நேற்று வழக்கம் போல வண்டியில் ஆபீஸ் போய்க்கொண்டு இருந்தேன். வண்டி வேல் டெக் கல்லூரி அருகே செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக அது நடந்து விட்டது. ஆமாம் யாரோ வண்டியை பின்னாடி இழுப்பது போலவும் , வண்டி மேற்கொண்டு செல்ல தயங்குவது போலவும் தோன்றியது. என்ன ஆச்சு என்று உடனே ஓரமாக நிறுத்திப் பார்த்தால்!! புஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ்,,ஜுராசிக் பார்க் படத்தில் வரும் சத்தம் கேட்டது,!பிறகுதான் தெரிந்தது சத்தத்திற்க்கான காரணம்! டயர் பஞ்சர்!! பெட்ரோல் இல்லாமல் நின்று இறந்தால் கூட வேற வண்டியோடு தொத்திக் கொண்டு சிறிது தூரம் செல்லலாம் ஆனால் பஞ்சர் என்றால் ?! கஷ்டம்தான்! என்ன செய்வது என்று தெரியாமல் அக்கம் பக்கம் பார்த்தேன் , எல்லோரும் வேகமாக சென்று கொண்டிருந்தார்கள் .அங்கே தாகத்துக்கு பஞ்சர் போட ஜூஸ் கடை மட்டும்தான் இருந்தது, கொஞ்சம் தூரம் பார்த்தால் அங்கே வாழ்க்கையை பஞ்சர் ஆக்கும் டாஸ்மாக் மட்டுமே இருந்தது. சரி நம் நேரம் என நொந்து கொண்டு , சிறிது தூரம் வரை தள்ளிக் கொண்டுசென்றேன். என்னிடம் எந்த டூ வீலர் பஞ்சர் ஒட்டும் ஆட்களின் மொபைல் நம்பர் இல்லை. சிறிது தூரம் தள்ளியதும் ஓர் இடத்தில் பஞ்சர் ஒட்டணுமா தொடர்பு கொள்க என நம்பர் ஒன்று எழுதப் பட்டு இருந்தது. இப்பத்தான் காலையிலும் எரியும் ஸ்ட்ரீட் லைட் போல முகம் பளிச்சென மின்னியது. நல்ல வேலை மொபைல்ல சார்ஜ் இருந்தது ,அப்படா என பெருமூச்சு விட்டு அந்த நம்பர்க்கு அழைத்தால் “அங்க வர இப்ப ஆட்கள் இல்லை சார்” என்று சொல்லிவிட்டான்! இப்பொழுது திடீரென பவர் கட் ஆனது போல ஆகிவிட்டது முகம்! என்ன செய்வது ?என்னிடம் வேறு நம்பர் இல்லை !நொந்து கொண்டு ஒரு 15 நிமிடம் தள்ளிக் கொண்டு கீழ்கட்டளை-கோவிலம்பாக்கம்-வேளச்சேரி-கிரோம்பேட் 4 வழிச் சந்திப்பில் ஒரு பஞ்சர் கடை இருந்தது. பஞ்சர் கடையப் பார்த்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்! காத்திருந்து காதலி கிடைத்ததைப் போல அவ்வளவு மகிழ்ச்சி! ஒரு வழியாக பஞ்சர் ஒட்டி முடித்தாயிற்று. அதோடு நில்லாமல் , அந்த டூ வீலர் மெக்கானிக்கலிடம் இதே வழித்தடத்தில் பஞ்சர் ஆனால் கூப்பிட்டால் வந்து ஒட்டித் தருவீர்களா என்று கேட்டேன் . தருவோம் சார் , ஆனால் டபுள் சார்ஜ் என்றார். பஞ்சர் ஒட்ட 70 ரூபாய் , இந்த மாதிரி இடையில் வந்து வழித்தடத்தில் பஞ்சர் ஒட்டினால் எக்ஸ்ட்ரா 80 ரூபாய் . ஆட்டோ மீட்டரை விட அவர் ஒண்ணும் அதிகம் கேட்கவில்லை எனத் தெரிந்தது!! அவர் மொபைல் நம்பரைக் குறித்துக் கொண்டேன்! இதன் மூலம் நம் மொபைலில் இந்த மாதிரி டூ வீலர் பஞ்சர் ஒட்டுபவர்களின் நம்பர் சில இருப்பது அவசியம் எனத் தெரிந்து கொண்டேன் .அதோடு இல்லாமல் நாம் வழக்கமாக செல்லும் சாலையில் எங்கு எங்கு பெட்ரோல் பங்க் இருக்கு , டூ வீலர் பஞ்சர் கடை எங்கு இருக்கு என்பது தெரிந்து வைத்திருக்க வேண்டும். எவ்வளவோ பன்றோம்! இதைப் பண்ண மாட்டோமா ?! வேல் டெக் காலேஜ் முதல் கீழ்கட்டளை போற சிக்னல் அல்லது காமாட்சி ஹாஸ்பிட்டல் போற வழி வரை ஒரு வேளை உங்கள் வண்டி பஞ்சர் ஆனால் இவர்களைத் தொடர்பு கொள்ளவும் , 9566156262 9677245997-விஷ்ணு டூ வீலர்
பஞ்சர் தந்த பாடம்
Posted: June 25, 2015 in நடந்ததெல்லாம் உண்மைTags: #PradheepScribbles, keelkattalaisignal, pradheep360kirukkal, puncher, twowheeler, twowheelerpuncher, twowheelershopmobilenumber, unmainikalvu, veltechcollege, veltechtokamatchihospitalroute
Comments
சிறந்த தகவல், ஆங்கில வார்த்தைகளை தங்லீசில் எழுதாமல் அதற்குரிய தமிழ் வார்த்தையை பயன்படுத்தலாம்.
LikeLiked by 1 person
நன்றி. கண்டிப்பாக!
LikeLike
நாம் சுற்றுலா இதர பயணங்கள் வாகனம் மூலம் வெளியே சசெல்லும்போ அந்த வழிகளில் பார்க்கும் பழுது நீக்குபவர் தொலைபேசி எண்களை தொலைபேசியில் குறிதுகொல்லுங்கள்மே
LikeLiked by 1 person
gud message pradheep……..every one should follow this
LikeLiked by 1 person
Hmm…OK nanba
LikeLike
பயனுள்ள பதிவு நன்றி சகோ
LikeLiked by 1 person