Archive for the ‘அரசியல்’ Category

​இந்தியாவில் #கம்யூனிஸ்ட்கள் தனியாகத் தெரிகிறார்களா?!
பத்தோடு , பதினொன்றாகவேத் தெரிகிறார்கள்!!

​தமிழ் நாட்டில் #மாற்று_அரசியல் என்றால் என்ன?!
முதல் அமைச்சர் ஆவதென்ற கனவு!

#vairajamai

Posted: May 15, 2016 in அரசியல்
Tags:

image

கடந்த ஒரு மாத காலம் பல்வேறு வாசகர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் இதோ; 20 கேள்விகளுக்கு மேல் கேட்கப் பட்டது அவற்றில் இன்றைய சூழலுக்கு  ஏற்ற கேள்விகள் மற்றும் மக்களின் கணிப்புகள் உங்கள் பார்வைக்கு!

s1

Screenshot2

Screenshot3Screenshot4Screenshot5Screenshot6Screenshot7Screenshot8Screenshot9Screenshot10Screenshot11Screenshot12

2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையடுத்து திமுக தலைவர் கருணாநிதி ஞாயிறன்று 72 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் மதுவிலக்குச் சட்டம் நடைமுறைப்படுத்தும் என்பதை முதலில் அறிவித்தார்.

பிறகு விவசாயத்துக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, துரைமுருகன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மதுவிலக்கை அமல்படுத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்,.

மதுவிற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்படும்.

மதுவிலக்கு இழப்பை ஈடுகட்ட உரிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு.

மதுவுக்கு அடிமையானோருக்கு சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு.

விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை மற்றும் சிறு, குறு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

ஏரிகளைத் தூர்வார ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

வெள்ளத்தினால் ஏற்படும் சேதத்தை தடுக்க ரூ.5,000 கோடி.

அனைத்து ரக விதை நெல்லுக்கும் முழு மானியம்.

மகளிருக்கு 9 மாதம் பேறுகால விடுப்பு அளிக்கப்படும்.

கல்விக் கடன் தள்ளுபடி

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படும்.

மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்.

பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியருக்குக் ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும்.

ஆட்டோ வாங்குவதற்கு அரசு ரூ.10,000 மானியம் வழங்கும்.

முதியோர் உதவித்தொகை ரூ.1,300 ஆக உயர்த்தப்படும்.

பட்டதாரிப் பெண்கள் கலப்புத் திருமண உதவித் தொகை ரூ.60,000 மற்றும் 4 கிராம் தங்கம்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

நெசவாளர் வீடுகட்ட ரூ.3 லட்சம் மானியம் அளிக்கப்படும்.

மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.

மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.

முதியோருக்குக் கட்டணமில்லா பயணச் சலுகை.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.

விசைத்தறிக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

நெல்கொள்முதலுக்கு ஆதார விலை ரூ.2000 என்று நிர்ணயிக்கப்பட்டு ரூ.2,500 வரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தந்தை பெரியார் பிறந்தநாள் பகுத்தறிவு தினமாக கொண்டாடப்படும்.

பட்டாதாரிகள் சுயதொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.

100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடரும்.

அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு அமைக்கப்படும்.

ஏழை மக்கள் வசதிக்காக அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு போன்ற குடும்ப அட்டை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

மதுரை முதல் தூத்துகுடி வரை தொழிற்சாலைகள் நிரம்பிய நெடுஞ்சாலை.

மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை.

அனைத்து மாணவர்களுக்கும் 3ஜி/4ஜி இணையதள வசதி செய்து தரப்படும்.

மீனவர் சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும்.

தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமேலவை கொண்டு வரப்படும்.

சென்னையை அடுத்த வண்டலூரில் துணை நகரம் அமைக்கப்படும்.

நியாயமான விலையில் மணல் விற்பனை செய்யப்படும்.

அரசுப்பள்ளிகளில் உள்ள 54,233 வேலைக்காலியிடங்கள் நிரப்பப்படும்.

வசதியில்லாதவர்களுக்கு சலுகை விலையில் கைபேசி வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம்.

ஊரக வேலைவாய்ப்புக் கூலி ரூ.100லிருந்து ரூ.150ஆக அதிகரிக்கப்படும்.

தொடக்கப்பள்ளி சத்துணவில் பால் சேர்க்கப்படும்.

பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்.

பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

வெள்ளத்தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.

Thanks:தி ஹிந்து தமிழ்

முதலாவதாக மது விற்பனையின் நேரம் குறைக்கப்படும்
சில்லறைக் கடைகள், பார்கள் குறைக்கப்படும்
மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்
இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை அடைவோம்

அதெப்படி மக்கள் நலக் கூட்டணியில் தமாகா சேரலாம்? பீட்டர் அல்போன்ஸ் கொந்தளிப்பு

சென்னையில் குவியும் அதிருப்தியாளர்கள்: இன்று தேமுதிக போட்டி கூட்டம் !

