மூன்று மாதங்கள் கடந்தது, சாப்ட்வேர் வாழ்க்கையின் கனவில் இருந்தவனுக்கு தான் தேர்ந்தெடுக்கப் பட்ட கம்பெனியிடம் இருந்து ஒரு மெயில் வந்தது. அதில் “நாங்கள் உங்களை எங்கள் கம்பெனிக்கு வரவேற்கிறோம். எங்கள் நிறுவனத்திற்குத் தேர்ந்தெடுத்த உங்களைப் போன்ற பணியாளர்கள் ஒவ்வொருவரையும் ட்ரைனிங்கிற்கு கூப்பிட்ட வண்ணம் உள்ளோம். அதன் படி நீங்கள் இன்னும் இருமாதங்களில் ட்ரைனிங்கில் கலந்து கொள்ளலாம். அதற்க்கான அறிவுப்பு விரைவில் உங்களுக்கு அனுப்பப் படும்” என்ற தகவல் இருந்தது.
இதே போன்றதொரு தகவலை 30 பேர் கொண்ட ஒரு குழுவிற்கு அனுப்பி இருந்தார்கள்.அந்தக் குழுவில் கிருத்திகா என்ற பெண்ணும் ஒருவர். மூர்த்தி இந்த மெயில்லை படித்துக் கொண்டிருக்கும் பொழுதே , ஜிமெயில் சாட்டில் ஒரு அழைப்பு வருகிறது.
கிருத்திகா: ஹாய் மூர்த்தி,,,
here கிருத்திகா,,,
(நம்ம ஆளு மனதிலே! கண்ணா லட்டு திங்க ஆசையா?!!)
மூர்த்தி : ஹாய் , கிருத்திகா! மூர்த்தி here
கிருத்திகா: 3 மாதம் கழிச்சு இப்போத்தான் முதல் மெயில் அனுப்பி இருக்காங்க?! எப்ப கூப்டுவாங்கனு ஏதாவது ஐடியா இருக்கா?
மூர்த்தி: ஆமாங்க! ஆனா தெரிலையே, கூப்டுவாங்க பயப்படதீங்க!
(மனதில் : இத வச்சுத்தான் என் கனவு வாழ்க்கையே இருக்கு. நம்மை மாதிரி இந்தப் பொண்ணும் பயப்படுதே!)
கிருத்திகா: இல்லைங்க , எங்க வீட்ல marriage பத்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க இப்டியே லேட் ஆகிட்டே இருந்தது என்றால்!
மூர்த்தி: (என்னது marriage ஆ?!) ஏங்க உங்க ஆளு வைடிங்ஆ marriageக்கு?!
கிருத்திகா: அய்யயோ , லவ்வர் ஆம் இல்லைங்க ,லவ் எனக்கு பிடிக்காதுங்க!!
மூர்த்தி :(அப்படா!!!, ஆளு இல்ல இப்போதைக்கு இது போதும்) ஏங்க ,அப்டி பொதுவா லவ் தப்புன்னு சொல்லிட முடியாதுங்க. நீங்க லவ்வில் விழற மாறி யாரையும் பார்க்கலன்னு சொல்லுங்க!
கிருத்திகா: சரிங்க , அப்பா கூப்பிடறார்! ஏதாவது அப்டேட் என்றால் மெயில் பண்ணுங்க.
மூர்த்தி: சரிங்க, ஆனா நான் மெயில்ல அவ்ளோவ வர மாட்டேன். வேணா என் நம்பர்க்கு மெசேஜ் அனுப்புங்க
9800000021.
கிருத்திகா:offline
மூர்த்தி:ஹ்ம்ம் , offline போய்டுவாங்களே! என்னம்மா?இப்டி பண்றீங்களேமா!!
கம்பெனி கூப்டலையே என்ற கவலையை மறந்து வழக்கத்திற்கு மாறாக மூர்த்தி இன்று மிகவும் சந்தோசமாக இருந்தான். கிருத்திகாவிடம் பேசியது அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
காலிங்,,,,
ஹலோ மூர்த்தி , டேய் எங்கடா ஆளையே காணாம் ! 3 மாசம் ஆச்சே மச்சி மறுமுனையில் கார்த்திக்!
எங்கடா கம்பெனி இன்னும் கூப்டல , கைல காசே இல்ல மச்சி. நீதான் கால் பண்றது.
பிசினஸ் பிஸிடா அதான்.
மச்சி இன்னைக்கு ஒரு பொண்ணுட்ட பேசினேன்டா! கிருத்திகாடா பேரு!
டேய் செம ,போட்டோ அனுப்பு மச்சி அப்புறம்.
மெயில்ல பேசினேன்டா, நயன்தாரா போட்டோதாண்டா இருந்துச்சு.
ஹ்ம்ம், எதுக்கும் முகம் ஒரு டைம் பார்த்துக்கோடா!
சரிடா சரிடா!!
மச்சி , சார்ஜ் இல்லடா இங்க பவர் கட். அடிக்கடி பவர் கட் ஆகுதுடா .அப்புறம் கூப்பிடுடா என்று சொன்னான் மூர்த்தி!
இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்டா!! சரிடா , அப்புறம் கால் பண்றேன் என்று விடை பெற்றான் கார்த்திக்.
மீன்கள் நீந்தும்,காத்திருங்கள்!!
படங்கள்: கூகிள்
முந்தைய பதிவிற்கு
[…] […]
LikeLike