மாற்றம், முன்னேற்றம்,அன்புமணி!

Posted: July 17, 2015 in அரசியல்
Tags: , , , , , ,

தலைப்பை பார்த்தால் எங்கயோ கேள்விப்பட்டதாகத் தெரிகிறதா ? ஆம் , இப்படி ஒரு சுவரொட்டியை நீங்களும் கடந்து சென்று இருக்கலாம்.

உங்கள் அனுமானம் சரி , பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவாக அட்கட்சி எழுப்பி உள்ள புதிய முழக்கம் அது. இதுதான் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் ஒலிக்கப் போகிறது, தப்பில்லை! கோவை பொதுக் கூட்ட மேடைகளில் ராமதாஸ் மற்றும் அன்புமணியின் பேச்சும் அதைத்தான் நமக்குத் தெரிவிக்கின்றன.

அன்புமணி அவர்களின் திறமை , கல்வி மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அவர் முதல்வர் வேட்பாளருக்குத் தகுதியானவர் ஆனால் மாற்றம் தமிழகத்துக்கு மட்டும் அல்ல பாட்டாளி மக்கள் கட்சியிடமும் வேண்டும் என்பதே நமது எதிபார்ப்பு.

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் விகடன் வெளியிட்ட தமிழ்நாட்டின் சிறந்த எதிர்க் கட்சிகள் எது என்பதில் அனைவரும் ஆச்சர்யப் படும் விதத்தில் மற்றக் கட்சிகளைத் தாண்டி  பாட்டாளி மக்கள் கட்சி முன்னிலை பெற்றது. தாயக மற்றும் இலங்கைத் தமிழர்கள் நலன்  என தமிழ் சார்ந்த  அதன் பல நடவடிக்கைகள்  பாராட்டப் பட வேண்டியது. புகையிலை ஒழிப்பு , மது ஒழிப்பு , பசுமைத் தாயகம் என சுற்றுச் சூழலுக்கும் குரல் எழுப்புவது வரவேற்க்கப் பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.மக்கள் தொலைக் காட்சியின் ஒளிபரப்பு கூட மற்ற தொலைக் காட்சிகளோடு வித்தியாசப் படுகிறது.

ஆனால் எல்லாவற்றிக்கும் மேலாக அக்கட்சியின் மீது ஜாதிக் கட்சி என்ற விமர்சனம் தமிழ்நாட்டில் உள்ளது. அதற்குப் பல கடந்த கால உதாரணங்கள்  உள்ளன. அதைப் பற்றிய விமர்சனம் இதில் இல்லை. நான் சொல்ல வரும் விசியம் இதில் இருந்து மாறு பட்டது.

மாற்றம் என்று சொல்லி களத்தில் குதித்து விட்ட பாட்டாளி மக்கள் கட்சியிடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பதும் மாற்றம்தான். அந்த மாற்றம் அதன் ஜாதிய சிந்தனை! ஆம்  தமிழ் நாட்டின் மாற்றமும் முனேற்றமும் இதில் தான் அடங்கி உள்ளது. உரத்த சிந்தனை , எதிர் காலத் திட்டம் , அதைச் செயல் படுத்தக் கூடிய இளைஞர்கள் உள்ள ஒரு கட்சி ஜாதி என்ற ஒரு சிறு வட்டத்துக்குள் சிக்கி  விடக் கூடாது.

இதில் இருந்து அக்கட்சி மாறத்  தயாராகிவிட்டால் , அக்கட்சியைக்  கோட்டையில் கொடி ஏற்றி வைக்க மக்களும் தயாராக இருக்கிறார்கள்!

நாங்க ரெடி , நீங்க ரெடியா?!

படங்கள்: கூகிள் .தமிழ் ஹிந்து
நன்றி:வாட்ஸ் அப் நண்பர் ( படம் தந்து உதவியதற்கு!)

Advertisements

உங்கள் வாசிப்பிற்கும்;கருத்திற்கும் நன்றி!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s