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா தொகுதிப் பங்கீடு அறிவிப்பு

அதிமுக மீண்டும் ஆட்சியமைத்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்: ஜெயலலிதா உறுதி

‘ஓட்டுக்கு பணம் தரமாட்டோம்’ வாக்குறுதியை கட்சிகளிடம் இருந்து தேர்தல் ஆணையம் பெற வேண்டும்: ராமதாஸ்

அதிமுகவை தோற்கடிக்கும் மனநிலையில் ஆர்.கே.நகர் மக்கள் இருக்கிறார்கள்: ஸ்டாலின்

முதலாவதாக மது விற்பனையின் நேரம் குறைக்கப்படும். சில்லறைக் கடைகள், பார்கள் குறைக்கப்படும். மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை அடைவோம்-முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

சென்னையில் குவியும் அதிருப்தியாளர்கள்: இன்று தேமுதிக போட்டி கூட்டம் !
அது ஞாயிற்றுக் கிழமை கறி வாங்க வந்த கூட்டமா இருக்கும்யா!!

எப்படியாவது ஒரு கலை நிகழ்ச்சியோ இல்ல கிரிக்கெட் போட்டியோ வச்சு இந்த மாசம் இன்டர்நெட் பில்ல கட்டிடணும்!

தேர்தல் வெற்றிக்கு ஒவ்வொருவரும் ஸ்டாலினைப் போல உழைக்க வேண்டும்: திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்
தொண்டன் : “நமக்கு நாமே” திட்டம் பற்றி சொல்றாரோ ?!

சமக நிர்வாகிகள் 6 பேர் நீக்கம்: சரத்குமார் நடவடிக்கை!
இருந்தாலும் நீ ரொம்ப தைரியசாலிப்பா! கவுண்டமணி மைண்ட் வாய்ஸ்!,,

நேரில் ஆஜராக மே இறுதி வரை அவகாசம் கோரும் ‘தலைமறைவு’ விஜய் மல்லையா!
இவர் விஜய் மல்லையா தான ?! தவறுதலா தலைவாசல் விஜய்ன்னு படிச்சுட்டேன்!!

தமிழகத்தில் இயற்கை வளம் கொள்ளை போகிறது: சீமான் குற்றச்சாட்டு
என்னது இயற்கை வளம் கொள்ளை போகிறதா?!

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தமாகா!
பஞ்ச பாண்டவர்கள் என்றால் 5 பேருதான? கணக்குல இடிக்குதே ?!

‘ஜன்தன் யோஜனா’ திட்டத்துக்கு கிராமங்களில் அதிக வரவேற்பு: தமிழகத்தில் 79 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடக்கம்
வங்கிக் கணக்கு இருக்கு ஆனா அதுல பணம் இல்லையே?!

2016 சட்டமன்ற தேர்தலுக்கான லோக்சத்தா கட்சியின் தேர்தல் அறிக்கை:

3) #வேளாண்மை

வாங்கிய கடனை அடைக்க முடியாமல் #விவசாயி தற்கொலை, டிராக்டர் வாங்கியதற்கு வங்கிக்கு வட்டி கட்ட முடியாத விவசாயி மீது காவல்துறை தாக்குதல் போன்ற விவசாயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை நாம் விவசாயிகள் பழி வாங்கப்படுகிறார்கள் என்பது போல உணர்ச்சிகரமான பிரச்சனையாக பார்கிறோமே ஒழிய ஏன் விவசாயியால் கடன் கட்ட முடியாமல் போனது? விவசாயம் ஏன் லாபகரமான ஒரு தொழிலாக நம் நாட்டில் இல்லை? என்பது போன்ற தீர்வு நோக்கிய அறிவார்ந்த கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை.

நம் மேலோட்டமான சிந்தனையில் விவசாயம் லாபமீட்ட முடியாத ஒரு தொழில், எல்லா விவசாயிகளும் ஊருக்கெல்லாம் சோறு போட தங்கள் வாழ்வை தியாகம் செய்கிறார்கள் என்பது போலவும், விவசாயம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் நகரமயமாதலும், விவசாயத்தில் தொழில்நுட்ப வளர்சிகள் மற்றும் பெரும் தொழிற்சாலைகள் ஆகியன விவசாயத்திற்கு எதிரான ஒன்று என்பது போலவும் பலவாறான கருத்துக்கள் உள்ளன.

உண்மையில் நம் நாட்டில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான தீர்வு பல்முனை நோக்கோடு அணுகப்பட வேண்டும். பல்வேறு முன்னேறிய நாடுகளில் கையாளப்படும் உக்திகளை நாம் கையாள வேண்டும். இதற்கு லோக்சத்தா கட்சி அளிக்கும் தீர்வுகள்:

1. உழவர்களுக்குத் தங்கள் விளைபொருட்களின் விலையை நிர்ணயம் செய்வதில் முழுச் சுதந்திரம் அளிக்கப்படும்.

