழக அரசு இயக்க வேண்டும்!

#RequestToTamilNaduTransportation

 

அன்பு! வளம்!! வளர்ச்சி!!!

நிலையான ஆட்சி! நிரந்திர வளர்ச்சி!!

தமிழகமே எனது குடும்பம்!
தமிழ்நாடு மக்களே எம் பிள்ளைகள்!!
தமிழ்நாட்டு மக்களின் நலனே என் நலன்!!!

#100வது_நாளில்_படித்தது!

#தமிழினத்தின் #ஒப்பற்ற_தலைவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், யார் குரல் குடுப்பது என்பதில் சற்றே குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம்!!

தேச பக்தரும், சுதந்திரப் போராட்ட வீரரும், இலங்கைத் தமிழர் விசயத்தில் ராஜ்பக்கேவிற்கு ஆலோசனையும், கடல் நீர் பற்றிய அரிய தகவல்களை சமீபத்தில் வெளியிட்டவருமான அந்த மஹான் எங்கே?!

சுவாமிக்கே வெளிச்சம்!

ஒரு காலத்தில் பெங்களூரில் #கரை_வேட்டிகள் புடை சூழ நின்றதை நாசா விண்கலம் படம் பிடித்தது, இப்போது வெளியிடப் பட்டுள்ளது!!

கர்நாடகா பாஜகவுக்கும்….தமிழக பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை-பொன் ராதாகிருஷ்ணன்

எனக்கும் எனக்குமே சம்பந்தம் இல்லை , ஏன்னா என் பேரு சம்மந்தம் இல்லை!!

 

நண்பர்கள் அனைவருக்கும் #ஈகைத்_திருநாள் (#Eid_Mubarak) வாழ்த்துக்கள்!

பிரியாணியை எங்களுக்கு பகிர்ந்து கொடுக்காமல், தனி பார்சல் ஆகவே கொடுத்து “ஈகை”த்திருநாளைக் கொண்டாடுங்கள்!!

 

1.காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா.. தமிழகம் தொடர்ந்த வழக்கு..சுப்ரீம் கோர்ட்டில் செப். 2ல் விசாரணை!

மோடி வர்றார்!
அமித்ஷா வர்றார்!
இவ்வளவு ஏன்
இமய மலைல இருந்து கங்கையே
போஸ்ட் ஆபீஸ்ல வருது!
இங்க இருக்க #காவிரி வரமாட்டேங்குது!!

2.#கல்வித்_தந்தைகள் எல்லாம் கண்காணிக்கப் படும் நேரமிது!

புதிய தலைமுறை டிவி நடுநிலையானதா என சோதிக்கும் ஓர் தருணம் இது!

3.சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் ஜெயலலிதா: பேரவைத் தலைவர் ப.தனபால் பாராட்டு!

அவதூறு வழக்கில் சுப்ரீம் கோர்ட் விசாரணை : தமிழக அரசுக்கு கண்டனம்!

இரண்டுக்கும் இடையே உள்ள #6_வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கவும்!!

4.இதுவரை திமுக மீது 85 வழக்குகளும், தேமுதிக மீது 48, ஊடகங்கள் மீது 55, காங்கிரஸ் மீது 7, பாமக மீது 9 உள்ளிட்ட 213 #அவதூறு_வழக்குகள் போடப்பட்டுள்ளன!

5.#ஒலிம்பிக்கிற்காக மத்திய அரசு #100கோடி செலவு!!

#வாட்டர்_பாட்டில் வாங்க காசு இல்லையேப்பா!

6.டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா!

மாப்ள இவருதான் ஆனா ?!

7.தனி ஒரு விளையாட்டு வீரருக்கு குடிக்க தண்ணீர் தரவில்லையெனில் , விளையாட்டு அமைப்பை கேள்விக்கு உட்படுத்துவோம்!!

8.#மின்மிகை_மாநிலத்தில் நிலவின் வெளிச்சமா?!

9.எதுக்குங்க இந்தக் குழப்பம்?! #சட்டப்_பேரவை #நிகழ்வுகளை #தொடர்_நேரலையில் விட்டுவிட்டால் மக்களே பார்த்து தெரிந்து கொள்ளப் போகிறார்கள்!!

