நாளை முதல் ஏடிஎம்.களில் புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம்
Updated: November 10, 2016 10:12 IST
டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கியிலிருந்து பழைய ரூபாய் நோட்டுகளை அப்புறப்படுத்துவதற்காக நேற்று தயார் நிலையில் இருந்த வாகனங்கள்.| படம்: பிடிஐ
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக் கையாக பழைய 500, 1000 நோட் டுக்கள் செவ்வாய்க்கிழமை நள் ளிரவு 12 மணி முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை குறைக்க வெள்ளிக்கிழமை முதல் ஏடிஎம்களில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சக செயலர் அசோக் லாவாசா கூறும்போது, ‘‘பழைய நோட்டுக்களை வாபஸ் பெறுவ தால் மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றார். அதற்கான மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. புதிய ரூபாய் நோட்டுக்கள் நிரப்பப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் ஏடிஎம்கள் முழுமையாக செயல்படத் தொடங்கி விடும். ஒரு சில இடங்களில் நாளையே (இன்று) ஏடிஎம்கள் திறக்கப்படும்’’ என்றார்.
தலைமை பொருளாதார ஆலோ சகர் அர்விந்த் சுப்ரமணியன் கூறும்போது, ‘‘ஊழல், கள்ள நோட்டு, கருப்பு பணம் ஆகிய வற்றுக்கு எதிராக மத்திய அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் இதற்கான பலன் தெரியவரும்’’ என்றார்.
Copyright ©2016, தி இந்து
0