அஜித்தின் தன்னம்பிக்கை

Posted: January 19, 2016 in அஜித்;Ajith
Tags: , , ,

அஜித் ஒரு சினிமா நடிகர் என்பதை எல்லாம் தாண்டி ஓர் ஆளுமையாக அவரது தன்னம்பிக்கை பின்பற்ற வேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் சிலாகித்திருக்கிறார்.

பொன். ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘ரஜினி முருகன்’. ஜனவரி 14ம் தேதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

முதல் 4 நாட்களில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வசூலை ‘ரஜினி முருகன்’ தாண்டிவிட்டதாக சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

‘ரஜினி முருகன்’ படத்தை விளம்பரப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அப்போது அஜித்துடனான சந்திப்பு குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டபோது, “அது ஒரு மறக்க முடியாத அனுபவம். அஜித் சாரை பார்ப்பதற்கு போய் உட்கார்ந்திருந்தேன். பூஜையில் இருக்கிறார், உட்காருங்கள் என்றார்கள். அப்போதே எனக்கு பதற்றமாக இருந்தது.

அஜித் சார் பேச ஆரம்பித்தவுடன், வெளியில் அவ்வளவு கொண்டாடுகிறார்களே, அதை அவர் தனக்குள் எடுத்துக் கொள்ளவே இல்லை என்பது தெரிந்தது. இன்றைக்கு அஜித் சார் என்றால் ஒரு 10 நிமிடத்துக்கு கை தட்டல்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

அஜித் சாருடனான சந்திப்பு ஒரு 4 மணி நேரம் போனது. அவர் அவ்வளவு எதார்த்தமாக பேசினார். இதை நான் வேறு யாரிடமும் சொல்லவே இல்லை. ஏனென்றால், அதைச் சொல்லி நாம் விளம்பரமாக்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அவரை நான் சந்தித்து ஒன்றரை வருடம் ஆகிறது. அவர் எனக்கு நிறைய ஆலோசனைகள் சொல்லவில்லை, அவருடைய வாழ்க்கையில் நடந்ததைத் தான் சொன்னார். அதை எப்படியாவது கடைப்பிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்.

அஜித் சாரிடம் உள்ள தன்னம்பிக்கையைத் தான் நான் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன். ஆலுமா டோலுமா பாடலின் போது அடிபட்டபோதும் கூட, பாடலை முடித்துக் கொடுத்துவிட்டு தான் சென்றிருக்கிறார். அவருக்கு நிறைய அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சண்டைக்காட்சிகளில் நடிக்கிறார். அந்த தன்னம்பிக்கை சினிமாத்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் வேண்டும் என நினைக்கிறேன்.

அஜித் சார் ஒரு சினிமா நடிகர் என்பதை எல்லாம் தாண்டி ஓர் ஆளுமையாக அவரது தன்னம்பிக்கை பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

நன்றி: தி ஹிந்து தமிழ்
செய்தி:தி ஹிந்து தமிழ்

உங்கள் வாசிப்பிற்கும்;கருத்திற்கும் நன்றி!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s