Chennai NEXT!

Posted: January 10, 2016 in ChennaiRains
Tags: , , , ,

Chennai NEXT அங்கீகரிக்க,அலச,அடுத்து நிகழாமல் தடுக்க ஆயத்தமாகும் தளம்!

சென்னை நெக்ஸ்ட் என்ற பெயரில் தன்னார்வலர்கள் , தன்னார்வலர்கள் சார்ந்த குழுக்கள் ஒருங்கிணையும் ஒரு நிகழ்வு இன்று(ஜனவரி 10)குருநானக் கல்லூரி  வேளச்சேரியில் நடந்தது.  சென்னை பெருமழையில் தொண்டுள்ளம் புரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் இது போன்ற பல நிகழ்வுகள் கடந்த ஒரு சில வாரங்களாக சென்னை முழுவதும் நடந்த வண்ணம் உள்ளது.

அதில் ஒரு நிகழ்வாக சென்னை நெக்ஸ்ட் நடந்தது. தோழன் அமைப்பு , சட்டப் பஞ்சாயத்து அமைப்பு, லோக்சத்தா கட்சி போன்றவை சேர்ந்து நடத்திய நிகழ்வாய் இது இருந்தாலும் , மற்ற அமைப்பின் உறுப்பினர்களையும் , மற்ற அமைப்பையும் , தனி தன்னார்வலர்களையும் அங்கீகரிக்கத் தவறவில்லை என்பதை இங்கே சொல்லியே ஆக வேண்டும். அந்த வகையும் இந்த 3 அமைப்புகளுக்கும் ஒரு  சபாஷ்!

இந்த நிகழ்வில் பங்கேற்கக் காரணமாய் இருந்தது அதன் எளிமை. மிகப் பெரிய விளம்பரமாய் இல்லாமல் இயல்பாய் இருந்தது. இதில் பங்கேற்ற விருந்தினர்களும் எளிமையாய் இருந்தார்கள், உடையில் மட்டும் அல்ல நடந்து கொண்ட விதத்திலும். மற்ற விழா போல VIP க்கள் , கலந்து கொண்டவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோரும் ஒன்றுதான் , எல்லோரும் VIP தான் என்பது போல அவ்வளவு எளிமை, எல்லோருக்கும் ஒரே மாதிரியான இருக்கை வரிசை அமைந்து இருந்தது சிறப்பாக மட்டும் இல்லாமல் வித்தியாசமாகவும் இருந்தது.

இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள் என சொல்லப் பட்டது,
1. வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட தன்னலமற்ற தன்னார்வலர்களை அங்கீகரிப்பது.
விழாவில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட  தன்னார்வலர்களை, குழுக்களை அங்கீகரித்தார்கள். சொன்னதைச் செய்தார்கள்!!

2. இதோடு நில்லாமல் அடுத்து என்ன செய்வது? இது போல நிகழாமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என அலசி அதற்கான செயல் திட்டம் வகுப்பது.
விழாவில் சில செயல் திட்டங்கள் வகுக்கப் பட்டது அதன் தொடர்ச்சியாக அடுத்து சில கூட்டங்கள் நடக்க இருப்பதாய்க் கூறினார்கள்.

விவாதிக்கப் பட்ட பல விசியங்களில் சில,
1.வெள்ள நிவாரண பணி கணக்கெடுப்பை நியாமாக நடத்த கண்காணிப்பது, உதவி செய்வது.
2.சென்னையின் அந்த அந்த வார்டுகளை அந்த அந்த மக்களே சிறு குழுக்களாக நிர்வகிப்பது.
3.குப்பை மேலாண்மை, ஆக்கிரமிப்புகள் அகற்றம்,மழை நீர் சேகரிப்பு மையங்கள் பற்றிய விழிப்புணர்வு , செயல்திட்டம்.
4.வாக்காளர் பெயர் சேர்த்தல், ஓட்டளிப்பதை உறுதி படுத்துதல்  மற்றும் விழிப்புணர்வு.
5.லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு/லஞ்சமில்லா சேவைக்கு உதவி.

விழா விருந்தினர்களில்
டாக்டர். ஜெயபிரகாஷ் நாராயன் அவர்கள் முன்னாள் ஐ. ஏ. எஸ் அதிகாரி
(மற்றும்)
திரு. இளங்கோ ரங்கசாமி அவர்கள் விஞ்ஞானி,குத்தம்பாக்கம் கிராம பஞ்சாயத்து தலைவர்

இவ்விருவரின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பும் , இளங்கோ அவர்களிடம் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி விரைவில் அனைவரையும் சென்றடைந்துவிடும் ஆனால் மாற்றம் என்பது நிகழ கொஞ்சம் காலம் தேவைப்படும் ஆனால் நம்மால் முடியும் என்று ஊக்கம் தரும் விதத்தில் ஜெயபிரகாஷ் நாராயன் அவர்களும் , இளைஞர்கள் திறமைசாலிகள் அவர்களுக்கு எங்கள் அலோசனை , வழிகாட்டுதல் என்றும் உண்டு என்று முன் மாதிரி கிராமத்தை உருவாக்கிவரும் , அய்யா அப்துல் கலாம் அவர்களின் நண்பருமான இளங்கோ அவர்கள் பேசினார்கள்.

அய்யா இளங்கோவிடம் உங்கள் ஊருக்கு வந்து உங்களைச் சந்திக்கலாமா என்றும் , உங்கள் முன்மாதிரி கிராமத்தை பார்க்கலாமா என்றும் கேட்டேன். நிச்சியமாக என்றார்!

அதோடு இளங்கோ என்று கூகிளில் தேடுங்கள் நாங்கள் செய்தது பற்றியும், எங்கள் கிராமம் பற்றியும் தகவல் கிடைக்கும் என்றார் மிக எளிமையாக!

விழா நாட்டு வாழ்த்தோடு ஆரம்பித்தது அதுவும் தமிழில்! சென்னை மழைக்கு உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப் பட்டது.

மொத்தத்தில் இது விழா போன்று இல்லை சாதாரண மக்கள் கூடிய ஒரு நிகழ்வாக இருந்தது, நிறைவாய் இருந்தது!

#ChennaiNext

ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் அண்ணாவிற்கு நன்றி!

உங்கள் வாசிப்பிற்கும்;கருத்திற்கும் நன்றி!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s