சதி-சாதி-சா”தீ”

ஜாதி எப்படி வந்திருக்கும்:

ஜாதி இது இல்லாமல் இந்தியாவில் எதுவும் இல்லை என்ற நிலை! என்றோ , யாரோ ஒரு சிலரால் ஒரு சில நோக்கத்தால் உருவாக்கப் பட்டு , காலம் காலமாக வளர்த்தெடுக்கப் படுகிறது ! அனைவரும் தங்களை ஆண்டவர்கள் என்றே சொல்லிக் கொள்கிறார்கள்! ஜாதிய அடிப்படையிலான பிரச்சனைகள், கவுரவக் கொலைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. எல்லோருக்கும் இருக்கும் சர்க்கரை நோய் போல ஜாதி என்பது ஒரு வித மன நோயாக இருக்க வேண்டும்!

ஜாதி என்றால் என்ன ?

இதோ விக்கிபிடியா தரும் விளக்கம்:

சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு ஆகும். இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப்பிரிவினையே. இது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே இதனை வெளியேற வழியற்று அடைபட்ட வகுப்பு என்று கூறலாம். இது சமூக வழக்கு, அதிலிருந்து தோன்றிய அரசுகள் போன்றவற்றால் பாதுகாக்கப்டுகிறது.

கேள்விகள்:

ஒரு மனிதனின் அடிப்படை என்பது உண்ண உணவு , உடுத்த உடை, இருக்க இடம் மட்டுமே ஜாதி அல்ல!

வேலைப் பிரிவினைதான் ஜாதி உருவாக காரணம் என்றால் , இவ்வளவு காலமாக வேலைகள் புதிது புதிதாக முளைத்துள்ளன! ஜாதி மட்டும் ஏன் அடிப்படையில் அப்படியே உள்ளது?

ஜாதியை ஏன் பாதுகாக்க வேண்டும்?

இப்பொழுது கூட ஜாதி பார்க்கப் படுகிறதா?

இப்பொழுதெல்லாம் யாருங்க ஜாதி பார்க்கிறார்கள்? என்று பரவலாக பேசுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.ஆனால் இந்தியாவில் இருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது தொடக்கத்திலோ அல்லது சந்திப்பு முடியும் பொழுதோ என்ன  ஜாதி என்ற கேள்வி கேட்கப் படாமல் இருப்பதில்லை. நீ என்ன ஜாதி என்று கேட்பதற்கு அவர்கள் தயங்குவதில்லை.ஒரு வகையில் அதுவும் ஒருவித போதை ! அது டாஸ்க்மாக் போதையை விட கொடியது.ஆம் டாஸ்மாக் போதையாவது குடுபத்தை அழிக்கும்.ஜாதிய போதையோ சமுதாயத்தை ஏன் இனத்தையே அழித்துவிடும்!

கல்வியும் , ஜாதியும்:

இன்றைய கல்வி என்பது அன்றைய கல்வியின் சிறு மாற்றம்தான். பல கல்விக் கூடங்களும் ,கல்வி கற்றுத் தருபவர்களில் சிலரும் இங்கே ஜாதிய அடையாளத்தோடு இருக்கும் பொழுது , கல்வி மட்டும் எப்படி சாதியப் பாகுபாட்டை மாற்றி விடப் போகிறது?

மேலும் தொடர்கிறேன்! காத்திருக்கவும்!!

நன்றி: விக்கிபீடியா மற்றும் கூகிள்

Comments
  1. rajjeba says:

    தொடர்ந்து உங்கள் கருத்துகளை எழுதுங்கள். வாழ்த்துகள்

    Liked by 1 person

  2. pradheep360 says:

    உங்கள் ஆதரவே இந்த எழுத்து! நன்றி!

    Like

  3. பழங்குடி says:

    இன்று சாதி குடும்ப பெயர் என்று வெளிநாட்டு மக்களிடையே அறிமுக செய்து வைக்கபடுகிறது….தமிழகத்தில் பெரியார் அவரின் முயற்ச்சியால் பெயருக்கு பின்னால் சாதி அடையாளத்தை நீக்கம் செய்துள்ளனர்…இன்று இந்துத்துவா சாதிய இறுக்கத்தை அதிகரிக்கவும் உயிர்பிக்கவும் செய்கிறது…முற்போக்கு சமூகம் பெரியாரை அம்பேத்கரை வாசிக்கவும் அறிந்து கொள்வது மூலம் சாதியை புறம் தள்ளலாம்..

    Liked by 1 person

  4. பழங்குடி says:

    இன்று சாதி குடும்ப பெயர் என்று வெளிநாட்டு மக்களிடையே அறிமுக செய்து வைக்கபடுகிறது….தமிழகத்தில் பெரியார் அவரின் முயற்ச்சியால் பெயருக்கு பின்னால் சாதி அடையாளத்தை நீக்கம் செய்துள்ளனர்…இன்று இந்துத்துவா சாதிய இறுக்கத்தை அதிகரிக்கவும் உயிர்பிக்கவும் செய்கிறது…முற்போக்கு சமூகம் பெரியாரை அம்பேத்கரை வாசிக்கவும் அறிந்து கொள்வது மூலம் சாதியை புறம் தள்ளலாம்.. உங்கள் எழுத்து தொடர வாழ்த்துகள்

    Liked by 1 person

  5. dinakarang7 says:

    நண்பர் ஒருவரிடம் சாதி விட்டு சாதி மாற்றி திருமணம் செய்தால் அவர்களின் சடங்கு முறைகள் மாரிவிடுதாக சொல்கிறார்கள் இதுவும் ஒரு காரணம். அருமையான தொடக்கம் பிரதீப் மென்மேலும் எழுதுங்கள்

    Liked by 1 person

  6. […] சதி-சாதி-சா”தீ”!?!!#1 […]

    Like

Leave a reply to rajjeba Cancel reply