“வாழை”யென்பது வெறும் வார்த்தை இல்லை!!

Posted: February 28, 2016 in சமூகம்
Tags: , , ,

வாழையை நீங்க விருந்துல பார்த்து இருப்பீங்க!
விழால பார்த்து இருப்பீங்க!
நம்பிக்கையின் விதையா பார்த்து இருக்கீங்களா?!
அடுத்த தலைமுறையின் கல்வி வழிகாட்டியா பார்த்து இருக்கீங்களா?!

ஆம் வாழை என்ற தன்னார்வ அமைப்பைப் பற்றி கேள்வி பட்டு இருக்கறீர்களா?! இல்லை என்றால் , அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா ?மேற்க் கொண்டு படிக்கவும்!
vazhai_1
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் கல்வியில் முன்னேறி உள்ள மாவட்டங்களுள் ஒன்று, தருமபுரி கொஞ்சம் பின் தங்கி உள்ள மாவட்டம். இரண்டு மாவட்டங்களிலும் கல்வியில் பின் தங்கிய கிராமங்கள் உள்ளன.வாழை! விழுப்புரம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கல்வியில் பின்தங்கிய கிராமங்களிலுள்ள முதல் தலைமுறை கல்வி பெரும் குழந்தைகளின் கல்விக்காக பயணிக்கும் தன்னார்வ குழு (ஸ்ரீ ரங்கநாத் பதிவுகளில் இருந்து).

குழந்தைகளின் அண்ணன்,அக்கா ஆகவே பயணித்து , அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கிறது வாழை. ஒரு தலைமுறை ஆர்வலர்கள் மட்டும் இல்லாமல் வாழையடி வாழையாக சீனியர்களை பின்பற்றி அவர்களுக்குப் பிறகும், அவர்களுடன்  பல புதியவர்களையும் இணைத்துக் கொண்டு இந்தப் புரட்சியை பேனர் வைத்து கொண்டாடாமல்! சத்தமில்லாமல் செய்து வருகிறது வாழை!

6ம் வகுப்பு படிக்கும் சென்னை போன்ற ஒரு நகர குழந்தைக்கும், சென்னையிலிருந்து மூன்று நான்கு மணிநேர பயண தூரத்தில் உள்ள கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கும் இருக்கும் வித்தியாசங்கள் நம்முள் பல கேள்விகளையும், பதில்களையும் தேடுவதை மறுக்க முடிவதில்லை..கல்வி முறையின் குறைபாடுகளா? இல்லை கல்வியை சமமாக எல்லாதலங்களுக்கும் எடுத்து செல்வதில் நம் குறைகளா? என்பது விடுகதை தான்! (ஸ்ரீ ரங்கநாத் பதிவுகளில் இருந்து).

குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தர வேண்டும் என்பதனை தன்னிச்சையாக முடிவெடுக்காமல், அவர்களோடு பயணித்து அவர்களின் நிலையை உணர்ந்து கொண்டு ,அதற்க்கு ஏற்றால் போல திட்டமிடுவதில் மட்டும் அல்ல இந்த நேரத்திலும் அதை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டு இருக்கும் வாழைக்கு ஒரு சபாஷ்!!

பல நிலையில் உள்ள குழந்தைகளின் உளவியல் தன்மைகளை , அதே துறையில் சிறந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு நன்கு திட்டமிட்டே பயணிக்கிறது வாழை. இரண்டு நாட்கள் அவர்களுடனே தங்கி இருந்து பள்ளிப் பாடங்கள்,செயல்வழிப் பாடங்கள், திறனறியும் வகுப்புகள், வாழ்க்கைத் திறன் பயற்சி, கலை,    அறிவியல்,விளையாட்டு என  அனைத்தையும் சொல்லித் தருகிறது வாழை. இந்த இரண்டு நாட்களிலும் அவர்களின் அறிவுப் பசியை மட்டும் அல்லாது வயிற்றுப் பசியையும் சேர்த்தே நிரப்பி விடுகிறது வாழை.

கடிதமே காணாமல் போய்விட்ட இந்தக் காலத்தில் போனில் மட்டும் அல்லாமல் குழந்தைகளுடன் கடித வழியிலும் , அவர்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவர்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றனர் வாழை தன்னார்வலர்கள்.

“ அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்”.

என்ற பாரதியின் வாக்கினை வாழை மெய்பித்துக் கொண்டிருக்கிறது!

வாழையடி வாழை

வாழையென்பது வெறும் வார்த்தை இல்லை, அது ஓர் வாழ்க்கை! வாழையுடன் பயணிப்போம்!!

If you wish to join as a mentor/supporter => Volunteer/Contribution Form

மேலும் தகவல்களுக்கு : http://www.vazhai.org/

 

படங்கள்: ஸ்ரீ ரங்கநாத் ப்ளாக், vazhai.org

உங்கள் வாசிப்பிற்கும்;கருத்திற்கும் நன்றி!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s