2. விற்பனை வலயத்தில் இடைத்தரகர்களின் பங்கைக் குறைத்து, உழவர்களுக்கும் நுகர்வோர்க்கும் உள்ள இடைவெளி குறைக்கப்படும். இதனால் உழவர்களுக்கும் நுகர்வோருக்கும் விரும்பும் வகையில் பொருட்களின் விலை அமையும்.

3. மட்கும் விளைபொருட்களான காய்கறி மற்றும் பழங்கள் வீணாவதைக் கட்டுப்படுத்த, முறையான போக்குவரத்து, குளிரூட்டப்பட்ட கிடங்குகள், பதபடுத்துதல் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும்.

4. வேளாண் தொழிற்சாலைகள் அமைக்கப்பெற்று, விளைபொருட்களுக்கான குறைந்த பட்சக் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுவதன் மூலம், சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்படும்போது, உழவர்கள் பாதுகாக்கப்படுவர்.

5. ஒவ்வொரு 3000 ஏக்கர்களுக்கும் ஒரு வேளாண்சாலை அமைக்கப்பெற்று, தரமான விதைகள், வேளாண் கருவிகள், விற்பனை ஏற்பாடுகள், இலவச மண் பரிசோதனை, இலவச கால்நடை சேவைகள் எல்லா நேரமும் அளிக்கப்படும்.

6. ஒவ்வொரு உழவருக்கும் கூட்டுறவு மற்றும் வர்த்தக வங்கிகளில் கணக்கு உருவாக்கப்பட்டு, எளிமையான முறையில் கடனுதவி பெற வழி செய்யப்படும்.

7. பயிர்ச் சாகுபடியைப் பெருக்கிட, உழவர்களுக்குப் புதுத் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்கப்படும்.

8. மரபணு மாற்ற விதைகள்: மரபணு மாற்றப்பட்ட விதைகள் பாதுகாப்பானதா இல்லையா என்பதை அறிவியலாளர்களே முடிவு செய்ய வேண்டும். அவ்விதைகளின் மூலம் பெறப்படும் சாகுபடி கூடியுள்ளதா இல்லையா என்பதை உழவர்களே முடிவுசெய்வர். அவர்கள் இவ்விதைகளைப் பயன்படுத்த விழைவார்களேயானால், எந்தச் சட்டத் தடையுமின்றி அது அனுமதிக்கப்படும்.

#லோக்சத்தா_தேர்தல்_அறிக்கை

இணையம் – http://tn.loksatta.org/
லோக்சத்தாவை முகநூலில் தொடர – https://www.facebook.com/loksattapartytn/
லோக்சத்தா வாட்ஸ்அப் எண் – 9791050511

மக்களாட்சியில் தேர்தல் மக்களுக்கு மட்டுமே உரியது. அது ஒரு சமூக விழா. அதை இத்தனை காலம் முழுமையாக மக்கள் கையில் எடுக்காத்தால் இன்று தமிழக அரசியல் மார்கட் போன சினிமாக்காரர்கள் மீண்டும் மேக்கப் போடும் இடமாக இருக்கிறது.
தேர்தல் என்ற மாநிகழ்வு லட்சக்கணக்கான சுதந்திர போராட்ட தியாகிகளின் வியர்வை இரத்தம் உயிரின் பலன். அதில் வோட்டு போடுவது மட்டும் நம் கடமை என்று தவறாக சித்திரிக்கப்படுகிறது. வேட்பாளர் தேர்வில் ஆரம்பித்து யார் பதவிக்கு வந்தாலும் அவர்களை கேள்வி கேட்பதில் தொடர்கிறது குடிமகனின் கடமை. கடமை தவறினால் என்ன விளைவு என்பதைத்தான் தற்போது அநுபவித்துக் கொண்டு இருக்கிறோம்! மீண்டும் ஒரு முறை கடமைகள் தவறுவதற்கு நம் ஏழைகளும் குழந்தைகளும் தாங்க மாட்டார்கள். நல்ல பிரதிநிதிகளை தேடுவோம், நிறுத்துவோம், அவர்களுக்குப் பிரச்சாரம் செய்வோம்,யார் வென்றாலும் அவர்களை தொடர்ச்சியாக கண்காணிப்போம்.
வேறு எந்த வழியிலும் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியாது!  முழுவீச்சில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவது மூலம் மட்டுமே நல்வாழ்வு கிடைக்கும்! அதற்கு இப்போது விட்டால் அடுத்த 5 வருடங்கள் வாய்ப்பு கிடையாது!

Source: whatsapp
Thanks: subathra