10.பிரான்ஸின் உயரிய #செவாலியர் விருது!

வாழ்த்துக்கள் #திரு_கமல்ஹாசன்

கலையைப் போற்றுவதில் என்றுமே #பிரான்ஸ் கெத்துதான்!

ஜாதி அரசியலைப் புறக்கணித்து வளர்ச்சிக்கு ஆதரவளியுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்!
#‎வளர்ச்சினா‬ என்ன?! அது எப்படி இருக்கும்னு தெரியலையே!! 🙂 🙂

#‎கபாலி‬ வானிலை எவ்வாறு இருக்கு?! Facebook எரிஞ்சுட்டு இருந்துச்சே!

பார்த்துப்பா ! ‪#‎கபாலிக்கு‬ ‪#‎விமர்சனம்‬ எழுதறன்ட்டு சொந்தக்கதை சோகக் கதையை சேர்த்து எழுதனா கூட பரவாயில்லை! ஆனால் உங்க கற்பனைத் திறத்தைக் கொட்டி புதுக்கதையை பரப்பி விட்றாதீங்க:-) 🙂 🙂 :-)#‎கபாலிவிமர்சனம்‬

கடன் சுமையை குறைக்க தமிழக அரசே ‪#‎கபாலி‬ படத்த வாங்கி ரிலீஸ் பண்ணி இருக்கலாம்

கார்ப்பரேட் வியாபாரிகளுக்கு ‪#‎கபாலி‬ ஒரு #‪#‎பணமழை‬! 🙂 :-)$$$ 🙂 🙂 🙂
ஏழை ரசிகனுக்கு கபாலி ஓர் ‪#‎மகிழ்ச்சி‬ 🙂

அக்டோபர் நவம்பர்னா ‪#‎தீபாவளி‬; இந்த ஜீலைல நம்ம ‪#‎கபாலி‬ 🙂 🙂 🙂

#‎இது‬ ‪#‎தான்‬ ‪#‎சட்டம்‬ யாருக்கு?! யாருக்கோ 🙂
தமிழ்நாடு சினிமா திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டத்தில் 2009-ம் ஆண்டு மே 20-ம் தேதி திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஏ.சி. வசதி, ஓட்டல், பொழுதுபோக்கு அம்சங்களுடன்கூடிய திரையரங்குகள் கொண்ட மல்டிபிளக்ஸில் குறைந்தபட்சம் 10 ரூபாயும், அதிகபட்சம் 120 ரூபாயும் வசூலிக்கலாம்.

இரு மடங்காகிறது எம்.பி.,க்கள் சம்பளம்!
பார்லிமெண்ட் ஏழைகளுக்கு இனிப்பான செய்திதான் 🙂
நாம வழக்கம் போல கேஸ் மானியத்த விட்டுத் தருவோம் 🙂

ஒரு சமூக ஆர்வலரின் மீதான இந்த அணுகுமுறை, எதிர்கால தலைமுறையிடம் சமூக ஆர்வத்தின் மீதே ஒரு எதிர்வினையை ஏற்படுத்திவிடுமென்பதில் சந்தேகமில்லை! அதை மக்களுக்கான அரசே செய்யலாமா?!

“‪#‎PRISMA‬”ல எடிட் பண்ற போட்டோஸ் எல்லாம் ‪#‎ஆதார்அட்டைல‬ இருக்கமாறியே இருக்கே எப்படி?!

தமிழ் நாட்ல ‪#‎மாசுக்கட்டுப்பாடுவாரியம்‬ இருக்கே, அதோட வேலை என்னவோ!!

வங்கிகளில் கடனை திரும்ப செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உறுதி

இது விஜய் மல்லையாவுக்கு பொருந்துமா ?!

தொழிலதிபர்களுக்கு சலுகை சம்பளம் வாங்குவோருக்கு வரியா? – பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

நல்லா கேளுங்கண்ணே! ஒரு வேளை இது வளர்ச்சியா இருக்குமோ??

விரைவில் தேர்தல் அறிக்கை: சரத்குமார் தகவல்

இதெல்லாம் எதுக்குண்ணே ??!!

ஜூன் 21-சர்வதேச யோகா தினம்

இனி யோகா என்பது வெறும் கிளாஸ் இல்லை! யோகம்!!